தவறான தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக., வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய விரும்புகிறேன் – இறப்பதற்கு முன்பு தனது கல்லூரி நண்பரிடம் மனமுடைந்து பேசிய நீதிபதி லோயா! நவம்பர் 27ம் தேதி அன்று லாத்தூர் பார் கவுன்சில் உறுப்பினர்கள் லாத்துர் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டு லாத்துர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஒரு பேரணியை நடத்தியிருக்கின்றனர். அவர்கள் நீதிபதி லோயா வின் மரணத்தில் முறையான நீதி விசாரணை கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்றை […]
Amit Shah
“இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்!”- அமித்ஷா
இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமித்ஷா, “இந்தி நாளான (திவாஸ்) இன்று, நமது நாட்டின் அனைத்து குடிமக்களும் நமது தாய் மொழியை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். காந்தி, இறும்பு மனிதர் சர்தார் படேலின் கனவுகளான ஒரே நாடு, ஒரே மொழி என்ற கனவுக்கு இந்தியைப் பயன்படுத்தவோம். என்று தெரிவித்துள்ளார்.
மோடியும் அமித் ஷா வும் கிருஷ்ணர், அர்ஜுனனை போன்றவர்கள்-ரஜினி கருத்து!
துணை ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு அவர்களின் இரண்டு ஆண்டு அலுவலக அனுபவத்தை குறித்த புத்தககம் வெளியிடும் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், “மிஷன் காஷ்மீரை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு அமித் ஷா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”. என்று கூறினர். மேலும் மோடி அமித்ஷா இருவரும் கிருஷ்ண பரமாத்மா மற்றும் அர்ஜுனனை போன்றவர்கள் என்றும் ஆனால் இதில் யார் கிருஷ்ணர் யார் அர்ஜுனர் என்பது எனக்கு தெரியாது என்று திரு ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்தார். […]
‘அமித்ஷா பொய் பேசுகிறார்’.. நான் வீட்டுக் காவலில் அடைக்கபட்டுள்ளேன்: ஃபரூக் அப்துல்லா
மக்களவையில் பாஜக சட்டப்பிரிவு 370 ஐ நீக்கம் செய்வதாக அறிவித்தது. அப்போது பேசிய , அமித்ஷா பேசும் போது, ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவோ, வீட்டுக்காவலில் வைக்கப்படவோ இல்லை என்று கூறினர். இதுகுறித்து என்டிடிவி-க்கு மூத்த அரசியல் தலைவரும் , முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா அளித்த பேட்டியில், நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். உள்துறை அமைச்சர் இதுபோன்று பொய் பேசுவது வருத்தம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். “காஷ்மீரே பற்றி எரிந்து கொண்டிருக்க, என் மக்கள் சிறைச்சாலைகளில் […]