“எல்லா முஸ்லிமும் தீவிரவாதியல்ல, ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிமாக இருக்கிறார்கள்” – உடன் படித்த தோழர் ஒருவர் கூறிய இக்கூற்றினால் மனமொடிந்து போனார் ஹாஷ்மி. முஸ்லிம்கள் தீவிரவாதத்தை எதிர்க்கவில்லையா? : முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லையெனில் அவர்கள் ஏன் தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்ற தொடர்ச்சியான கேள்விகளால் உந்தப்பட்டு, இதிலுருக்கும் ஆழ அகலம் என்ன என அலச விரும்பினார் அவர். முஸ்லிம்கள் தீவிரவாதத்தை எதிர்க்கவில்லையா? அல்லது அவர்களில் சில பைத்தியக்கார்ர்கள் செய்த காரியங்களை வெகுவாக கண்டிக்கவில்லையா? உலகளவில் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் […]
Author: NewsCap.in Staff
உபி : கொரோனா நோய் தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் தப்லீகி ஜமாத்தினரை சிறைகளில் அடைக்க உபி முதல்வர் முடிவு ..
உபி : டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் எவருக்கேனும் கொரோனா நோய்த்தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டாலோ அல்லது சந்தேகிக்கப்பட்டாலும் கூட அவர்களை தற்காலிக சிறைகளில் அடைத்து வைக்குமாறு உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அஜய் பிஷ்த் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது. டெல்லியில் நிஜாமுதீன் மர்க்கஸில் பங்கெடுத்த பின்னர் உத்தரபிரதேசத்திற்கு வந்த 3,000 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை மாநில காவல்துறை அடையாளம் கண்டுள்ளது என தலைமைச் செயலாளர் […]
சத்தியம் தொலைக்காட்சிக்கு ஒரு நீதி பாலிமருக்கு ஒரு நீதியா?- மமக தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி!
📍கொரோனா பாதிப்பு காரணமாக சத்தியம் தொலைக்காட்சி முடக்கப்பட்ட நிலையில் பாலிமர் தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 📍சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாலிமர் தொலைக்காட்சி ஊழியருக்கும் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? 📍ஒரு ஊரில் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அந்த ஊரையே முடக்கும் அரசு […]
கொரோனா ரேபிட் கிட் சோதனை முறை திடீர் நிறுத்தம்!
📍ரேபிட் கிட் சோதனை முடிவுகள் துல்லியமான முடிவுகளை தராததால், 2 நாட்களுக்கு சோதனைகளை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. 📍இந்தியாவில் கொரோனா பாதிப்பை PCR சோதனை மூலம் உறுதி செய்து வரும் நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால், கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை விரைந்து பரிசோதிக்க Rapid kit- மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 📍இதன் பரிசோதனை முடிவுகள் அரை மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால், இந்த […]
அரசாங்கத்திடமிருந்தோ அல்லது முதலாளிகளிடமிருந்தோ எந்த உதவியும் கிடைக்காமல் தவிக்கும் பிற மாநில தொழிலாளர்கள்..
லாக்டவுன் காலத்தில் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டாம் என்று முதலாளிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்ட போதிலும், நாடு முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 89 சதவீதம் பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஸ்வான் டீம் பல்வேறு மாநிலங்களில் கிட்டத்தட்ட 12,000 புலம் பெயர் தொழிலாளிகளிடையே ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறது. அதில் கிடைத்த தகவல்கள் இவை: அரசாங்கம் வாக்களித்திருந்தும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு அரசு ரேஷன் இன்னமும் கிடைக்கவில்லை. (இந்த விகிதம் […]
குஜராத்:கொரோனா நோயாளிகளிடையே இந்து, முஸ்லிம் என பிரித்து தனி தனி வார்டில் சிகிச்சை..
அகமதாபாத்: பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக 1,200 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ள அகமதாபாத் சிவில் மருத்துவமனையில், இந்து மற்றும் முஸ்லிம் நோயாளிகளுக்கு தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவின் படியே நோயாளிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் குன்வந்த் எச் ரத்தோட் இந்தியன் எக்ஸ்பிரஸ், செய்தித்தாளிடம் தெரிவித்தார். ஆனால், மாநில துனை முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சருமான நிதின் பட்டேலிடம் விளக்கம் கேட்டால், அப்படி எந்த ஆனையும் பிறப்பிக்கவில்லை என்றும், இதை […]
‘இனி ஒரு மருத்துவர் கரோனா நோயால் இறந்தால், அரசு மரியாதையோடு, குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட வேண்டும்’ – மருத்துவர். இரா.செந்தில்..
உயிர்த் தியாகத்தைப் போற்றுவோம், தீண்டாமையை ஒழிப்போம்! சென்னையில் அப்போலோ மருத்துவர் கரோனா நோயால் இறந்தபோது மயானத்திற்குள் அவருடைய பிணம் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல நேற்று முன் தினம் ஒரு நரம்பியல் மருத்துவர் கரோனா நோயால் இறந்த போது, அவருடைய உடலை எடுத்துச் செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் வாகனம் தாக்கப்பட்டது. அவரோடு வந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவருடைய உடலை தகனம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது.இது தீண்டாமையின் புதிய வடிவம். சாதி அடிப்படையில் பிணங்களுக்கு வழி மறுக்கப்பட்டது. இப்பொழுது நோயின் அடிப்படையில். மனிதர்களுக்குள் […]
இந்தியாவுடனான ஐக்கிய அரபு அமீரகத்தின் நல்லுறவு பாழாகிறதா ? இந்திய தூதரே விளக்கம் அளிக்கும் நிலை ..
அரபு நாடுகளில் தங்கி வேலை பார்த்துக் கொண்டு அங்கேயே சம்பாதித்து அதில் வாழ்ந்து வரும் பல இந்துத்துவாவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அரபிகளுக்கு எதிராகவும் மிகவும் மோசமான கீழ்த்தரமான வெறுப்பு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இத்தனை நாட்களும் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருந்த அரபுலக மக்கள் தற்போது விழித்தெழ துவங்கியுள்ளனர். இதன் விளைவாக அரபுலக பிரமுகர்கள், அரசு குடும்பத்தார், தொழிலதிபர்கள் என பலரும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்கள், இஸ்லாமோஃபோபியா மற்றும் மத வெறுப்பு […]
ஜார்கண்ட்: அன்சாரி மீது கும்பல் வன்முறை தாக்குதல்; உடம்பில் ஒட்டுத்துணியின்றி அழைத்து சென்ற போலீஸ்!
கடந்த ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்த சமயம், ஜார்க்கண்டில் மிருகத்தனமாக இந்துத்துவாவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தப்ரேஸ் அன்சாரியின் கொடூர கும்பல் வன்முறை சம்பவமே இன்னும் நினைவில் இருந்து நீங்காத நிலையில் ஜார்கண்டில் மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்து பிரபல ஊடகமான ‘தி குவின்ட‘ செய்தி வெளியிட்டுள்ளது. ராஜூ அன்சாரி என்ற நபர் திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு ஹசாரிபாகின் கிட்டி என்ற இடத்தில் தாக்கப்படுகிறார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததும், […]
டெல்லி: லாக்டவுனில் வேட்டையாடப்படும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்; கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு 20 க்கும் மேற்பட்ட திரைத்துறையினர் கூட்டறிக்கை..
குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களை எதிர்த்து ஜனநாயக உரிமையின் அடிப்படையில் போராடியதற்காக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை தற்போது டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், மகேஷ் பட், ரத்னா பதக் ஷா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட திரைப்பட பிரமுகர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டறிக்கை ஒன்றை கையொப்பமிட்டு வெளியிட்டுள்ளனர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைத்ததாகக் கூறி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களான மீரன் ஹைதர் மற்றும் சஃபூரா சர்கர் […]
ஆந்திரா: அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்ற முஹம்மத் கவுஸ்; போலீசார் தாக்கியதில் மரணம் ..
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க தடை இல்லை என ஏட்டளவில் சட்டம் வகுத்து மத்திய அரசு கூறினாலும், இந்தியாவின் பல மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் அப்பாவி பொதுமக்களையும் கூட போலீசார் கொடூரமாக தாக்கும் பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. எனினும் எந்த ஒரு சம்பவத்திற்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான ஒரு சம்பவம் ஆந்திரா மாநிலத்தின், குண்டூர் மாவட்டத்தில் […]
ஹைதிராபாத்: அக்கம்பக்கத்தினரால் கைடவிடப்பட்ட ஏழை இந்து; இறுதி சடங்கு மற்றும் உணவு ஏற்பாடு செய்த முஸ்லீம்கள்…
ஹைதிராபாத்: ஐந்து முஸ்லீம் நண்பர்கள் ஒன்றிணைந்து காசநோயால் இறந்த இந்து ஆட்டோ டிரைவர் ஒருவரின் இறுதி சடங்குகளை மேற்கொண்டனர். இறந்தவரின் அக்கம்பக்கத்து வீட்டார் இது கோவிட் -19 மரணம் என்று அஞ்சினர். கைராதாபாத்தைச் சேர்ந்த வேணு முதிராஜ் (50) ஏப்ரல் 16 ஆம் தேதி OGH மருத்துவமனையில் இறந்தார், அவரது இறுதிச் சடங்கிற்காக மறுநாள் அவரது குடும்பத்தினர் உடலை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர் எனினும் அக்கம்பக்கத்து வீட்டார் எந்த உதவியும் செய்ய மறுத்துள்ளனர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதிராஜ் […]
அரபு தாய்மார்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த பாஜக எம்.பி; எதிர்ப்பு வலுத்ததால் பதிவை நீக்கினார் !
கர்நாடக மாநிலத்தின் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா. இவர் சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக தொடர் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருபவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர். மோடியை நேசிக்கவில்லை என்றால் நீங்கள் ஆன்டி இந்தியன் என்பன போன்ற மூடத்தனமான கருத்துக்களை பேசியவர். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு, பாஜக எம்பி தேஜஸ்வி, ட்விட்டரில் பதிவிட்ட ஒரு கேடுகெட்ட ட்வீட் தற்போது அவரை கடும் சிக்கலில் தள்ளி உள்ளது. “கடந்த சில நூற்றாண்டுகளாக 95% […]
முஸ்லிம் என்பதால் பிரசவம் பார்க்க மறுப்பு; களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ..
காங்கயேம் :காங்கயத்தை சேர்ந்தவர் பல்கீஸ். நிறைமாத கர்ப்பிணியான அவர் தனது கணவரை அழைத்து கொண்டு திவ்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் முஸ்லிம் என்ற காரணத்தால் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இருவரும் வழக்கமாக பரிசோதனை செய்து வந்த சென்னிமலை ரோடு காங்கேயத்தில் அமைந்துள்ள திவ்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பிரசவம் பார்க்க வேண்டிய நாள் என்பதால் மருத்துவமனையில் அட்மிட் செய்யும் நோக்குடன் சென்றுள்ளனர். எனினும் கடந்த 8 மாதங்களாக (கொரோனா குறித்து முஸ்லிம்களுக்கு […]
அரபு நாடுகளில் இருந்து கொண்டு இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை ..
ஜி.சி.சி.யில் பணிபுரிபவர்கள் முஸ்லிம்கள் மற்றும் நபிகள் நாயகம் ஆகியோருக்கு எதிராக வெறுப்பை பரப்புகின்ற அனைத்து இந்துத்துவாவினர் பெயர்களையும் பட்டியலிடுமாறு சவுதி அறிஞர் ஆபிதி சஹ்ரானி பின்பற்றுபவர்களைக் கேட்டுக்கொண்டார். அவர் #Send_Hindutva_Back_home என்ற ஹேஸ் டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். மற்றொரு ட்வீட்டில், வளைகுடா நாடுகளில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் சிலர் #COVID__19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து உதவிகளும் சிகிச்சைகளும் இலவசமாக இங்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்துத்துவா பயங்கரவாத கும்பல்கள் முஸ்லீம் குடிமக்களுக்கு எதிராக […]