பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கும்பல் வன்முறை சம்பவங்களை வெறுமென விமர்சித்துவிட்டு செல்வது போதாது என்றும், ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு கடுமையான குற்றமாக ஆக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.. நாற்பதுக்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் தூண்டிவிடக்கூடிய போர்க்கால முழக்கமாக மாறி, நாட்டின் பல்வேறு இடங்களில் கும்பல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். “முஸ்லீம்கள், […]
Author: NewsCap.in Staff
சந்தேகித்தின் பெயரால் அழைத்து செல்லப்பட்ட ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்திய போலீஸ் ! -அதிர வைக்கும் சம்பவம்
உபி மாநில பஹ்ரைச் (Bahraich) நகரில் குற்றச்சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அழைத்து சென்ற (SOG) போலீஸார் ஜமீல் அஹமதை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்தப்பட்டு கடுமையான சித்திரவதை செய்துள்ளனர்.இதை ஜூலை 22 ஆம் தேதி அபய் சிங் ரத்தோர் என்ற ஊடகவியலாளர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.இந்த செய்தி நாம் அறிந்தவரை வேறு எந்த ஊடகத்திலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது தற்போது KGMU மருத்துவமனையில் […]
உபி மாநிலத்தில் கிறிஸ்துவ தம்பதியினர் மீது தாக்குதல் , வீட்டை காலி செய்யுமாறு தாகூர் சமூகத்தார் மிரட்டல் !
உபி மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தார் தாக்கப்படும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.அந்த வகையில் கடந்த திங்களன்று உபி மாநில தலைநகரான லக்னோவில் ,ஒரு கிறிஸ்துவ குடும்பத்தார் தங்கள் அண்டை வீட்டினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . தாக்கியவர்கள் “தாகூர்” சமூகத்தை சேர்ந்தவர்கள். நந்தி விஹார் எனும் பகுதியில் வாழும் இந்த கிறிஸ்தவ தம்பதியினர் நீண்ட காலமாக பெரும்பான்மை சமூகமான “தாகூர்” சமூகத்தினரால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆட்படுத்த படுவதாக கூறினர். இதற்கு காரணம் கிறிஸ்துவ தம்பதிகள் அப்பகுதியில் […]
குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம்கள், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை!
கடந்த 1996ம் ஆண்டு ஆக்ராவில் இருந்து பிகனேர் நோக்கி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஒன்றில், சம்லெட்டி கிராமம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை 23 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில் சதித்திட்டம் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் அப்துல் லத்தீப் […]
மோடி 2.0 : 60 நாட்களில் பங்கு சந்தையில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு!
மோடி அரசு அமைத்து 60 நாட்களில் சுமார் ரூ.12 லட்சம் கோடி இழப்பு மோடி இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற 60 நாட்களில் பங்குச் சந்தை ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2004 ஆம் வருடம் மே 14 முதல் 2009 ஆம் வருடம் ஜூலை 24 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மற்றும் அதே கூட்டணி 2ம் முறையாக ஆட்சியைத் தொடங்கிய போதும் மும்பை பங்குச் சந்தை 203% வளர்ச்சி அடைந்துள்ளது. […]
”பிராமணர்கள் முன் ஜென்ம நல்வினையால் 2முறை பிறப்பவர்கள்.. எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்” – கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ்
“பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும்” கேரள உயர்நீதிமன்றத்தின் தற்போதய நீதிபதி வி.சிதம்பரேஷ் சமீபத்தில் பிராமணர்கள் மற்றும் அவர்களின் நல்லொழுக்கங்கள் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கொச்சியில் நடைபெற்ற தமிழ் பிராமணர்களின் உலகளாவிய கூட்டத்தில், நீதிபதி பிராமணர்களின் நற்பண்புகளை புகழ்ந்து தனது உரையைத் தொடங்கினார். நீதிபதியின் பேச்சு : “பிராமணர் என்பவர் யார் ? பிராமணர் என்பவர் “திவிஜன்மனா” – அதாவது இரண்டு முறை பிறப்பவர் … அதற்கு காரணம் முந்தைய […]
“NIA முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து கைது செய்கிறது”-சட்டமன்றத்தில் தமீமுன் அன்சாரி, அபூபக்கர் குற்றச்சாட்டு!
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக எம்.எல்.ஏவும், மனிதனேய ஜனநாயக கட்சி நிறுவனருமான எம்.தமிமுன் அன்சாரி கடந்த வியாழக்கிழமை சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தார் மேம்பாடு குறித்த விவாதத்தின் போது என்.ஐ.ஏ அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதும் , உடனே அவர்கள் போட்டோக்கள் மற்றும் இதர விவரங்களை மீடியாக்களில் வழங்கி, பின் மறு தினமே இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று […]
என்.ஐ.ஏ கைது செய்திருந்த 4 முஸ்லிம் வாலிபர்கள் தீவிரவாதிகள் இல்லை -ஆதாரமில்லாததால் விடுதலை !
NIA அமைப்பு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து கைது செய்து வருவது குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்யப்பட்ட 4 சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது இருந்த வழக்கை தேசிய புலனாய்வு (NIA ) அமைப்பு வாபஸ் பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் பயங்கரவாத செயலை நடத்த திட்டம் தீட்டியதாகவும், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை […]
இன்று அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனர்களின் வீடுகளை தரைமட்டமாக்கி கொன்றிருக்கும் இஸ்ரேலின் அராஜகம் !
பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சர்வதேச விமர்சனங்கள் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருடன் இஸ்ரேலிய புல்டோசர்கள் திங்களன்று(22-07-19) பாலஸ்தீனிய கிராமமான சுர் பஹெரில் பாலஸ்தீனர்களை பிரிக்கும் சுவர் அருகே உள்ள வாதி அல்-ஹம்முஸ் பகுதியில் சுமார் 100 வீடுகளை இடிக்கச் சென்றுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் விளிம்பில் உள்ள பாலஸ்தீனிய கிராமமான சுர் பஹெர் 1967 போரில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. இஸ்ரேலால் கட்டப்பட்ட “இனவெறி சுவர்” என்று பாலஸ்தீனர்களால் அழைக்கப்படும் (ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மேற்குக் கரையை […]
9 போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்-ராஜஸ்தானில் அரங்கேறிய கொடூரம்!
ராஜஸ்தான் மாநில சுரு(churu) என்ற நகரத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் பல நாட்களாக 9 போலீசாரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களை முழுமையாக அறிந்தால் நெஞ்சம் அதிர்ந்து போகும். ஆனால் இந்த செய்தி பெருமளவில் (22ஜூலை நிலவரப்படி) வெளியே கூட தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. தி வயர் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஜூன் 30 அன்று ஆறு மாதத்திற்கு முன்னர் நடந்த திருட்டு […]
ரூ.128 கோடி மின் ரசீது! ஷமீம் வீட்டில் இருப்பதோ ஒரு ஃபேன் லைட் மட்டுமே !
உபி மாநில ஹபூர் மாவட்டம், சாம்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷமிம்(வயது80). இவர் தன் மனைவி கைரு நிஷாவுடன் வசித்து வருகிறார்.ஷமிம் ஒரு கூலி தொழிலாளி. இவரின் சிறிய வீட்டில் 1 சிறிய டிவி , 1 மின்விசிறி, 2 டியூப் லைட்டுகளும் மட்டுமே இருக்கிறது.மாதந்தோறும் ரூ.700க்கு மேல் மின்கட்டணத்தை ஷமிம் செலுத்தியதில்லை. இந்நிலையில், கடந்த மாதம் மின்கட்டணமாக ஷமிமுக்கு மாவட்ட மின்வாரியத்தில் இருந்து வந்த நோட்டீஸைப் பார்த்த ஷமிம் அதிர்ச்சி அடைந்தார். ஷமிம் 2 கிலோவாட் (kw […]
மகாராஷ்டிராவில் இயல்பாக நடந்த வாகன விபத்தை மத கலவரமாக்கிய விஷமிகள் !
ஜூலை 18 ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் அஹ்மத்நகரில் ஒரு பைக் மற்றும் டிரக் மோதி கொண்டதில் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்கிய ஒருவர் தன் துணைக்கு இந்து யுவ வாகினி என்ற அமைப்பினரை தன் உதவிக்கு அழைக்கிறார். அவர்கள் அங்கு வந்து கல்வீச்சில் ஈடுபடத் துவங்குகின்றனர். போர்க்களம் போல் மாறிய அப்பகுதி சற்று நேரத்தில் ஒரு மதக்கலவரமாக ஆகி விடுகிறது. கடைகள் வாகனங்கள் என அனைத்தும் சூறையாடப்படுகின்றது. அங்கு உள்ள மக்களுக்கு கடும் பொருளாதார இழப்பு […]
யோகி ஆதித்யநாத் மீதான ’20 வருட கொலை வழக்கை’ ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 20 வருடமாக கிடப்பில் போடப்பட்டிருந்த யோகி ஆதித்யநாத் மீதான கொலை வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1999ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் தலாத் அஜீஸ் என்பவரை கொலை செய்ய அவரை நோக்கி யோகி ஆதித்யநாத் மற்றும் சில குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், இந்த சம்பவத்தின் போது சமாஜ்வாதி கட்சி தலைவரின் பாதுகாப்பு காவல் அதிகாரியாக இருந்த யாதவ் என்பவர் மகாராஜ்கஞ் என்ற பகுதியில் கொலை செய்யப்பட்டார் என்பது தான் […]
வாரணாசியில் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர பட்ட வழக்கில் அலஹாபாத் உயர் நீதி மன்றம் மோடிக்கு நோட்டீஸ்.
வாரணாசி தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மோடிக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எல்லையில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் , எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ்பகதூர். இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கிடையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவர் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. எல்லைப் பாதுகாப்பு […]
மஹாராஷ்டிராவில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற கட்டாயப்படுத்தி இம்ரான் இஸ்மாயில் மீது குண்டர்கள் கடும் தாக்குதல்.
வெள்ளிக்கிழமை(19-7-19) மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இம்ரான் இஸ்மாயில் என்பவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்னர். ஹோட்டல் ஊழியர் இம்ரான் இஸ்மாயில் படேல் தனது புகாரில் பேகம்புரா பகுதியில் உள்ள ஹட்கோ கார்னர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது சுமார் பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார். அவர்கள் அவரை கடுமையாக தாக்கி , “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தியதாக […]