உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில், ஆகஸ்டு 10 அன்று, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களுக்கும் , கோவில் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில், பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பிஜேஒய்எம்) தொண்டர்களுக்கும், கோயில் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையே புதன்கிழமை கைகலப்பு ஏற்பட்டது, அதன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இன்று காலை தனது ஆதரவாளர்கள் சிலருடன் வெறுப்பு பேச்சாளராக விமர்சிக்கப்படும் BJYM இன் தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா மகாகாலேஷ்வர் வந்தடைந்தார். அப்போது தான் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது
கோயிலுக்குள் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர் :
அவரது வருகையின் போது, தேஜஸ்வி சூர்யாவுடன் மாநிலத் தலைவர் வைபவ் பன்வார் மற்றும் பிற அதிகாரிகள் கருவறைக்குள் உள்ள நந்தி மண்டபத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். இதனால் கோவிலுக்குள் ஒரு பெரும் நெரிசலை ஏற்படுத்தியது, இதனால் பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட்டு BJYM தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளே செல்வதையும், நெறிமுறைகளை மீறுவதையும் தடுக்க முயன்றனர்.
தடுப்புகளை வீசியெறிந்த பாஜகவினர்:
இதனால் ஆத்திரம் அடைந்த தேஜஸ்வி ஆதரவாளர்களுக்கும், கோயில் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததை அங்குள்ள பாதுகாவலர் ஒருவர் கேமராவில் பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். கோவிலின் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதுடன் மட்டுமல்லாமல் பாஜக எம்பி தேஜஸ்வியின் ஆதரவாளர்கள் கோவில் கருவறைக்குள் நுழைவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வலுக்கட்டாயமாக அகற்றினர். தற்போது இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 நாட்களில் BJYM சம்பந்தப்பட்ட இரண்டாவது வன்முறை நிகழ்வு:
BJYM உறுப்பினர்கள் அடாவடியில் ஈடுபட்ட இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் உள்ள சலூனில் செவ்வாய்க்கிழமை மூன்று பாஜக தொண்டர்கள் ஒரு ராணுவ வீரரை தாக்கிய சம்பவம் அரங்கேறியது. தினேஷ் கே என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் , தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான ரிதுராஜ் சதுர்வேதி, பிஜேஒய்எம்மின் தீன்தயாள் மண்டல தலைவர் என்று கூறினார்.
பாஜக வினரால் தாக்கப்பட்ட ராணுவ வீரர்:
“(தாக்கியவர்) அவர் ரிதுராஜ் சதுர்வேதி என்கிற பச்சு, எனக்கு மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை. எனக்கு ஒரு முடிதிருத்தும் கடை உள்ளது.. அந்த கடையில் அமர்ந்திருந்த போது திடீரென மூவரும் உள்ளே நுழைந்து என்னை தாக்கினார்கள். என்ன காரணத்திற்காக என தெரியாது,” என்று பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கூறினார். உள்ளூர் போலீசார் சம்பவ இடத்தில இருந்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக வினர் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில், சதுர்வேதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.