உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பராலி கிராமத்தில் ஷாருக் என்ற 19 வயது இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முசாபர்நகரில் வசிப்பவரும் கூலித் தொழிலாளியுமான ஷாருக் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரும் அவரது நண்பரும் வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, நீங்கள் திருடர்கள் என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கப்பட்டதாக ஷாருக்கின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட தரம்வீர் மற்றும் ஓம்பல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் திருட்டு குற்றச்சாட்டை மறுக்கும் ஷாருக்கின் குடும்பத்தார், இது ஒரு குறிவைக்கப்பட்ட தாக்குதல் என கூறுகின்றனர்.
“எனது அண்ணன் இரும்பு கம்பிகள் கட்டும் வேலையைச் செய்து வந்த ஒரு தொழிலாளி. இவர் புதன்கிழமை இரவு மிராக்பூர் கிராமத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஏற்கனவே சிலர் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஷாருக் மற்றும் அவரது நண்பர்களை தடுத்து நிறுத்தி துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர், ”என்று ஷாருக்கின் உறவினர் தில்ஷாத் கூறுகிறார்.
சஹரன்பூர் எஸ்எஸ்பி விபின் தடா கூறியதாவது: தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகள் இருவரையும் நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். தரம்வீர் மற்றும் ஓம்பல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்”,என்றார்.