முசாபர்நகரில் பள்ளிவாசல் இமாமாக பணி புரிபவர் இம்லாக்-உர்-ஹ்மான். இவர் தனது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரை நெருங்கிய குண்டர்கள் , தொப்பியை கழற்றி எரிந்து , கடுமையாக அவரை தாக்கி, தாடியையும் பிடித்து இழுத்துள்ளனர்.
பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கியதர்காக 12 பேர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக PTI தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை(13.7.19) முசாபர்நகர் மாவட்டத்தில் இமாம் தனது மோட்டார் சைக்கிளில் தன் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
“முதல் கட்ட விசாரணையில் உடல் ரீதியான தாக்குதல் நடந்திருப்பதாக தெரிகிறது ” என்று எஸ் .ஐ ஷைலேஷ்குமார் பாண்டே கூறினார். மேலும் “ இமாமின் புகாரின் அடிப்படையில் 12 இளைஞர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. விசாரணையின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ” என்றார்.
முசாபர்நகரில் வசிக்கும் இம்லாக்-உர்-ரஹ்மான் தனது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது சுமார் 12 குண்டர்கள் திடீரென அவரை வழிமறித்து, தாக்கி, தாடியையும் பிடித்து இழுத்து “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயபடுத்தினர் என்று பாதிக்கப்பட்ட இமாம் ரஹ்மான் கூறினார்.
தாடியை மழித்துவிட்ட பின்னர் கிராமத்திற்குள் செல்லுமாறு குண்டர் கும்பல் கூறியதாக இமாம் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அங்கு வந்த உள்ளூர்வாசிகள் இருவரால் தான் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்று இன்னும் உறுதி செய்யபடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இது ஒன்றும் முதல்முறை இல்லை,இதேபோன்ற வழக்கை முசாபர்நகரில் இதே இமாம் பதிவு செய்திருந்ததாகவும், பின்னர் அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டது என்றும் காவலர் பாண்டே கூறினார்.
உத்தரபிரதேசத்தின் உன்னாவோவில் உள்ள ஜி.ஐ.சி மைதானத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடாததற்காக பாஜக,பஜ்ரங் தல் இயக்கத்தை சார்ந்தவர்கள் மதரஸா மாணவர்களை தாக்கிய சம்பவம் நடந்து மூன்று நாட்களே ஆகியுள்ள நிலையில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.