சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உபி முஸ்தஃபாபாத்தின் பச்செண்டா பகுதியில் அமைந்துள்ள ஜந்தா இன்டர் கல்லூரி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான செவ்வாய்க்கிழமை மெனு படி பருப்பு-அரிசி மதிய உணவாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்படும் அந்த மதிய உணவில் செத்த எலி இருந்த காணொளி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இவர்களோடு சேர்ந்து உணவருந்திய ஒரு ஆசிரியர் உட்பட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6முதல் 8வது படிக்கும் மாணவர்கள். உ.பி யில் மதிய உணவுத் திட்டத்தில் சமைப்பதற்காக ஜன் கல்யாண் சன்ஸ்தா விகாஸ் கமிட்டி என்ற அரசு சாரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஜன் கல்யாண் சன்ஸ்தா தான் அன்றைய மதிய உணவையும் தயார் செய்திருக்கிறார்கள்.
உ.பி பள்ளிகளில் கடந்த வாரம் 1லிட்டர் பாலை 81மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர், இதற்கு முன்பு ரொட்டிக்கு உப்பு உணவாக வழங்கிய கொடூரமும் அரங்கேறியது . இந்த அவலத்தை படம் பிடித்து ஊடகத்தில் வெளியிட்ட ஊடகவியலாளர் மீது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி பாஜக வின் யோகி ஆதித்யநாத்தின் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உபி யில் நடந்து வரும் இவ்வாறான தொடர் சம்பவங்களால் சமூக வளைதளங்களில் உபி பாஜக அரசு கண்டனத்துக்கும் கேலிக்கும் ஆளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.