ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் வைத்து அமைதி பேரணி நடத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜை ஆர்.எஸ்.எஸ். தரப்பு அணுகியுள்ளது.புதுக்கோட்டையின் நிலவரத்தை முழுவதும் அறிந்து வைத்துள்ள காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வராஜ் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளார். இவரின் இந்த தீர்க்கமான முடிவை எதிர்த்து பாஜக இளைஞரணி நிர்வாகி டி.எஸ்.பாண்டியராஜ் என்பவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றரை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,கடந்த முறையும் எஸ்.பி. செல்வராஜ் இதேபோல் தான் அனுமதி மறுத்தார் என்றும் அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு இவர் செயல்படுவதை ஏற்று கொள்ள முடியாது என்றும் கூறி திரு.செல்வராஜை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இலுப்பூரை பொறுத்தவரை சிறுபான்மையினர் அதிக அளவில் கூடியுள்ள பகுதியாகும் .இங்கு இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். இங்கு பேரணி நடத்துவது அமைதிக்கு குந்தகம் விளைவித்துவிடக்கூடும் என்ற முன் எச்சரிக்கை உணர்வுடன் காவல்துறை அனுமதி மறுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அனுபவமிக்க ஒரு காவல் கண்காணிப்பாளர் எவரது அழுத்ததையும் கண்டுகொள்ளாமல் ,எவருக்கும் அஞ்சாமல் , தனது கடமையை செய்யும் ஒருவரை பணியிடமாற்றம் செய்யக்கோரியுள்ளதும் ,எழுதிய அந்த கடிதத்தை பொதுவில் வெளியிட்டுள்ளதும் அதிகாரிகளை மிரட்டும் ஒரு தோரணையாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
(File Photo | Bloomberg)