CAA Karnataka

சிஏஏ குறித்து நாடகம்; பள்ளி மீது தேசத்துரோக வழக்கு – 4,5ம் வகுப்பு மாணவர்களையும் கூட விசாரிக்கும் காவல்துறை!

வடக்கு கர்நாடகாவின் பிதர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றின் முதல்வர் மற்றும் அதிகாரிர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 21 அன்று பள்ளி மாணவர்கள் சார்பில் சி.ஏ.ஏ. மற்றும் என்ஆர்சி ஆகியவற்றை விமர்சனம் செய்யும் வகையில் சிறு நாடகம் ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் இன்னபிற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது பாஜக முதல்வர் எடியூரப்பாவுக்கு கீழ் செயல்படும் காவல்துறை.

வழக்கு பிரிவுகள்:

ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை நியூ டவுன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் படி, 124 ஏ (தேசத்துரோகம்), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்), 505 (2) (பகைமையை ஊக்குவித்தல்), 34 மற்றும் 153 ஏ (வகுப்புவாத வெறுப்பை ஊக்குவித்தல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் வீடியோவை யூசுப் ரஹீம் என்ற ஊடகவியலாளர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பான எஃப்.ஐ.ஆரை உறுதிப்படுத்திய பிதர் எஸ்.பி., வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மாணவர்களை துன்புறுத்தும் காவல்துறை:

காவல்துறை துணை கண்காணிப்பாளர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல காவல்துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக ஷாபூர் கேட்டில் அமைந்துள்ள பள்ளிக்கு வருகை தருவதாகவும், அவர்கள் ‘மாணவர்களையும் ஊழியர்களையும் மனரீதியாக துன்புறுத்துகிறார்கள்’ என்றும் ஷாஹீன் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தவ்சிப் மடிகேரி தெரிவித்தார்.

“நேற்று, அவர்கள் பள்ளியின் கட்டுப்பாட்டு அறைக்கு சீல் வைத்தனர். இன்று, அவர்கள் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இது வெறும் ஐந்து-ஆறு மாணவர்களால் மட்டுமே நடத்தப்பட்டது, அதில் அவர்கள் பிரதமர் மோடியை குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.

யாரோ இதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து வகுப்புவாத வன்முறை மற்றும் வெறுப்பை பரப்புவதாக எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். இது சமூகத்தில் குழப்பத்தை உருவாக்கும். பள்ளி அதிகாரிகள் உள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ” என்று அவர் மேலும் கூறினார்.

பிதரில் சமூக சேவகர் என்று தன்னை அழைத்து கொள்ளும் நீலேஷ் என்பவரால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோவில் என்ன உள்ளது?:

தற்போது நீக்கப்பட்டுள்ள வீடியோவில் “அரசாங்கம் முஸ்லிம்களை இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்கிறது … எங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளின் ஆவணங்களை வழங்குமாறு அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள். எங்களால் முடியவில்லை என்றால், நாங்கள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ” என்று சிறார்கள் கூறுவது போல உள்ளது.

https://twitter.com/IndiasMuslims/status/1222280143114264577

வீடியோவின் முடிவில், மேடையில் உள்ள மாணவர் ஒருவர், CAA போராட்டத்தின் போது கவிஞர் வருண் குரோவரால் பிரபலப்படுத்தப்பட்ட ‘ஹம் காகஸ் நஹி திகாயங்கே (நாங்கள் ஆவணங்களை காண்பிக்க மாட்டோம்)’ என்ற பாட்டை பாடி முடிப்பதை காண முடிந்தது.

இந்த பாட்டு இணையம் எங்கும் வியாபித்துள்ளளது. பலரும் பாடி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் கைது செய்யுமா காவல்துறை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

எனினும் ஒரு பள்ளி நாடகத்தின் போது பாபர் பள்ளிவாசலை இடித்து தகர்ப்பது போல் நாடகம் அரங்கேற்றப்பட்டது கடந்த ஆண்டு . அதற்கு ஒரு வழக்கும் காவல்துறை பதியவில்லை. காலம்தாழ்த்தி பதியப்பட்ட வழக்கும் குப்பை மேட்டில்

“சி.ஏ.ஏ, என்.பி.ஆர் பற்றி போலி செய்திகளைப் பரப்புவதன் மூலம் வகுப்புவாத ஒற்றுமையைத் தூண்டுவதற்கு பள்ளி முயற்சிப்பதாக” புகார் கொடுத்தவர் கூறியுளளார்.

பள்ளி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ மாணவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லி தரவில்லை என்றும், வருடாந்திர நாள் விழாவை முன்னிட்டு பெற்றோர்கள் தான் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி நாடகத்தை நடத்தியதாகவும் மடிகேரி தெரிவித்துள்ளார்.

நன்றி: தி கிவின்ட்