Delhi Hindutva Lynchings

டில்லி: சிஏஏ எதிர்ப்பு வாசகம் கொண்ட தொப்பியை அணிந்திருந்த பைசலை மதுபாட்டிலால் தாக்கிய பாசிச கும்பல்

கிழக்கு டெல்லியின் ராணி கார்டன் வட்டாரத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை கொண்ட தொப்பியை அணிந்திருந்த 22 வயதான முஸ்லீம் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளார்.

‘பாகிஸ்தானுக்கு போ, இந்தியாவில் உனக்கு இடமில்லை ‘ :

சம்பவம் நடைபெற்ற அன்று மாலையில் முஹம்மத் பைசல் பூங்காவில் நடந்து கொண்டிருந்துள்ளார். அப்போது பைசலை அணுகிய பாசிச கும்பல் ஒன்று “தலையில் சிஏஏ வுக்கு எதிரான வாசகங்களை கொண்ட தொப்பியை ஏன் அணிந்துள்ளாய்?” என கேட்டு, அதை கழற்றுமாறு மிரட்டியுள்ளனர். எனினும் பைசல் தொப்பியை கழற்ற மறுத்துவிட்டார். அதனால் அந்த கும்பல் மேலும் மூர்க்கம் ஆனது.

பைசலை நோக்கி தீய சொற்களை கொண்டு வசைபாடி. ” நீ ஒரு முஸ்லிம். நீ பாகிஸ்தானுக்கு போ, இந்தியாவில் உனக்கு இடமில்லை” என கூறி சரம்வாரியாக தாக்க ஆரம்பித்துள்ளது அந்த பாசிச கும்பல். பிறகு ஒரு கட்டத்தில் கைகளில் வைத்திருந்த மதுபாட்டிலை கொண்டு பைசலின் தலையில் தாக்கியுள்ளது பாசிச கும்பல். உடனே பைசல் மயங்கி கீழு விழுந்துள்ளார். நடந்த இந்த சம்பவத்தை யுனைடெட் அகைன்ஸ்ட் ஹேட் (யுஏஎச்) என்ற அமைப்பை சேர்ந்த காலித் சைஃபி விளக்கியுள்ளார்.

https://twitter.com/UAH_India/status/1223284414114881536

உதவ யாருமில்லாமல் பைசல் :

சுமார் அரை மணி நேரமாக பைசலுக்கு உதவ யாருமே இல்லை. “அரை மணி நேரத்திற்குப் பிறகு சுயநினைவு திரும்பிட பைசல் தனது நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிறகு அவரது நண்பர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அவரை லைஃப் லைன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.” இந்த சம்பவம் பற்றி அறிந்த பின்னர் மருத்துவமனையை அடைந்துள்ளார் காலித் சைஃபி.

“நான் தலைவலி மற்றும் அமைதியின்மையால் அவதிப்படுகிறேன், அவர்கள் என்னை ஒரு கண்ணாடி பாட்டிலால் தாக்கினர்.என் கையும் வீங்கியிருக்கிறது” என்று பைசல் கேரவன் டெய்லிக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிஏஏ வுக்கு எதிரான தொடர் உள்ளிருப்பு எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு இடம் தான் குரேஜி. அங்கு பைசல் தன்னார்வு (யுஏஎச்) அமைப்பின் சார்பாக அங்கு உள்ள மக்களுக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இதற்கு அருகில் உள்ள இடத்தில் தான் சம்பவம் நடைபெற்றுள்ளது.

FIR பதியப்படவில்லை :

இந்த சம்பவம் குறித்து கீதா காலனி போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். எனினும் இந்த ஆக்கத்தை நாம் பதிவேற்றும் செய்யும் வரை இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவர்களின் தொடர் வெறுப்பு மற்றும் வன்முறை பிரச்சாரம் மற்றும் கோஷங்களின் காரணத்தால் அங்குள்ள சாமானிய மக்களளும் மூளைச்சலவை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.