Just In

70 வரிவிலக்கு விதிகள் நீக்கம், தனிநபர் வருமான வரி விதிப்பிலும் மாற்றம் ..

இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில் ஏற்கனவே அமலில் இருந்த 70 வரிவிலக்கு விதிகளை நீக்கம் செய்துவிட்டு புதிய எளிமைப்படுத்தப்பட்ட தனிநபர் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் – ரூ. 7.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி 20% இல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ. 7.5 லட்சம் – 10 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு, வருமான வரி 20% இல் இருந்து 10% வரை ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்குரூ. 10 லட்சம் – ரூ. 12.5 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு, வருமான வரி 30% இல் இருந்து 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ. 15 லட்சதிற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு ஏற்கனவே உள்ள வருமான வரி சதவிகிதமே தொடரப்படும்.

 ரூ. 5 லட்சத்திற்கும் கீழ் சம்பாதிப்பவர்களுக்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள இந்த புதிய தனிநபர் வருமான வரிச் சலுகைகள் அனைத்துமே நாம் தேர்வு செய்தால் தான் நம் மீது அமலாகும். பல்வேறு விதமான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு, இதனால் பலன் கிடைக்கப் போவது இல்லை. வருமான வரியில் சலுகை என்ற அறிவிப்பு மட்டும் ஊடகங்களில் பெரிது படுத்த படுமே தவிர, உள்ளே உள்ள இந்த விஷயம் பரவலாக தெரியாமல் போகும்.