முஹம்மது நபி அவர்களின் உருவப்படத்தை ஒரு வீடியோவில் சித்தரிமைத்து காட்டியதற்காக பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி-இந்தி) ராசா (RAZA) அகாடமியிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
தஹஃபுஸ் நமூஸ் இ ரிசாலத் அமைப்பு மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை சந்தித்து பிபிசி இந்தி தொலைக்காட்சியினர் மீது புகாரளித்தனர். ரிஸா அகாடமி அமைப்பினரும் தங்களது பங்கிற்கு மஹாராஷ்டிரா அமைச்சர் அஸ்லம் ஷேக் அவர்களை சந்தித்து இதுகுறித்து புகார் தெரிவித்திருந்தனர்.
பிபிசி இந்தி சேனலின் நிர்வாகி முகேஷ் சர்மாவிடமும் இதுகுறித்த விபரம் தெரிவிகப்பட்டது அதற்கு அவர் தங்களது சேனலில் வெளியான காணொளி ஒன்றில் முஹம்மத் நபி அவர்களின் படம் வெளியானது குறித்து வருத்தம் தெரிவித்து அக்காட்சிகளை நீக்கிவிட்டதாக கூறியிருந்தார்.
பிபிசி இந்தி சேனலில் ஊடகவியலாளராக பணியாற்றும் இக்பால் அகமது கூறுகையில், “பிபிசி இதுபோன்ற ஒரு பெரிய தவறைச் செய்ததற்கு வெட்கப்படுகின்றது, இது குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் செய்தது தவறு என்று ஒப்பு கொள்கிறோம்.பலரின் உணர்வுகளை புண்படுத்தும் ஒரு படத்தை எங்கள் நிகழ்ச்சியில் சித்தரித்ததற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வீடியோவில் இருந்து ஆட்சேபகரமான உள்ளடக்கங்களை அகற்றவும் பிபிசி முடிவு செய்துள்ளது, மேலும் உங்கள் கோரிக்கைகளில் எதையும் ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம்” என கூறினார்.
ஊடக அமைப்பு உருவப்படத்தை அகற்றி மன்னிப்பு கோரியுள்ளதால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக மேற்கூறிய வாரியம் தெரிவித்துள்ளது.