யோகி அரசின் வன்முறை வெறியாட்டம்? உபியின் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று உபி போலீசாரால் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகிறது. வீடியோ ஆதாரங்களை பார்க்கவும், பத்திரைகைகள் வெளியிடும் தரவுகளையும் படிக்கும் போதும் மனம் பதறுகிறது. டிசம்பர் 20 , அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவினை எதிர்த்து முஸ்லிம்கள் கூட்டமாக காந்தி சிலை முன்பு குழுமினர். அங்கிருந்து மக்களின் அணிவகுப்பு தொடர்ந்தது அதனை தடுத்து […]
CAA
நாடு தழுவிய என்ஆர்சி என்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போன்றது!
பணமதிப்பிழப்பு எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதோ அதேபோன்றுதான் குடியுரிமை திருத்த சட்டமும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது பணமதிப்பிழப்பின் போது கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் மோடி எதிர்ப்பாளர்கள் மட்டும் தான் கஷ்டப்படுவார்கள் என்றும் சித்தரிக்கப்பட்டது, மேலும் ஏடிஎம் க்யூவில் நின்று தேசப்பற்றை நிரூபிக்க சொல்லி அதனை கொண்டாடினார்கள், இறுதியில் அனைவரும் பாதிக்கப்பட்டோம். அது தவறு என்று உணரும் தருவாயில் அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கிறோம்.. குடியுரிமை மசோதாவும் […]
நாடு முழுக்க என்ஆர்சி? எவ்வளவு செலவாகும்? இது சாத்தியமா?
அசாமில் NRC நடத்தப்பட்டது. அசாமில் ஜனத்தொகை 3.30 கோடி. இது இந்தியாவின் ஜனத்தொகையில் 2.4% மட்டுமே. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) இறுதிப்பட்டியல் வெளியான போது, இந்தப் பட்டியலில் 3.11 கோடி பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.30 கோடி. இதனால், மீதமுள்ள சுமார் 19 லட்சம் பேரின் இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த 19 லட்சம் பேரும் இனி நீதிமன்றம் சென்று தக்க ஆவணங்கள் கொடுத்து […]
‘IAS லட்சியத்துடன் இருந்த 20வயதேயான எனது மகனை சுட்டு கொன்றுவிட்டனர்-‘ சுலைமானின் தாய் வேதனை !
உபி மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் வெள்ளியன்று போலீசாரால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் இருபது வயதே நிறைந்த இருவரை போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 131 பேரை கைது செய்துள்ளது யோகி தலைமையிலான உபி போலீஸ். 21 வயதான அனஸ் மற்றும் 20 வயதேயான முகமது சுலைமான் இருவரையும் தான் வீடுபுகுந்து கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதுபற்றி கூறிய பிஜ்னோர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் தியாகி கூறியபொழுது 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதில் 70 பேர் […]
‘யாருக்கு வேண்டும் உங்கள் குடியுரிமை ஆஃப்பர்’ – பாகிஸ்தானி இந்துக்கள் பதிலடி !
எங்களுக்கு இந்திய அரசு அளிக்கும் குடியுரிமை வேண்டாம் என மோடி – அமித் அளித்த அற்புத ஆஃபரை நிராகரித்த பாகிஸ்தான் இந்து கவுன்சில்கள். மோடி இந்திய இந்துக்களுக்கு மட்டுமல்லாது உலகில் வாழும் மற்ற இந்துக்களுக்கும் ஆபத்தானவர் என சாடல். இந்தியாவில் பரம்பரையாக வாழும் இஸ்லாமியர்களை அகதிகளாக்கிவிட்டு எங்களுக்கு குடியுரிமை அளிப்பதாக கூறுவது சனாதன தர்மத்திற்கே எதிரானது . இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். சாதியாலும் மதத்திலும் பாகுபாடு பார்த்து மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டுவது இந்துத்துவ சனாதன […]
பிரித்தாளும் சூழ்ச்சி காலங்காலமாக புளித்துப்போன ஒரு விசயம் – நடிகர் ராஜ் கிரண்
மத அடிப்படையிலான குடியுரிமை குறித்து கவிதை நடையில் நடிகர் ராஜ்கிரண் கருத்து தெரிவித்துள்ளார் .. நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள்… பிரித்தாளும் சூழ்ச்சி என்பது,காலங்காலமாகபுளித்துப்போன விசயம்… இஸ்லாமியர்கள்,அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான்அவர்களது நாடு என்பது போலவும்,பாமர மக்களின் மனங்களில்பிரிவினையை உண்டாக்குவதற்கான,நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாகவிதைத்து வந்தனர், வருகின்றனர்… இந்த பொய்ப்பிரச்சாரங்கள்ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது…சத்தியத்தை யாராலும் புதைத்து விடமுடியாது… இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும்இந்துக்களின் இரத்த சொந்தங்கள்… இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற,இன்ன பிற கொடுமைகளால்,அந்த வாழ்க்கை முறையிலிருந்து […]
‘குடியுரிமை திருத்த சட்டம் வேறு என்ஆர்சி வேறு ப்ரோ’ என்பவர்களுக்கு மட்டும் ..
‘CAA வேறு NRC வேறு ப்ரோ. இதை இரண்டையும் இணைப்பது தவறு. அப்படி செய்ய முனையும் சிலர் கற்பனையான கதைகளை சொல்லி உங்களை பயமுறுத்துகிறார்கள்.’
NRC யின் எங்கள் பயணம்.. மத குடியுரிமையை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்?
இந்த வருடத்தின் தொடக்கத்தில் மிகச்சரியாக ஜீன் 6 , அன்று என் அம்மா என்னை தொலைப்பேசியில் அழைத்து, நீயும் உன் சகோதரனும் நானும், என்ஆர்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளோம். உடனடியாக நாகோன் நகருக்கு புறப்பட்டுப்போய் நாம் நமது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமாம் என்றார் பதட்டமாக. அம்மா, இது பல வருடங்களாக நடக்கிறது, விடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றேன், அதற்கு அவர், இல்லை ஷாவோன் , அடுத்த நடவடிக்கை கைது தானாம், எனவே உடனடியாக புறப்படு என்றார்கள். நானும் டில்லியில் இருந்து […]
குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மற்றும் என்ஆர்சி எளிய வார்த்தைகளில்..
‘CAB என்பது வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக உள்ளே நுழையும் வந்தேறிகளுக்குத்தானே பொருந்தும், நீ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் சட்டவிரோத குடியேற்றத்தை நீ ஆதரிக்கிறாய் என்று அர்த்தமா? ஒன்று, இந்த சட்டம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்களுக்கு மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது; இரண்டு, இது இஸ்லாமிய நாட்டு ஒடுக்குமுறைகளை மட்டும் பேசுகிறது; இதர நாட்டு ஒடுக்குமுறைகள் பற்றி கவலை கொள்வதில்லை. மூன்று, அரசே மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது இந்தியாவின் செக்யூலர் அரசியல் சாசனத்துக்கு எதிரானது; நான்காவது, இது இந்திய […]
யோகேந்திர யாதவ், ஜதின் தேசாய் தலைமையில் மத குடியுரிமைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் !
மத அடிப்படையில் பாகுபாடு காட்டும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டிசம்பர், 19 அன்று நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர் முஸ்லிம் இன்டலக்ச்சுவல் ஃபோரம் அமைப்பினர். இதில் சமூக ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ், ஜதின் தேசாய் மற்றும் திருமதி.மேதா பட்கர் ஆகியோர் தலைமையேற்று நடத்தவுள்ளனர். டெல்லி,மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மாநகரங்களிலுள்ள முஸ்லிம் இன்டலக்ச்சுவல் ஃபோரம் அமைப்பினர் சார்பாக இதில் அனைவரும் பங்கேற்கின்றனர் . இந்த போராட்டித்திற்கான தினமான டிசம்பர், 19 அன்று தான் சுதந்திர போராட்ட […]
புதிய குடியுரிமை மசோதா ‘பாரபட்சமாக’ உள்ளது: ஐநா கடும் விமர்சனம் !
பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் , பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் தான் நாங்கள் இந்த (சிஎபி) சட்டத்தை இயற்றியுள்ளோம் என்று பிரதமர் மோதி கூறியுள்ள நிலையில், பாஜக அரசின் மத அடிப்படையிலான குடியுரிமை வழங்கும் மசோதா சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகியுளளது. முஸ்லிம்களை மட்டும் வேறுபடுத்தும் விதத்திலான இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டமானது “அடிப்படையிலயே பாரபட்சமாக உள்ளது” என்று ஐநா மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்ததுடன், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]
அஸ்ஸாமை தொடர்ந்து மேற்கு வங்கம் – மத குறயுரிமைக்கு எதிராக எழுச்சி போராட்டம் !
அஸாம் மாநிலத்தை தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்திலும் நிலைமை மிக தீவிரமடைந்து வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து பொதுமக்கள் செய்த போராட்டத்தில் பொதுசொத்துகளுக்கு பங்கம் விளைவித்ததாக கூறி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை அங்கே மூவர் மரணமடைந்துள்ளனர். 12 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் இராணுத்தின் 26 பட்டாலியன் குழு அங்கே முகாமிட்டுள்ளது. இணையதள பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து மக்கள் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்த ஒவ்வொரு பாஜக எம்எல்ஏ மற்றும் எம்பிக்களின் வீட்டின் மூன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களை […]
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து ஐபிஎஸ் அபதுல் ரஹ்மான் ராஜினாமா!
காஷ்மீரில் மக்களின் உரிமையை பறித்தமைக்கு எதிராக ஐ.ஏ.எஸ் கண்ணன் கோபிநாதன் தனது பதிவியை ராஜினாமா செய்தார். அதே போல் முன் எப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன என்று தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.சசிகாந்த் செந்திலும் தனது பதிவியை ராஜினாமா செய்தார். இந்த வரிசையில் தற்போது மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் பாஜக வின் மத அடிப்படையிலான குறியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது […]
ஹிந்து ராஷ்டிர சட்ட திருத்தம்! – ஸ்ரீதர் சுப்ரமணியம்.
குடியுரிமை (திருத்த) மசோதாவில் என்னதான் பிரச்சினை என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. ஹிந்துத்துவர்கள் இந்த சட்டத் திருத்தத்தை ஆவேசமாக ஆதரித்து, பல்வேறு லாஜிக்குகளை பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். ‘பல்வேறு லாஜிக்குகள்’ என்பதுதான் சரியான பதம். ஏனெனில் ஒரே ஒரு லாஜிக் என்பது அதில் கிடையாது. பல்வேறு வகைகளில் வாதிட்டு மட்டுமே இதனை ஒப்பேற்ற வேண்டும். நேரடியாக ஒரே வாதத்தில் அவர்கள் கேட்பதானால், ‘ஆமாம், இது இந்து ராஷ்டிரம்தான். அதைத்தான் நாங்கள் நிறுவ முயற்சிக்கிறோம். இப்போது என்ன […]
அமித்ஷா மீது நடவடிக்கை – அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திர ஆணையம் எச்சரிக்கை!
குடியுரிமை சட்ட திருத்த மசோத இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டால் அமித்சா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திர ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத இதர மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. […]