sudha bharadwaj
Activists Arrests

பிரபல பெண் சமூக ஆர்வலர் சுதா பரத்வாஜ் கைது மற்றும் என் ஆர் சி முறைகேடுகள் குறித்து சஷி தரூர் பாராளுமன்றத்தில் விளாசல்!

மனித உரிமை ஆர்வலர் சுதா பரத்வாஜ் உலக புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கழைக்கழக கண்காட்சியில் “சட்டம் மற்றும் கொள்கை துறைகளில் உலகெங்கிலும் உள்ள பெண்களின் வியக்கத்தக்க பங்களிப்புகளை” வெளிப்படுத்திய உலகெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி பாஜக ஆளும் அரசாங்கத்தின் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கடுமையாக தாக்கி பேசினார். இந்த […]

man forced to convert hindusim
Hindutva Islamophobia States News

இந்து மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தி சித்திரவதை, அஷ்ரப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர்- போலீசில் புகார்.

அஷ்ரப் அலி என்பவர் தில்லியில் உள்ள ரோஹிணி செக்டர் என்ற பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு ஃபிளாட்டை வாங்கியுள்ளார்.குடிபெயர்ந்த முதல் இரண்டு மூன்று மாதங்கள் நிம்மதியாக இருந்த இவர் அதன் பின்னர் அப்போதிலிருந்து இன்று வரை 4 வருடங்களாக கடுமையான மன உளைச்சலுக்கும் பல்வேறு தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்.இதற்குக் காரணம் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கிஷன் லால் என்பவரும் அவரது மகனும் தான் என்று ஆஷ்ரப் அலி கூறுகின்றார். கிஷன் லால் மற்றும் […]

mosque burned
Hindutva Uttar Pradesh

உபி மாநிலத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது!

உபி மாநில fபதேப்பூர் மாவட்டத்தில் , ஒரு பள்ளிவாசலில் மாட்டுக்கறி உள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து ஒரு பள்ளிவாசல் ,அதற்கு அருகில் இருந்த ஒரு மதரஸா மற்றும் ஒரு வீடும் ஒரு வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலை கொளுத்தும் முன்னர் உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து அங்கிருந்த புனித நூல்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடைபெற்ற பொழுது மக்கள் யாரும் பள்ளிவாசலில் இல்லாமல் இருந்த காரணத்தால் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பள்ளிவாசல் […]

Bihar lynching
Bihar Lynchings States News

பீகாரில் கால்நடையை கடத்த வந்ததாக சந்தேகித்து மூன்று நபர்கள் அடித்து கொலை !

சமீப காலமாக வடஇந்தியாவில் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொண்டு கும்பல் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. பீகார் மாநிலத்தின் பனியாபூர் பகுதியில் (இன்று ) வெள்ளிக்கிழமை (19.7.19)காலை கால்நடைகளை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து மூன்று பேரை ஊர் மக்களில் ஒரு கும்பல் அடித்து கொன்றுள்ளனர் பனியாபூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பைகம்பர்பூர் கிராமத்தில் அதிகாலை வேலையில் இந்த சம்பவம் நடந்தது. இறந்தவர்கள் ராஜு நாத் , பைட்ஸ் நாத் மற்றும் நவ்ஷாத் குரேஷி […]

NIA
BJP NIA

பாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.!

-Nakheeran Article சாமியார்கள் என்ற முகமூடி இருந்தால் போதும். சர்வசாதாரணமாக குண்டுவெடிப்புகளை நிகழ்த்தலாம். உயிர்களைப் பறித்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நிலை இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று சட்டத்துறை அறிஞர்களே பதற்றம் அடையும் நிலையை பாஜக ஏற்கெனவே செய்துகாட்டியது.  ஏற்கெனவே, நீதித்துறையை பாஜக கைப்பற்றிவிட்டது என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வரும் நிலையில், புதிதாக அச்சப்படும் நிலையில் அப்படி என்ன செய்தது என்றுதானே கேட்கிறீர்கள்? அதைப்பற்றி பிறகு பார்க்கலாம். 2009 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் […]

Gaumata Hindutva Lynchings Political Figures

இந்தியாவில் மாட்டிறைச்சி தடை செய்ய விரும்பியவர்களுக்கு மகாத்மா காந்தி அன்றே சொன்னது என்ன ?

கீழுள்ள பதிவு காந்தி பாரம்பரிய ஆன்லைன் போர்ட்டலில் வெளியிட்டுள்ள காந்தியின் பிரார்த்தனை சொற்பொழிவின் ஒரு பகுதி (ஜூலை 25, 1947, மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், vol :88) …மாடுகளை (இறைச்சிக்காக) கொல்ல தடை விதிக்கக் கோரி தனக்கு சுமார் 50,000 அஞ்சல் அட்டைகளும், 25,000 முதல் 30,000 கடிதங்களும், பல்லாயிரக்கணக்கான தந்திகளும் வந்துள்ளன என்று ராஜேந்திர பாபு என்னிடம் கூறுகிறார். இதைப் பற்றி நான் முன்பு உங்களிடம் பேசினேன்.இத்தனை தந்தி ,கடிதங்கள் எல்லாம் ஏன் அனுப்ப […]

Gaumata Hindutva Lynchings Tamil Nadu

மாட்டுக்கறி சூப் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குபதிவு!

ஜூலை 9-ம் தேதி ஃபைசான் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முஹம்மது ஃபைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் குண்டர்களால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடலில் காயங்களுடனான ஃபைசானின் புகைபடங்கள் வைரலாக தொடங்கின. இதனை தொடர்ந்து ஃபைசான் க்கு ஆதரவாக, #Beef4life and #WeLoveBeef என்ற ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், ஃபைசானைத் தாக்கிய நான்கு நபர்களையும் […]

Helpline lynching
Hindutva Indian Judiciary Islamophobia Lynchings

கும்பல் வன்முறை (Lynching ) தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு உதவும் வகையில் ஹெல்ப்லைன் 1800-3133-60000 அறிவிப்பு!

இந்தியாவில் சமீப காலமாக கும்பல் வன்முறைகளும், காட்டுமிராண்டி தாக்குதலைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதை எதிர் கொள்ளும் விதமாக சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கும் , இவ்வாறான கும்பல் வன்முறை தாக்குதல்களை ஆவணப்படுத்துவதற்கும் ஒரு உதவித் தொலைபேசி எண்ணை ( ஹெல்ப்லைனை) அறிமுகப்படுத்திஉள்ளனர். தொடர் கும்பல் வன்முறை சம்பவங்களைத் தடுக்க இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகள் தவறியதால் இந்த முயற்சி தேவைபடுகிறது என்று இந்தியா முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் (United […]

Nia recruitment
Hindutva Islamophobia NIA

“இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது” பிரதமர் பேச்சுக்கு முரணாக NIAவின் “மோஸ்ட் வாண்டட்” தீவிரவாத குற்ற பட்டியலில் இந்துக்கள் பெயர் பட்டியல்!

“ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது” என்ற பிரதமர் மோடியின் கருத்து தேசிய தீவிரவாத தடுப்பு புலனாய்வு பிரிவான என்ஐஏவின் கூற்றுக்களுடன் பொருந்துவதாக இல்லை. பயங்கரவாத தொடர்பான வழக்குகளில் ‘மோஸ்ட் வாண்டட்’ என்பதற்கான ஒரு பகுதியை என்ஐஏ வலைத்தளம் கொண்டுள்ளது, இதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முஸ்லீம் பெயர் தாங்கிகளை ஒப்பிடும்போது மாவோயிஸ்டுகள் மற்றும் சிவப்பு கிளர்ச்சியாளர்கள் என்று அறியப்பட கூடிய […]

Political Figures Uttar Pradesh

மத கோஷங்களை கட்டாயப்படுத்தி திணித்து வன்முறையில் ஈடுபடும் போக்கிற்கு -மாயாவதி கடும் கண்டனம் !

லக்னோ, ஜூலை 15 (PTI ) மதப் கோஷங்களை எழுப்ப மக்களை கட்டாயப்படுத்தும் ஒரு தவறான நடைமுறை உத்தரபிரதேசம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் தொடங்கியுள்ளதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று (15-7-19)கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.      கடந்த சனிக்கிழமை உபி மாநில பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய […]

Islamophobia Lynchings Uttar Pradesh

பள்ளிவாசல் இமாமின் தொப்பியை கழற்றி எரிந்து ,தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய கோழை குண்டர்கள் -உபி மாநிலத்தில் தொடரும் காட்டுமிராண்டித்தனம் !

முசாபர்நகரில் பள்ளிவாசல் இமாமாக பணி புரிபவர் இம்லாக்-உர்-ஹ்மான். இவர் தனது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரை நெருங்கிய குண்டர்கள் , தொப்பியை கழற்றி எரிந்து , கடுமையாக அவரை தாக்கி, தாடியையும் பிடித்து இழுத்துள்ளனர். பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கியதர்காக 12 பேர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக PTI தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை(13.7.19) முசாபர்நகர் மாவட்டத்தில் இமாம் தனது மோட்டார் […]

islamophobia
International News Islamophobia UK

இங்கிலாந்து செல்லும் விமானத்தில் சக முஸ்லிம் பயணிகளை “பயங்கரவாதிகள்” என்று கூறி, மற்ற பயணிகளையும் வசை பாடியதால் 2 பெண்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்

துருக்கியில் இருந்து கேட்விக் செல்லும் தாமஸ் குக் விமானத்தில் இருந்து இரண்டு பெண்கள் வெளியேற்றப்பட்டனர். அவ்விருவரும் வெள்ளை நிற நீள ஆடையுடன் இருந்த மூன்று முஸ்லீம் ஆண்கள் “பயங்கரவாதிகள்” என்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு “அச்சுறுத்தல்” என்றும் கூச்சலிட்டதாக மற்ற பயணிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் டால்மானில் இருந்து கேட்விக் செல்லும் விமானம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. சம்பவ வீடியோவை காண விமானத்தில் இருந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மரியோ வான் பாப்பல் என்ற பயணி […]

police abdul ghani death rajasthan
Lynchings Rajasthan States News

காவலர் அப்துல் கனி ராஜஸ்தானில்,கொடூர கும்பலால் அடித்து கொலை !

நேற்று (13-7-19) ராஜஸ்தானின் ராஜ்சமண்ட் மாவட்டத்தின் பத்மேலா கிராமத்தில் நில தகராறு வழக்கை விசாரிக்கும் போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கட்டைகள் மற்றும் கம்பிகளால் அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர், இதனால் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 48 வயதான அப்துல் கனி, நில அபகரிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக பீம் தொகுதியின் ப்ரார் கிராம பஞ்சாயத்து கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்கு […]

china-kids detention camps
International News Islamophobia

சீன அரசின் முஸ்லிம்களின் மனித உரிமை மீறல்களை ஆதரிக்கும் விதமாக முஸ்லிம் நாடுகள் ஐநா.வில் அறிக்கை!

சீனாவில் ஜின்ஜியாங் என்ற மேற்கு மாகாணத்தில் வீகர் (uighur)இன முஸ்லிம் குழந்தைகள் அவர்களுடைய குடும்பங்கள், மத நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றிலிருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்று ஒரு புலனாய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது.இது குறித்து bbc செய்தி நிறுவனமும் பிரசுரித்திருந்தது. தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 20 லட்சம் வரையிலான சீன முஸ்லிம்கள் இஸ்லாத்தை கைவிடுமாறும், பன்றி இறைச்சி உண்ணவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். மஸ்ஜித்களுக்கு செல்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஹஜ் கடமையை நிறைவேற்றுவது என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன .கம்யூனிஸ […]

hindi imposition
States News Tamil Nadu

நாளை நடைபெறவுள்ள அஞ்சல் துறை தேர்வில் தமிழ் நீக்கம்; தலைவர்கள் கண்டனம்

இந்தியா முழுவதும் தபால் துறை நடத்தும் தபால்காரர், உதவி தபால்காரர், மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (எம்.டி.எஸ்), மெயில் காவலர் போன்ற தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கடந்த ஆண்டு வரை அந்தந்த மாநில மொழிகளில் நடைபெற்று கொண்டிருந்தன. தென் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியவை இதில் அடங்கும். கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தபால் துறையின் தேர்வின் போது மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல இந்தி மொழி பேசும் தேர்வெழுதுவோர் தமிழ் தாளில் தமிழ்நாடு […]