Article 370 Kashmir

காஷ்மீரில் பிபிசி பேட்டியின் சமயத்தில் மருத்துவரை கைது செய்த போலீஸ்!-Viral Video

உறங்கி கொண்டிருக்கும் இந்திய ஊடகங்கள்!

Article 370 DMK Kashmir

காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனே விடுவிக்ககோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 கடந்த ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த அவர்களின் உரிமையான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் காஷ்மீரில் கடும் ஊரடங்கு உத்தரவு,  தொலைபேசி , இன்டர்நெட் முடக்கம் என எந்த கட்டுப்பாடுகளும்  நீக்கப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் மட்டுமே தொலைபேசி வேலை செய்கிறது. பல்வேறு ஜனநாயக படுகொலைகள் நடந்து வரும் காலத்தில் காங்கிரஸ்,  போன்ற மூத்த கட்சிகளே […]

kavita kashmir
Article 370 Kashmir

‘பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள்’ மீதே வழக்கு பதிவு ! அதை தவிர்க்க மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கும் கொடூரம்! -காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.

இறுதி பாகம் .. உங்களின் இந்த உண்மை கண்டறியும் பணியில் .. காஷ்மீர் மக்கள் எப்படி நடந்து கொண்டனர்?  எங்களுக்கு மிகவும் அன்பான ஒரு வரவேற்பு கிடைத்தது அவர்கள் எங்களிடம் எந்த அளவிற்கு அன்பையும் விருந்தோம்பலும் காட்டினார்கள் என்று வார்த்தையில் வர்ணிக்க முடியாது. இது எங்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது. இந்தியா மற்றும் இந்தியர்களிடம் கோவமாக இருக்க அனைத்து உரிமையும் படைத்தவர்கள் இப்படிப்பட்ட மோசமான நிலையில் யாரை புதிதாக கண்டாலும் சந்தேகிப்பது இயற்கைதான். அதனால் முதலில் […]

Article 370 Kashmir

காஷ்மீர்! – ‘பெருநாள் தினத்தில் கூட புத்தாடை இல்லாமல் சிறுவர்கள்’-காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.. பாகம் -2

பாகம் 1 ஐ வாசிக்க .. கீழே உள்ளது பாகம் 1 ன் தொடர்ச்சி … சற்று விரிவாக சொல்ல முடியுமா ? இரண்டு விஷயங்களை சொல்கிறேன். . ஒரு வீடியோ 11 வயது சிறுவனுடையது. கைது செய்யப்பட்டிருந்த அவர் பெருநாளிற்கு ஒரு நாள் முன்பு தான் விடுவிக்கப்பட்டார். அச்சிறுவன் தன்னை விட சிரியவர்களை கூட அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார். மற்றொன்று… ஒரு காஷ்மீரி குடும்பத்தை கொண்ட வீடியோ. அவர்கள் மிகுந்த அச்சத்தில் […]

Article 370 Kashmir

காஷ்மீர்-‘நள்ளிரவில் சிறுவர்கள் கைது’! -‘மானபங்க படுத்தபடும் பெண்கள்’-காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.

தமிழகத்தை சேர்ந்த சிபிஐ கட்சியின் சமூக பெண் ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், பிரபல பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ் மற்றும் எய்ட்வாவின் (AIDWA ) மைமூனா மொல்லா ஆகியோர் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை அரசாங்கம் ரத்து செய்து மாநிலத்தை பிளவுபடுத்திய பின்னர் காஷ்மீரின் உண்மை நிலவரம் கண்டறிய கடந்த ஆகஸ்ட் 7 முதல் 13 வரை5 நாட்களுக்கு காஷ்மீரில் முகாமிட்டிருந்தனர். கீழுள்ள ஆக்கம் பிரபல ஆங்கில நாளிதழான ஹஃ ப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியானது.கீழுள்ள செய்தி […]

Britain kashmir protest
Article 370 Kashmir

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பிரிட்டனில் நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன போராட்டம்!

லியாம் பர்ன் , பிரிட்டன் ( *எம்.பி*) கலந்து கொண்டு நடத்திய போராட்டத்தில் ஆயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிர்த்து குரல் எழுப்பினர். காஷ்மீர் மக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , ஊரடங்கு உத்தரவை தளர்த்தவும் கோரிக்கை விடுத்தனர். வீடியோவை YouTube ல் காண..

bbc kashmir
Article 370 Kashmir

பிபிசியின் காஷ்மீர் மக்கள் போராட்ட வீடியோவை முதலில் பொய் என மறுத்து , பிறகு ஒப்பு கொண்ட மோடி அரசாங்கம்!

Image credit-BBC மோடி அரசாங்கம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. எனினும் அங்குள்ள மக்கள்  இதுகுறித்து எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிய ஒரு வழியும் இல்லாதபடி அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் முற்றிலுமாக  மோடி அரசாங்கம் தடை விதித்துள்ளது.  மக்கள் தங்கள் எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக தெரிவிப்பதற்கோ, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கோ,  ஏன் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவதற்கோ கூட இயலாத ஒரு மிகப்பெரும் சிறைச்சாலையில் அடைபட்ட கைதிகளைப் போன்று உள்ளனர் […]

Article 370 Kashmir

காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுத்த விஜய் சேதுபதி !

இந்திய திரைப்படவிழா ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில்மக்கள் செல்வன் விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரிலேயேவிற்கு சென்றார் விஜய். அப்போது ஆஸ்திரேலியாவின் தமிழ் வானொலி ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகர் விஜய்சேதுபதி, காஷ்மீர் விஷயம் குறித்து கேள்விக்கு பதிலளித்தார். அப்போது “ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. பெரியார் அன்றைக்கே சொல்லிவிட்டார். காஷ்மீரின் பிரச்னைகளுக்கு […]

Fake news
Article 370 Fake News Kashmir

பொய் செய்திகளை வெளியிட்ட தினமலர் ஊடகம்!

தமிழகத்தில் மிக பிரபலமான மற்றும் நீண்ட காலமாக பத்திரிக்கை ஊடகத் துறையில் இருந்து வரும் தினமலர் நேற்று ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் தொடர்ந்து மோடி அரசாங்கத்திற்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை விதைத்து வருவது வாடிக்கை ஆகி வருகிறது.இவ்வாறு நடப்பது தமிழ் ஊடகங்களில் சற்று குறைவு என்றாலும் வட இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மோடி அரசாங்கத்திற்கு சார்பாக செய்திகள் வெளியிடுகின்றன என்ற குற்றச்சாட்டு மிகவும் அதிகமான அளவில் உள்ளதால் நெட்டிசன்கள் “கோதி மீடியா(Godi Media)” என்று […]

Article 370 Fake News Kashmir

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்.!

பொய்களும், அரைகுறை உண்மைகளும் வேகமாகக் கவனம் பெற்றுவிடுவதன் அடையாளமே கீழ்கண்ட படம். இதனை ஆங்கிலத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சியான இந்தியா டுடே எந்த ஆய்வும் செய்யாமல் வெளியிட அதனை சில தமிழ் ஊடகங்கள் செவ்வனே மொழியாக்கம் செய்து வெளியிட்டன. ஏன் இந்தப் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு தகவல்கள் தவறானவை அல்லது அரைகுறையானவை என அறிவோம். (I) காஷ்மீருக்கு என்று இரட்டைக் குடியுரிமை எல்லாம் இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சிறப்புக் குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்தியா […]

pellet gun injuries kashmiris
Article 370 Kashmir Pellet Gun Injury

பெல்லட் குண்டுகளால் துளைக்கபடும் காஷ்மீரிகள்!

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கியதிலிருந்து இதுவரை (மூன்று நாட்களில்) மொத்தம் 21 சிறுவர்கள்/ ஆண்கள் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட நிலையில் ஸ்ரீநகரின் பிரதான மருத்துவமனையில் (SMHS) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரபல ஆங்கில ஊடகமான தி வயர் உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனையின் முக்கிய பொறுப்பாளர்கள் மீடியாவிற்கு எந்த விதமான தகவல்களையும் கொடுக்க மறுத்தாலும் மருத்துவமனையில் உள்ள ஒரு சில மருத்துவர்களும் செவிலியர்களும் கொடுத்த தகவலின்படி ஆகஸ்ட் 6 ஆம் தேதி13 நபர்கள் […]

kashmir
Article 370 Kashmir Pellet Gun Injury

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு!

பாலத்தின் இரு புறத்திலும் சி.ஆர்.பி.எஃ ப் படையினரால் துரத்தப்பட்டதில் நதியில் குதித்து மரணமடைந்த 17 வயது காஷ்மீர் சிறுவன். கடந்த திங்களன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மக்களவையில் அறிவித்தார். அறிவிப்பதற்கு முன்பாகவே கஷ்மீரில் 144 தடை உத்தரவு, மேலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மக்கள் பெரும் அச்சத்திலும் மூழ்கியிருந்தனர். இந்த நாளில் தான் 17 வயது சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமித்ஷா அறிவிப்பை […]

samjotha express
Article 370 Kashmir Pakistan

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியதால் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது !

1976 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் லாஹூர் -தில்லி மத்தியிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவையை பாக்கிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தி உள்ளது – பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேய்க் ரஷீத் அறிவிப்பு இந்திய அரசு காஷ்மீர் மக்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஜனநாயக விரோதமாக நீக்கிவிட்டதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக முறிவு அறிவிப்பை வெளியிட்டது. அதற்க்கு அடுத்தபடியாக புதன்கிழமையன்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரான ஷேய்க் ரஷீத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]