உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் 38 வயது தலித் சமூக பெண்ணை வியாழக்கிழமை அன்று மானபங்கப்படுத்த முயன்றதாக உயர் சாதி சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
“நான் அந்த இடத்தை அடைந்தபோது, அவர்கள் என் மகன்களை தாக்குவதை கண்டேன், என் மகன்களை விட்டுவிடும்படி அவர்களிடம் மன்றாடினேன், ஆனால் அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை. மாறாக ஜாதி ரீதியாக இழிவாக திட்டினார்கள். அவர்களில் ஒருவர் எனது ஆடைகளைக் களைந்து, கழற்ற முயன்றார்...” என்று பாதிக்கப்பட்ட தலித் சமூக பெண் கூறினார்.
மேலும் உயர் சாதியினர் தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் ஆனால் தோட்டாக்கள் அவர்கள் மீது படாததால் உயிர் தப்பியதாகவும் தலித் சமூக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மோதலில் இருவர் காயமடைந்ததாக எஸ்பி (ஊரக) பலாஷ் பன்சால் தெரிவித்தார். மேலும் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.