ஜெய்ப்பூர் : “ஒவ்வொரு நாட்டிலும் தேசிய பொக்கிஷம் என்று ஒன்று இருக்கும், நம்முடையது நாட்டின் பொக்கிஷம் இளைஞர்கள் தான்… நம் நாட்டின் இளைஞர்கள் இந்த உலகத்தையே மாற்ற வல்லவர்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் 21 ஆம் நூற்றாண்டு இந்தியா தனது பொக்கிஷத்தை வீணாக்குகிறது. இந்த நாட்டிற்காக உங்களால் ஆனதை செய்வதற்கு கூட இந்த அரசாங்கமும் பிரதமரும் அனுமதிப்பதிலை. இந்த நாட்டின் இளைஞர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள் … பட்டங்கள் பெற்றாலும் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை […]
Author: NewsCap.in Staff
குணால் கம்ராவிடம் சிக்கிக்கொண்டு தள்ளாடிய அர்னப் கோஸ்வாமி…
மோடிக்கு வேண்டியே ரிபப்லிக் தொலைக்காட்சி நடத்திவரும் அர்னப் கோஸ்வாமி வெறுப்பு கருத்துக்களை விதைப்பதில் வல்லவராக அறியப்படுபவர்.. நாள் முழுக்க தொண்டை கிழியும் அளவுக்கு கத்துவது.. முஸ்லிம்கள், தலித்துகள் என ஒடுக்கப்படும் சமூகத்தினருக்கு எதிரான தொடர் வன்ம பிரச்சாரம் என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. இந்நிலையில் இவர் இன்று விமானத்தில் பயணித்த போது அவருடன் பிரபல நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா உடன் சந்திக்க நேர்ந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை அர்னப் . “ கோழை […]
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நாடு முழுவதும் சி ஏ ஏ என் ஆர் சி என் பி ஆருக்கு எதிராக எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மோடி அரசு இந்திய மக்களின் குரலை கேட்டுக்கொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் முக.ஸ்டாலின் ஒரு புது வித போராட்ட வழிமுறையை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்கிற அதிகார ஆணவத்தினால் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உடைக்கும் வகையில் மொழி-பண்பாடு-இனம்-மதம் […]
‘ஷஹீன் பாகில் போராடுபவர்கள் உங்கள் வீடு புகுந்து கொல்வார்கள், கற்பழிப்பார்கள்’ – வெறுப்பை கக்கும் பாஜக எம்பி பர்வேஷ்..
டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஷஹீன் பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்தில் அகற்றப்படுவார்கள் என்று அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் அறிவித்துள்ளார். “போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைவார்கள், உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கற்பழிப்பார்கள்”. என வெறுப்பு பேச்சையும் பேசியுள்ளார் அவர். டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒருபுறம் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது மறுபுறம் CAA […]
உமர் அப்துல்லாவுக்கு ஷேவிங் ரேசர் பார்சல் ; கீழ்த்தரமான, மனிதாபிமானமற்ற காரியத்தை செய்த தமிழக பாஜக!
காஷ்மீர் மக்களின் துயரம்: காஷ்மீர் மக்களின் உரிமையான 370 சட்டப்பிரிவை அம்மாநிலத்துடன் கலந்து பேசாமல் அம்மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக மோடி அரசு நீக்கம் செய்தது. அன்று முதல் இன்று வரை 160 நாட்களுக்கும் மேலாக அங்குள்ள மக்கள் சொல்லொன்னா துயரை அனுபவித்து வருகின்றனர். கோடிக்கணக்கான தொழில்துறைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இணையதள முடக்கம். சின்னஞ்சிறு சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் எந்த வித வழக்கும் சரியான முறையில் பதியப்படாமல் இந்திய முழுவதிலும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள்ளனர். பல்வேறு […]
திருச்சி பாஜக பிரமுகர் கொலை வழக்கு: ‘இஸ்லாமிய பயங்கரவாதிகள், ஜிஹாதிகள்’ என்று பாஜக தலைவர்கள் தொடர் பொய் வெறுப்பு பிரச்சாரம் போலீசாரால் முறியடிப்பு !
திருச்சி பாலக்கரை மண்டல பாஜக துணைத் தலைவராக இருந்தவர் விஜயரகு. இவரை இன்று காலை 6மணி அளவில் ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக பிரமுகரின் கொலையைக் கண்டித்து காந்தி மார்க்கெட் பகுதியில் கடைகளை அடைக்கும்படி பா.ஜ.கவின் காட்டாயப் படுத்தியுள்ளனர். ஊடகங்களில் “மிட்டாய் பாபு” என்பவர் தான் கொலை செய்தது என்று செய்திகள் வெளியாகின. அதே சமயத்தில் வழக்கம் போல பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் […]
தெலுங்கானா: பாஜகவும் காங்கிரஸும் கூட்டணி – மக்கள் அதிர்ச்சி !
ஹைதிராபாத்: மணிகொண்டா நகராட்சியில் டி.ஆர்.எஸ் வெற்றி பெறுவதை தடுக்க பாஜகவும் காங்கிரசும் கைகோர்த்துள்ளன. மொத்தமுள்ள 20 நகராட்சி வார்டுகளில், காங்கிரஸ் எட்டு, பாஜக ஆறு, டிஆர்எஸ் ஐந்து, சுயேட்சை வேட்பாளர் ஒன்று என வெற்றி பெற்றுள்ளனர். பாஜக-காங்கிரஸ் கூட்டணி மாநில அரசியல் வட்டாரங்களில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. மணிகொண்டா நகராட்சிக்கான காங்கிரஸ் பாஜக கூட்டணியின் படி தலைவர் பதவி காங்கிரசுக்கும், துணை தலைவர் பதவி பாஜக வுக்கு என இருண்டு கட்சிகளும் சமரசமாகி உள்ளன. அமங்கலில் பாஜக […]
‘அமித்ஷா மிருகத்தை வரலாறு காறித்துப்பும் ‘ பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் கடும் விமர்சனம்!
டெல்லியில் அமித் ஷா பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது பாஜக ஆதரவாளர்களால் ஒரு சிஏஏ எதிர்ப்பாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்துறை அமைச்சர் அமித் ஷா வை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அமித் ஷா ஒரு விலங்கு என்று குறிப்பிட்ட காஷ்யாப், வரலாறு இந்த மிருகத்தை காறித்துப்பும் என்று கடுமையாக சாடியுள்ளார். என்ன நடந்தது? அமித் ஷா பாஜக […]
“எந்த ஒரு நடவடிக்கை எடுக்கும் முன் மறுபரிசீலனை செய்யுங்கள்” – ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு மோடி அரசு அறிவுறுத்தல் !
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் 751 உறுப்பினர்களில் 626 பேர் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மீதான கடும் கட்டுப்பாடுகள் குறித்து ஆறு தீர்மானங்களை முன்வைத்துள்ளனர். மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் “பாரபட்சமானது” , “அபாயகரமான பிரிவினையை” ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டம் என கூறி 5 பக்கங்கள் கொண்ட தீர்மானம் ஐரோப்பா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின. இது மோடி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து “எந்தவொரு நடவடிக்கையும் […]
பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் மரணம் !
ஐந்து முறை என்.பி.ஏ சாம்பியனும் 18 முறை என்.பி.ஏ ஆல்-ஸ்டார் பட்டத்தை வென்ற கோபி பிரையன்ட் மற்றும் அவருடன் ஹெலிகாப்டரில் பயணித்து கொண்டிருந்த நான்கு பேரும் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். கலிபோர்னியாவின் கலாபாசஸ் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 41 வயதான இவர் 1996 முதல் 2016 வரை லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக விளையாடியதுடன், அமெரிக்க தேசிய அணியுடன் இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும் […]
ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும் விற்க மோடி அரசு முடிவு – வாங்க முன்வருபவர்களுக்கு அழைப்பு..
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களில் 100% பங்குகள் மத்திய அரசு கைவசம் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களின் முழு பங்கையும் ஏலம் விட்டு விற்பதற்கு வேண்டி அழைப்பு விடுத்துள்ளது மோடி அரசாங்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கையும் வாங்க முன்வரும் ஏலதாரர்கள், இந்நிறுவனங்களின் மீதுள்ள மொத்த கடன் சுமையான 58,000 ஆயிரம் கோடியில் ₹23,000 ஆயிரம் கோடிகளை ($3.26 billion) சுமக்க வேண்டும். […]
“தீயில் கிடந்த விறகுகளை கொண்டும் தாக்கினர், ஆபாசமாகவும் சீண்டினார்கள்” – குமுறும் உபி பெண்கள்!!
டில்லி ஷஹீன் பாகில் பெண்கள் தலைமையில் நடந்து வரும் தொடர் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இவர்களை பின்பற்றி போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இடங்களில் ஒன்றுதான் உபி யில் உள்ள எட்டாவா. போலீசாரா அல்லது ? “போலீசார் எங்களை தீயில் எரிந்து கொண்டிருந்த விறகுகளை கொண்டு தாக்கினர். சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் இது தான் உண்மை. விறகின் முன் பக்கத்தில் தீ இல்லை என்றாலும் அது சூடாகவே […]
ஐரோப்பா: 24 நாடுகளை சேர்ந்த 154 அவை உறுப்பினர்கள் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர்..
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் “பாரபட்சமானது” , “அபாயகரமான பிரிவினையை” ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டம் என கூறி 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. போராட்டக்காரர்களை சந்தித்து, சட்டத்தை ரத்து செய்வதற்கான அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என இந்திய அரசாங்கத்கத்தை வலியுறுத்துகிறது இந்த தீர்மானம். தீர்மானம் எப்போது நிறைவேற்றப்படும்? இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) “உலகின் மிகப்பெரிய நிலையற்ற நெருக்கடியைத் தூண்டக்கூடும், […]
பிஹார் : CAA,NRC கணக்கெடுப்பாக இருக்கலாம் என்று எண்ணி குழுவினரை சிறைபிடித்த மக்கள்..
குடியுரிமை எதிர்ப்பு (திருத்தம்) சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) ஆகிவற்றிற்கு எதிராக பீகாரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் பரவி வருவதால், தனியார் ஆராய்ச்சி மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் கணக்கெடுப்புகளை மேற்கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான கணக்கெடுப்பை மேற்கொண்டால் மக்களால் தாக்கப்படலாம் என்ற அச்சமும் மாநிலம் முழுவதும் நிலவுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஆராய்ச்சி அமைப்பின் சார்பாக சர்வே மேற்கொள்ள வந்த சிலரை என்.பி.ஆர் அதிகாரிகள் […]
இந்திய குடியரசு தினத்தன்று அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் சிஏஏ வுக்கு எதிராக பேரணி அறிவிப்பு !
ஜனவரி 26 ஆம் தேதியன்று அமெரிக்காவின் பல நகரங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்யக் கோரி பல்வேறு மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளின் கூட்டமைப்பு சார்பாக எதிர்ப்பு பேரணிகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. பேரணி நடைபெறும் முக்கிய இடங்கள்: வாஷிங்டன் டி.சி. இந்திய தூதரகத்திற்கு அருகிலுள்ள வளாகத்திலிருந்து வெள்ளை மாளிகை வரை .. நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, அட்லாண்டா மற்றும் ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களுக்கு முன்னால் என பல்வேறு இடங்களின் […]