பூபேஷ் NIA chattisgarh
Chattisgarh Indian Judiciary NIA

NIA சட்டத்தை எதிர்த்து சட்டிஸ்கர் மாநிலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம், 2008 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து சட்டிஸ்கர்: இதன் மூலம் NIA சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரும் முதல் மாநிலமாக சட்டிஸ்கர் ஆகியுள்ளது. அதே போல கேரள அரசும் மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்தை எதிர்க்க இந்திய அரசியலமைப்பின் 131 வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில அரசங்கத்திற்கு மத்திய அரசுடன் […]

rajini
Actors Tamil Nadu

ரஜினியின் பொய்களுக்கு மறுப்பு – சுப. வீரபாண்டியன்

பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் – சுப. வீரபாண்டியன் 14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய திரு. ரஜினி, ” 1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப் போனாரு” என்று பேசியுள்ளார். “அதனை எதிர்க்க வேறு எந்தப் பத்திரிகைக்கும் தைரியம் இல்லாதபோது, […]

west bengal guv
Intellectual Politicians West Bengal

‘அர்ஜுனர் அம்பில் அணுசக்தி..மகாபாரதத்தில் விமானம்’- மே. வங்க ஆளுநரின் கருத்துக்கு விஞ்ஞானிகள் கடும் விமர்சனம்..

..அவர் பைத்தியக்காரத்தனத்தின் அறிகுறிகளைக் வெளிகாட்டுகிறார். விஞ்ஞானிகளாகிய எங்களுக்கு இத்தகைய விஷயங்களைக் கேட்கும்போது கோபம் வருகிறது..

mjuqtada
International News Iraq

‘அமெரிக்க படைகளே வெளியேறு’- ஈராக்கில் மாபெரும் பேரணி அறிவிப்பு!

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ள நிலையில் அமெரிக்க படைகளை வெளியேற்ற “மில்லியன் மக்கள் பேரணி ” நடத்துவதற்கு ஈராக்கின் ஜனரஞ்சக ஷியா தலைவர் முக்தாதா அல் சதர் அழைப்பு விடுத்துள்ளார். ஈராக்கின் வானம், நிலம் மற்றும் இறையாண்மை ஆகியவை ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு படைகளின் ஆக்கிரமிப்பின் மூலம் மீறப்படுகின்றன என அவர் கூறி உள்ளார். எனினும் இதற்கான இடம், தேதி பற்றிய விவரங்களை அவர் அறிவிக்கவில்லை. “ஈராக்கிய மண்ணில் அமெரிக்க தொடர்ந்து […]

hindtuva extremist mob
Christians Hindutva Karnataka

இயேசு கிறிஸ்து சிலை கூடாது; சங்பரிவார கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம்!

இந்துத்துவாவினர் ஆர்ப்பாட்டம்: நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஆளும் கர்நாடகாவின் கனகாபுராவில் உள்ள கபாலா பெட்டாவில் 114 அடி உயர இயேசு கிறிஸ்துவின் சிலை நிறுவ திட்டமிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து ஜாக்ரன் வேதிகே, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தில் முனீஷ்வராவுடன் (இந்து தெய்வ சிவனின் ஒரு வடிவம்) ஒரு பழங்கால தொடர்பு (!) […]

azad
Activists Arrests CAA Indian Judiciary

“ஜாமா பள்ளி என்ன பாகிஸ்தானா? போராடுவதில் என்ன தவறு?” – பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

இன்று டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சந்திரசேகர் ஆசாத்தின் ஜாமீன் மனு விசாரணையின் போது, கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் டெல்லி காவல் துறையினரை கடுமையாக சாடினார். பீம் இராணுவத் தலைவரான ஆசாதுக்கு “போராட்டத்தின் மூலம் தனது எதிர்ப்பை தெரிவிக்க இந்திய அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது ” என்று கூறினார். நீதிபதியின் சரமாரியான கேள்விகள்: “தர்ணாவில் ஈடுபடுவதில் என்ன தவறு உள்ளது ? எதிர்ப்பு தெரிவிப்பதில் என்ன தவறு? எதிர்ப்பை வெளிப்படுத்துவது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமை […]

NPR CAA NRC
CAA NPR NRC

CAA,NRC,NPR பற்றிய முழுமையான தகவல்கள் ..

இந்திய மக்களால் அதிகம் பேசப்படும் வார்த்தை CAA, NRC, NPR. இதை பற்றி பல தரப்பினரும் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளனர். ஆதாரபூர்வமான தகவல்கள் மூலம் CAA, NRC, NPR பற்றி முழுமையாக அறிந்து கொள்வது தான் இந்த ஆக்கத்தின் நோக்கம். அரசு ஆவணங்கள் மற்றும் அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களில் உள்ள தகவல்களை கொண்டு தொகுக்கப்பட்ட செய்திகள் இவை. (ஆதாரங்கள் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது சரிபார்த்து கொள்ளவும்) 1955-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம் (Citizenship Act, 1955) […]

ABVP losses
Students Uttar Pradesh

உபி : சமஸ்கிருத பல்கலையில் போட்டியிட்ட 4 சீட்டுகளிலும் ஏபிவிபி படுதோல்வி!

உபி வாரணாசியில் உள்ள சம்பூர்நாடு சமஸ்கிருத விஸ்வவித்யாலயாவில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் பாஜக வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) இந்திய தேசிய மாணவர் சங்கத்திடம் (என்எஸ்யுஐ) தோல்வியடைந்தது. முன்னதாக 2019 தேர்தலில் 4 சீட்டுகளிலும் வெற்றி பெற்ற ஏபிவிபி தற்போது அனைத்து சீட்டுகளையும் இழந்துள்ளது. வாரணாசி என்பது பிரதமர் மோடியின் சொந்த தொகுதியாகும், கூடுதலாக இந்துத்துவ ஆதித்யநாத் ஆளும் மாநிலமாகவும் இருப்பதால் இது இந்துத்துவாவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏபிவிபி […]

Jobless sucide
Indian Economy

வேலைவாய்ப்பின்மை, வறுமையினால் அனுதினமும் 10 பேர் உயிரழப்பு ! – அதிர வைக்கும் புள்ளி விவரம்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையின் காரணத்தால் தினம் 9 ஆண்கள், 1 பெண் என்ற விகிதத்தில் மரணித்துள்ளனர். தேசிய குற்றப் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) வெளியிட்ட தற்கொலைகள் குறித்த சமீபத்திய தரவுகளிலிருந்து கீழ்கண்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2018ம் ஆண்டில் மட்டும் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். இதே 2017 ல் 1.3 லட்சம் என இருந்தது. எனவே 2018ம் ஆண்டில் 3.6% தற்கொலை […]

JNU terror
JNU Students

ஜே.என்.யூ வன்முறை : ‘அரசாங்க ஆதரவுடன் நடந்தது’ – உண்மை கண்டறியும் குழு அறிக்கை !

‘ஜனவரி 5 ஆம் தேதி ஜே.என்.யூ பல்கலை வளாகத்திற்குள் நடந்த தாக்குதல் “அரசாங்க ஆதரவுடன் ” நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ஜகதேஷ் குமாரை உடனே நீக்க வேண்டும், மேலும் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட வேண்டும்’ எனவும் ஜே.என்.யூ வன்முறை தொடர்பாக நியமிக்கப்பட்ட காங்கிரசின் உண்மை கண்டறியும் குழு பரிந்துரைத்துள்ளது. நான்கு பேர் கொண்ட குழு நியமனம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) அரங்கேறிய வன்முறை குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள காங்கிரஸ் நான்கு பேர் […]

Su swamy
Indian Economy Modi Subramanian Swamy

சு.சுவாமி : மோடிக்கு பொருளாதாரம் புரியல – என்னை நிதி அமைச்சர் ஆக்குங்க!

வியாழக்கிழமை சென்னையில் நடந்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி “பிரதமருக்கு பொருளாதாரம் பற்றிய புரிந்துணர்வு இல்லை” என்றும் நிர்மலா சீதாராமன் பற்றி அதிகமாக ஒன்றும் கூறாமல் இருப்பதே நல்லது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜன் ஒரு பைத்தியக்காரர் : முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பைத்தியக்காரர். அவர் வட்டி விகிதத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தார், […]

Raghuram rajan
Actors CAA

தீபிகா படுகோனே, அசோக் லவாசா, சிஏஏ குறித்து ரகுராம் ராஜன் கருத்து!

தீபிகா படுகோனை ஆதரித்து, முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பாசிச பயங்கரவாத கும்பல் மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அதில் காயம் அடைந்தவர்களை காண பிரபல பாலிவுட் நடிகை தீபிகா ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்திற்கு நேரே சென்றார். தீபிகா படுகோனே : பாசிசவாதிகள் உச்சியில் இருக்கும் இந்த காலத்தில் தைரியமாக முன் வந்து தனது ஆதரவரை தெரிவித்த கதாநாயகிக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், பாஜகவினர் அவரை மிகவும் மோசமாக […]

jharkand ragubar das
BJP Corruption Jharkand

ரூ .100 கோடி ஊழல்: ஜார்க்கண்ட் முன்னாள் பாஜக முதல்வர் மீது வழக்கு பதிவு!

ஜார்க்கண்ட் மொமண்டம் உச்சி மாநாடு தொடர்பான ஊழலில் ஈடுபட்டதாக ஜார்க்கண்ட் முன்னாள் பாஜக முதல்வர் ரகுபார் தாஸ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராஜ்பாலா வர்மா மற்றும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி-Anti Corruption Bureau ) புகார் பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இது குறித்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 கோடி ரூபாய் ஊழல்: உள்ளூர் நாளிதழின் (அவென்யூ மெயில்) ஒன்றின் அறிக்கையின்படி, ஜனசபா என்ற […]

stop rape
Crimes Against Women Dalits Gujarat

குஜராத்: தலித் இளம்பெண்(19) கற்பழித்து கொலை – 4 பேர் கும்பல் அராஜகம் !

கண்டுகொள்ளாத மீடியா: குஜராத்தின் மொடாசாவில் உள்ள சைரா கிராமத்தில் 19 வயது தலித் சமூக பெண் ஒருவரை கடத்தி, கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொலை செய்து, பெண்ணை ஆலமரத்தில் தூக்கிலிட செய்துவிட்டு சென்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. எனவே தான் இது குறித்த செய்தி எந்த தொலைக்காட்சியிலும் முக்கியத்துவத்துடன் காண்பிக்கப்படவும் இல்லை. அலைக்கழித்த போலீஸ்: கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி , எங்கள் வீட்டு பெண் எங்கு தேடியும் காணவில்லை என […]

gujarat sanghi school
CAA Gujarat Students

குஜராத்: CAA வுக்கு ஆதரவாக கடிதம் எழுத கட்டாயப்படுத்தி பிறகு எதிர்ப்பால் பின்வாங்கிய பள்ளி நிர்வாகம்!

குஜராத்தின் அகமதாபாத் கங்காரியா பகுதியில் உள்ள லிட்டில் ஸ்டார் பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் CAA வுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகளை எழுதுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்த பட்டுள்ளனர். கல்லூரி நிர்வாகம் அராஜகம் : “வாழ்த்துக்கள். இந்திய குடிமகனான நான், CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) கொண்டு வந்ததற்காக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன். நானும் எனது குடும்பத்தினரும் இதை ஆதரிக்கிறோம்.” என்ற வாசகத்தை ஆசிரியர்கள் […]