திருச்சி பாலக்கரை மண்டல பாஜக துணைத் தலைவராக இருந்தவர் விஜயரகு. இவரை இன்று காலை 6மணி அளவில் ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக பிரமுகரின் கொலையைக் கண்டித்து காந்தி மார்க்கெட் பகுதியில் கடைகளை அடைக்கும்படி பா.ஜ.கவின் காட்டாயப் படுத்தியுள்ளனர். ஊடகங்களில் “மிட்டாய் பாபு” என்பவர் தான் கொலை செய்தது என்று செய்திகள் வெளியாகின.
அதே சமயத்தில் வழக்கம் போல பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் போலீசார் யார் என்ன என்று விசாரணையை துவக்கும் முன்னரே நடைபெற்றுள்ள குற்றச்சம்பவத்திற்கு மத சாயம் பூசி, முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்ற புரட்சிகர பொய் பிரச்சாரத்தை சீரும் சிறப்புமாக செய்தனர்
வெறுப்பை உமிழும் பாஜக தலைவர் ஹெச்.ராஜா.
சங்பரிவார கொள்கை கொண்டவர் இஸ்லாமிக் ஜிஹாதி என கூறி வெறுப்பை தூண்டுகிறார்.
இந்தநிலையில் ‘மதரீதியான காரணங்களுக்காக, பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்படவில்லை‘ என்று திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளது இந்துத்துவாவினரின் வாயை அடைக்க செய்துள்ளது.
“குற்றம் செய்தது யார் என்று தெரிந்துவிட்டது. குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். இது மதரீயிலான கொலை அல்ல. குற்றவாளிகள் அனைவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. 2 வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இந்த கொலை குற்றத்தை செய்துள்ளனர். ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையில் ஈடுபட்ட குறைந்தது மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறோம். மேலும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.” என்று காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.