குவாஹாட்டி: அசாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய் தெரிவித்துள்ளார்.
“முதலமைச்சர் பதவிக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியலில் ரஞ்சன் கோகோயின் பெயர் இருப்பதாக நம்பத்தகுந்த வாட்டாரங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன். அஸ்ஸாமிற்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்க படலாம் என்று நான் சந்தேகிக்கிறேன், ” என்று கோகோய் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியால் மாநிலங்களவைக்குச் செல்ல ஒப்பு கொள்ள முடியுமானால், பாஜகவின் அடுத்த ‘வருங்கால’ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதை அவர் ஒப்புக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
ராமர் கோவில் தீர்ப்பில் கோகோய் மீது பாஜக ஹாப்பி :
“இது எல்லாமே அரசியல் தான். அயோத்தி ராம் மந்திர் வழக்கு தீர்ப்பு தொடர்பாக ரஞ்சன் கோகோயை பாஜக பொருந்தி கொண்டுள்ளது.. பின்னர் படிப்படியாக அவர் மாநிலங்களவை வேட்புமனுவை ஏற்றுக்கொண்டு அரசியலில் நுழைந்தார்.
அவர் ஏன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை மறுக்கவில்லை? மனித உரிமை ஆணையம் அல்லது பிற உரிமை அமைப்புகளின் தலைவராக இருந்திருக்க முடியும். அவருக்கு அரசியல் லட்சியம் உள்ளது, அதனால்தான் அவர் நியமனத்தை ஏற்றுக்கொண்டார், ” என்று தருண் கோகோய் கூறினார்.