ஓர் ஆண்டு கால தாமதத்திற்கு பிறகு வெளியான 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின்(என்.சி.ஆர்.பி ) தரவுகளின்படி பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலமான உத்திர பிரதேசம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதில் முதல் இடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக மொத்தம் 56,011 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பட்டியலில் இரண்டாம் இடத்தில உள்ள மாநிலமும் பாஜக ஆளும் மகாராஷ்டிரா- இங்கு 31,979 குற்றவழக்குகள் பதியப்பட்டுள்ளன. மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது டிஎம்சி ஆளும் மாநிலமான மேற்கு வங்கம்- […]
Author: NewsCap.in Staff
சிக்கன், மட்டனை மட்டுமே உண்ணும் கோமாதா!
பனாஜி: கோவா வின் கலங்குட் மற்றும் கேண்டோலிம் கடற்கரை கிராமங்களில் உள்ள 76 மாடுகள் அசைவ உணவு பழக்கத்திற்கு மாறி விட்டதாக அம் மாநிலம் கழிவுப் பொருள் மேலாண்மை அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார். மேலும் மாடுகளை மீண்டும் சைவ உணவு பழக்கத்திற்கு மாற்றிட கால்நடை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கோசாலையில் வழக்கமாக வழங்கப்படும் புல், வைக்கோல் மற்றும் சிறப்பு உணவுகளை அந்த மாடுகள் சாப்பிடுவது இல்லை மாறாக சிக்கன், மட்டன், மீன் […]
இந்துத்துவ தலைவர் கமலேஷ் திவாரியை கொலை செய்தவர்கள் யார்?
உத்தரப்பிரதேசம்: வெள்ளிக்கிழமை பிற்பகல் லக்னோவின் நாகா பகுதியில் கமலேஷ் திவாரி (43) எனும் இந்துத்துவ, இந்து சமாஜ் கட்சித் தலைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,எனினும் தமிழக அளவில் இதை குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்படவில்லை. கொலை செய்யப்பட்ட கமலேஷ் நபிகள் நாயகம் அவர்களை குறித்து (2015 ஆண்டில்) கீழ்த்தரமாக பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது பட்டிருந்தவர். எனினும் யோகி ஆட்சி வந்த பிறகு […]
டாக்டரை கற்பழித்ததாக பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு – எம்.எல்.ஏ தலைமறைவு!
அருணாச்சல பிரதேசம்: 30 வயதான மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அருணாச்சல பிரதேச பமேங் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ கோருக் பர்துங் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியபட்டுள்ளது.வழக்கு தொடுக்கப்பட்டதை தொடர்ந்து எம் எல் ஏ தலைமறைவாகி உள்ளார். அக்டோபர் 12ம் தேதி மாலையில் இட்டானகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இட்டாநகரில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு டும்மே அமோ கூறியுள்ளார். “நாங்கள் இது குறித்து விசாரித்து வருகிறோம், காவல் […]
பாபர் பள்ளி விவகாரத்தில் ‘செட்டில்மென்ட்’ செய்து கொண்டதா வக்ஃப் வாரியம்.? – உண்மை நிலவரம் என்ன ?
கடந்த இரு தினங்களாக பாபர் பள்ளி விவகாரத்தில் சுன்னி வக்ஃப் வாரியம் இந்துத்துவ தரப்புடன் செட்டில்மென்ட் செய்து கொண்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அதே சமயம் இது தொடர்பாக சுன்னி வக்ஃப் வாரியத்தின் வக்கீல்களில் ஒருவரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜாஃபர்யாப் ஜீலானி தனியார் ஊடகம் ஒன்றிற்கு இதற்கு மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்திருந்தார். எனவே இது தொடர்பாக பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில் தற்போது இந்துத்துவ தரப்பினருடன் செட்டில்மென்ட் செய்து கொள்வது தொடர்பான செய்தி உண்மை […]
மோதி-ஜின்பிங் சந்திப்பு;ஒரு மாதமாக தினம் 16 மணி நேரம் வேலை- 1ரூ கூட கூலி வழங்கவில்லை!
பிரதமர் மோதி சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு மஹாபலிபுரத்தை தூய்மை படுத்துவதற்காக தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்கள் கடந்த ஒரு மாத காலமாக தினமும் சுமார் 16 மணி நேரம் இடைவிடாது பணிபுரிந்து வந்துள்ளனர்.எனினும் இதுவரை தங்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்று துப்புரவு தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தொழிலாளர்களில் சிலர் மகாத்மா காந்தி கிராமப்புற தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் தினசரி கூலித் தொழிலாளர்களாக பணி புரிபவர்கள். எனவே மகாபலிபுரம் […]
மோதியின் சகோதரர் மகளின் ரூ.56,000,2 மொபைல் திருட்டு-100 போலீசார் வழக்கில் ஈடுபட்டுள்ளனர்!
பிரதமர் மோதியின் சகோதரர் மகள் தமயந்தி பென் மோதி.திருட்டு சம்பவம் நடைபெற்ற தினத்தில் அவர் டில்லியில் இருந்து அஹ்மதாபாத் (குஜராத்) செல்வதாக இருந்தது.அவர் தனது பர்சில் (கைப்பையில்) ரூ.56,000, 2மொபைல்கள்,விமான டிக்கட் மற்றும் சில ஆவணங்களை வைத்துள்ளார். நேற்று (12-10-19) டில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள குஜராத்தி சமாஜ் பவனின் வாயிலுக்கு வெளியே (காலை 6.30 மணி அளவில் ) ஒரு ஆட்டோ ரிக்ஷாவிலிருந்து தமயந்தி இறங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் […]
பள்ளிக்கூடத்தில சாதி வெறியா???
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே மறவப்பட்டி காலனி சேர்ந்த தலித் மாணவன் சரவணகுமார் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான் Download our android app http://bit.ly/2nOa5Wp 11 10 2019 இன்று மாலை சரவணகுமார் உடன் படிக்கும் மாணவன்மோகன்ராஜ் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளனர் இதை சரவணகுமார் மோகன்ராஜ் மேற்படி மகேஸ்வரனை தட்டிக் கேட்டுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த மகா […]
இந்திய காவல்துறையின் மனநிலை என்ன? அதிரவைக்கும் கருத்துக்கணிப்பு !
21 மாநிலங்களைச் சேர்ந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் 12,000 போலீசுக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினர் 11,000 பேர்களையும் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளனர். ***** “இந்தியாவில் காவல்துறை ஆதிக்கத்தின் நிலை – 2019” என்ற கருத்துக்கணிப்பு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அக்கருத்துக் கணிப்பில் பெறப்பட்ட முடிவுகள் போலீசின் இன்றைய நிலைமையை சுட்டிக் காட்டுகின்றன. குற்றங்களைச் செய்வதற்கு முசுலீம்கள் இயற்கையாகவே ஆட்படக் கூடியவர்கள் என்ற கருத்து இரண்டில் ஒரு போலீசுக்கு இருக்கிறது. போலீசுக்குரிய பண்பு மற்றும் வேலை நிலைமைகளைப் பற்றி […]
மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியைக் குறைத்து அறிவிப்பு !
பண்டிகை விற்பனை காலங்களிலும் கூட வாகன விற்பனை மந்தமான நிலையில் உள்ளதால் வாகன உற்பத்தியாளர்களிடேயே அதிக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசுகி அதன் உற்பத்தியை 17.48 சதவீதம் குறைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகனங்களின் உற்பத்தியை 63 சதவீதம் குறைத்து வெறும் 6,976 யூனிட்டுகள் மட்டுமே தயாரித்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 18,855 யூனிட்களாக இருந்ததுள்ளது. மாருதி சுசுகி அதன் உற்பத்தியை தொடர்ந்து எட்டாவது முறையாக குறைத்து […]
கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல அனுமதி இல்லை!- மோதி அரசாங்கம் திட்டவட்டம்! !
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் டென்மார்க்கில் நடக்கவிருக்கும் சர்வதேச ‘பருவநிலை மாற்றம் ‘குறித்தான உச்சநிலை மாநாடுட்டில் கலந்துகொண்டு அவரது சாதனைகள் குறித்து பேச அழைக்கப்பட்டார். எனினும் அதில் கலந்து கொள்ள மோதி தலைமையிலான அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இது குறித்து “அனுமதியைப் பொருத்தவரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அக்டோபர் 9 முதல் 12 வரை நடைபெறவிருக்கும் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள முடியாது ”என்று தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி முதலமைச்சர், டேனிஷ் தலைநகரில் வைத்து […]
“இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பாஜக” – மே 17 இயக்கம் கண்டனம்!
ஆளும் பாஜக அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி, போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இது குறித்து மே 17 இயக்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “லாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு: மத்தியில் பிஜேபியின் மோடி அரசு பதவியேற்ற நாளிலிருந்து லாபத்தில் இயங்கும் பல்வேறு அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் வேலையை சத்தமில்லாமல் செய்து வருகிறது. இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை […]
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்த எஸ்.பி.யை உடனடியாக மாற்றக்கோரி அமித்ஷாவுக்கு கடிதம்!
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் வைத்து அமைதி பேரணி நடத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜை ஆர்.எஸ்.எஸ். தரப்பு அணுகியுள்ளது.புதுக்கோட்டையின் நிலவரத்தை முழுவதும் அறிந்து வைத்துள்ள காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வராஜ் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளார். இவரின் இந்த தீர்க்கமான முடிவை எதிர்த்து பாஜக இளைஞரணி நிர்வாகி டி.எஸ்.பாண்டியராஜ் என்பவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றரை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,கடந்த முறையும் எஸ்.பி. செல்வராஜ் இதேபோல் தான் அனுமதி மறுத்தார் என்றும் அரசியல் […]
“தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” -மு.க.ஸ்டாலின்!
இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:“சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள்” என்றும், “மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறைப் பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் […]
மும்பையின் லட்சாதிபதி பிச்சைக்காரர்; அதிர்ந்து போன போலீஸ்!
மும்பையில் ரயில் மோதி மரணித்த பிச்சைக்காரர்! 8 மணி நேரம் செலவழித்து 1.5 லட்சம் மதிப்புள்ள நாணயங்களை எண்ணிய போலீஸ் ! மும்பை கோவாந்தியில் வாழ்ந்து வந்த பிர்ஜு சந்திரா எனும் பிச்சைக்காரர்(வயது 62) ஒருவர் மீது ரயில் ஏறியதில் அவர் மரணித்தார். அவர் வங்கியில் தனது பெயரில் நிலையான வைப்பு கணக்கு (FD) மூலம் ₹8.7 லட்சம் வைப்பு வைத்திருந்தது தெரியவந்தது.மேலும் இவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த 1.75 லட்சம் சில்லறை நாணயங்களை எண்ணுவதற்கு ரயில்வே […]