சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எனும் கருப்பு சட்டத்தை கண்டித்து தன்னெழுச்சியாக மக்கள் போராடி வருகின்றனர். ஜனநாயக நாட்டில் அகிம்சாவழியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தை சகித்துக் கொள்ளாத பாசிச அதிமுக அரசு மக்கள் கூட்டத்தை கலைக்க காவல்துறையை ஏவிவிட்டது. காவல்துறை நடத்திய தடியடியால் ஆண்கள் – பெண்கள் என பலர் காயமடைந்ததுடன் தடியடியால் ஏற்பட்ட சூழலில் அப்பகுதியில் வசித்து வந்த முதியவரின் உயிரும் பலியாகியுள்ளது. இத்தகைய கோரத்தாண்டவத்தை ஆடிய அதிமுக அரசு – காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து […]
Author: NewsCap.in Staff
சி.ஏ.ஏ.வை எதிர்த்து அம்பேத்கர் பேரரான பிரகாஷ் டில்லியில் மாபெரும் பேரணி அறிவிப்பு !
மோடி அரசின் சி.ஏ.ஏ.வை எதிர்த்து வருகிற மார்ச் 4 ம் தேதி டில்லியில் பேரணி அணிவகுப்பு நடத்த அம்பேத்கரின் பேரரான பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்துள்ளார். சி.ஏ.ஏ.வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசாங்கம் விற்கக்கூடாது என்றும் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் பேரணி நடத்த உள்ளார் அவர். ‘நாட்டையும், அரசியலமைப்பையும்’ காப்பாற்றுவதே இந்த பேரணியின் நோக்கம் என பிரகாஷ் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் இந்த பேரணி குறித்த […]
மோடி அரசை விமர்சித்த பிரிட்டன் எம்.பிக்கு அனுமதி மறுத்த மோடி அரசு; விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கொடூர அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அவர்..
காஷ்மீர் 370 வது பிரிவு நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மோடி அரசை விமர்சித்த பிரிட்டன் நாட்டு எம்பி டெப்பி ஆபிரகாம்ஸுக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது மோடி அரசு. இ-விசா பெற்று கொண்டு இந்தியா வருவதற்கான அனைத்து தேவையான ஆவணங்களையும் கொண்டு டில்லி விமான நிலையம் அடைந்துள்ளார் டெப்பி. ஆனால் விசா நிராகரிக்கப்பட்டுவிட்டது என அவருக்கு கூறி, அங்கிருந்து வலுக்கட்டாயமாக துபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் உள்ள காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான செல்வி […]
ரூ.20,000 கோடி செலவில் புதிய பாராளுமன்றம், பிரதமர் வீடு உள்ளிட்ட கட்டிடங்களை கட்ட மோடி அரசு முடிவு; ஆனா அதற்கான பணம் இல்லை..
இந்திய பொருளாதாரம் படுமோசமான நிலையில் சரிந்து சென்று கொண்டுள்ள நிலையில் மோடி அரசு மத்திய விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தை ( Central Vista revamp plan) கடந்த ஆண்டு அறிவித்தது. அது என்ன திட்டம் என்று கேட்கிறீர்களா? 20,000 கோடி செலவில் திட்டம் : புதிய முக்கோண வடிவிலான நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதிக்கான புதிய குடியிருப்புகள் மற்றும் சாஸ்திரி பவன், நிர்மன் பவன், உத்யோக் பவன், கிருஷி பவன், வாயு பவன் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை […]
சிஏஏ வுக்கு எதிராக பிப்- 19 சட்டமன்றம் முற்றுகை – எம்.எல் .ஏ தமீமுன் அன்சாரி அறிவிப்பு !
மத்திய அரசின் CAA, NRC, NPR ஆகிய குடியுரிமை தொடர்பான கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மக்கள் இந்தியா முழுதும் ஜனநாயக வழியில் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். பல மாநில அரசுகள் இதற்கு எதிராக சட்டமன்றங்களை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ள நிலையில், நடைபெறும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக, காங்கிரஸ், மஜக, IUML உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தை […]
தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கும்பல் படுகொலை; தடுக்க முயன்ற அவரது தங்கையை குழந்தையுடன் எட்டி மிதித்த மிருகங்கள்!
விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தலித் சமூகத்தை சேர்ந்த 24 வயதான சக்திவேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மேல்ஜாதி என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒருவருக்கு சொந்தமான வயலில் இயற்கை தேவையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை பிடித்து அடித்தே கொன்றுள்ளது ஒரு வெறிபிடித்த கும்பல். இந்த கொடூர சம்பவம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது, இளைஞர் தாக்கப்படுவது தொடர்பான வீடியோக்கள்வைரல் ஆனது. அதற்கு பிறகு வெள்ளிக்கிழமையன்று போலீசார் 7 பேரைக் கைது செய்து, மேலும் […]
அமித் ஷா இல்லம் நோக்கி ஷஹீன் பாக் போராளிகள் பேரணி; அமித் ஷாவின் அழைப்பை ஏற்று செல்லும் போராளிகளை சந்திப்பாரா அமித் ?
கடந்த வியாழனன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ” ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள் உட்பட யாரானாலும் சரி, அவர்கள் என்னுடன் கலந்துரையாடல் நடத்தலாம். அதற்கான வாசல் திறந்தே இருக்கிறது. அனுமதி கோரிய 3 நாட்களுக்குள்ளாக நான் அவர்களை சந்திப்பேன்.” என கூறி இருந்தார். இதனையடுத்து “இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஷாஹீன் பாக் முதல் அமித் ஷாவின் இல்லம் வரை பேரணி நடைபெறும், அங்கு […]
வீதிக்கு வாங்க ரஜினி வெய்யில் குறைந்து அந்தி சாய்ந்துவிட்டது – எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்
நேற்று முன் தினம் சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராடி கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது போலீசார் நடத்திய கொடூர தாக்குதலை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில் இந்திய முஸ்லிம்களுக்கு ஒண்ணுன்னா நான் முதல் ஆளா வீதிக்கு வருவேன் என்ற கருத்து பட சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதை நெட்டிசன்கள் நினைவு கூர்ந்து வீதிக்கு வாங்க ரஜினி என்ற ஹாஷ்டாகை ட்ரெண்டிங் செய்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திர கருத்து தெரிவித்துள்ளார். வீதிக்கு வாங்க […]
“போராடங்களுக்கு போலீசார் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது சட்ட விரோதமானது’ – கர்நாடக உயர் நீதிமன்றம்..
பெங்களூர் மாநகரில் 3 நாள்களுக்கு (Dec 19 to Dec 21) யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் பாஸ்கர் ராவ் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ராஜீவ் கவுடா, சவ்மியா ரெட்டி ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த வியாழ கிழமை (13-02-2020) அன்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரினிவாஸ் அவர்கள், CAA எதிர்ப்பு போராடங்கள் உட்பட எந்த போராட்டங்களும் 3 […]
இந்தியாவில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் – உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் !
டில்லி விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் வெப்பத் திரையிடல் தொடங்குவதற்கு முன்னர் (ஜனவரி மாதத்தின் நடு பகுதியில்) சீனா மற்றும் பிற கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த பல ஆயிரம் பேர்களில் 17 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் உள்ளதாக டில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டில்லியில் கொரோனா வைரசுக்கான விமான நிலையத் திரையிடல் செயல்முறை தொடங்குவதற்கு முன்பு டில்லிக்குத் திரும்பிய பயணிகளைக் கண்டறியும் […]
‘காவல்துறை தவறாக கையாண்டதாலேயே வன்முறை வெடித்தது’ – திமுக எம்பி கனிமொழி!
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று சிஏஏ / என்.ஆர்.சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐபிஎஸ், நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது. தூத்துக்குடியில், ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பலியானபோது, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாக இருந்தவர் கபில்குமார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக கபில்குமார் மீது சிபிஐ மற்றும் ஒரு […]
வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – தொல் .திருமாவளவன் அறிக்கை!
சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் . திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அவர் அறிக்கை விடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம்; தேசிய மக்கள்தொகைப் பதிவேடு; தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமை திருத்தச் […]
ஆம்ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லாவின் வெற்றியை கொண்டாடிய உபியில் உள்ள அவரது குடும்பத்தினர் மீது போலீசார் அராஜகம் !
ஆம் அட்மி கட்சி (ஆம் ஆத்மி) எம்எல்ஏ அமானத்துல்லா கானின் உறவினர்கள் கோவில் தலைமை பூசாரி அஜய் பிஷ்த் சிங் ஆளும் மாநிலமான உபியின் மீரட் மாவட்டத்தில், அக்வான்பூரில் வசித்து வருகின்றனர். அமானத்துல்லாவின் வெற்றியை கொண்டாடிய அவரது உறவினர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர் உபி போலீசார். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ அமானத்துல்லா கான், ஓக்லா தொகுதியில் இருந்து சமீபத்தில் டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரஹம் சிங்கை 71, […]
மதரசா சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மூவர் கைது !
மங்களூர்: சிறுமிகள் மதரசாவுக்கு செல்லும் வழியில் திட்டமிட்டு வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மூன்று நபர்களை பிப்ரவரி 11, செவ்வாயன்று கோனாஜே பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடந்த சம்பவம்: “மூன்று சிறுமிகளும் பிப்ரவரி 10 திங்கள் அன்று பவூர் கிராமத்தில் உள்ள மலாராவில் அமைந்துள்ள மதரசாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மலார் பாலம் அருகே அமர்ந்திருந்த மூன்று […]
அமெரிக்க அதிபருக்காக மோடி அரசு கட்டி வரும் சுவர்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் பிப்ரவரி 24 அன்று இந்தியா வர உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் ட்ரம்பின் விமானம் தரையிறங்க உள்ளது. அவருக்காக சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை இந்திரா பாலத்துடன் இணைக்கும் சாலையில் ஒரு சுவரைக் கட்டி வருகிறது ,அஹமதாபாத் மாநகராட்சி (ஏ.எம்.சி). ஏன் என்கிறீர்களா? இந்த 600 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் சேரி மக்கள் வசிக்கின்றனர். சேரி பகுதி அமெரிக்க அதிபரின் கண்களுக்கு படாமல் இருப்பதற்க்காக தான் மோடி அரசு அவசர […]