BJP Crimes Against Women Gujarat

குஜராத் : பாஜக அமைச்சர் சட்டவிரோதமாக பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு !

குஜராத் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான அர்ஜுன்சின் சவுகான் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் சட்ட விரோதமாக பெண்ணை அடைத்து வைத்தது தொடர்பான புகார்களை குஜராத் மாநில கெடா போலீசார் விரைவில் விசாரிக்கவுள்ளனர்.

காவல்துறை விளக்கம்:

கெடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவி மிஸ்ரா ஐஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில், “மெஹ்மதாபாத் தாலுகாவின் ஹல்தர்வாஸ் கிராமத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து எங்களுக்கு ஒரு புகார் வந்துள்ளது. புகார்தாரரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக அடைத்து வைத்தது போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணையை துவக்க உள்ளனர். குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால். , குற்றவியல் நடைமுறை பின்பற்றப்படும்.”

புதன்கிழமை, ஹல்தர்வாஸ் கிராமத்தின் முன்னாள் சர்பஞ்ச் ஒருவர் டிஎஸ்பியிடம் புகார் ஒன்றை அளித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் சர்பஞ்ச், “(பாஜக) ஊரக வளர்ச்சி அமைச்சர் அர்ஜுன்சின் சவுகான் தனது மனைவியை சட்டவிரோதமாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பல வருடங்ககளை பாலியல் சீண்டல்:

” அர்ஜுன்சிங் 2015 இல் பாஜகவின் மாவட்டக் குழுத் தலைவராக இருந்தபோது என் மனைவியை தொடர்பு கொண்டார். அவர் என் மனைவியை தாலுகா பஞ்சாயத்து வேட்பாளராக முன்மொழிந்தார், அவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 மற்றும் 2021 க்கு இடையில், கட்சி கூட்டங்கள் என்ற பெயரில் அர்ஜுசின் அவர்களால் பல்வேறு இடங்களுக்கு அழைக்கப்பட்ட எனது மனைவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்போதைய மாவட்டத் தலைவர் எனது மனைவியை மற்ற செல்வாக்கு மிக்க தலைவர்களுடன் படுக்க வற்புறுத்தினார்.” என ஹல்தர்வாஸ் கிராமத்தின் முன்னாள் சர்பஞ்ச் புகாரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்திலும் பாலியல் லீலைகள்?:

“கொரோனா நோய்தொற்று அதிகமாக பரவிக்கொண்டிருந்த போது தான் பட்ட சொல்லொண்ணா துயர் குறித்து என் மனைவி என்னிடம் கூறினார். அர்ஜுன்சின் எனது மனைவியை சட்டவிரோதமாக தனது இடத்தில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சவுகான் மீது கிரிமினல் புகாரை பதிவு செய்யும்படி என் மனைவியைக் நான் கேட்டு கொண்ட போது, ​​​​அவர் ஒரு சக்திவாய்ந்த நபர் என்றும் நமது குடும்பத்துக்கு தீங்கு விளைவிக்கலாம் என்றும் கூறி அவர் மறுத்துவிட்டார்.” என்கிறார் அந்த முன்னாள் சர்பஞ்ச்.

கடந்த இரண்டு மாதங்களாக, மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு கிராமத்தில் வசித்து வருவதாகவும் சர்பஞ்ச் மேலும் கூறினார்.

இந்த விவகாரத்தில் அமைச்சர் அர்ஜுன்சின்கின் பதிலைப் பெற ஐஏஎன்எஸ் முயற்சித்தபோது, ​​அவரை அணுக முடியவில்லை.