புதுடெல்லி: சமீப காலமாக இந்தியாவில் மத நல்லிணக்கதிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக மிகப்பெரிய மற்றும் பழமையான கிறிஸ்தவ அமைப்பான அகில இந்திய கத்தோலிக்க யூனியன் (AICU) புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை ஆரம்பத்திலேயே தக்க முறையில் கட்டுபடுத்த தவறினால், அது தேசிய அமைதி மற்றும் சேதத்திற்கு சொல்லொணாத் தீங்கு விளைவிக்கும் என்றும் கிறிஸ்தவ அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த போக்கை மாற்றியமைக்கவும், இலக்கு வன்முறையை தடுக்கவும் அரசாங்கம் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புகளால் கூட்டாக சேர்ந்து மேற்கொள்ளப்படும் இலக்கு வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப் பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதல்வர்கள் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று 103 வயதான கத்தோலிக்கக் குழுவின் தேசியத் தலைவரான லான்சி டி குன்ஹா அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக ஆளும் பல மாநிலங்களில் இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மனசாட்சி படி செயல்படவும் சுதந்திரமாக வேலைகளில் ஈடுபடவும் மற்றும் விரும்பும் சமயத்தை பின்பற்றவும் மத பிரச்சாரம் செய்யவும் உரிமை களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை குறித்து கீழ்வரும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கட்டாய மதமாற்றம் மற்றும் மோசடி மூலம் மதமாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற சாக்குப்போக்கில் வேறுபட்ட மதங்களை பின்பற்றுபவர்களுக்கு இடையிலான திருமணங்கள் குற்றமாக்கபட்டுள்ளன. இந்த மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் ஹரியானாவில் மிக சமீபத்தியவை, சிறுபான்மை சமூகங்கள், அவர்களின் மதகுருமார்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களை பயமுறுத்துவதற்கு கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பேட்டைக்காரர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அதிகாரம் அளித்ததுள்ளன .” என குன்ஹா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்சி பிரிவின் கீழ் தலித் கிறிஸ்தவர்களின் இடஒதுக்கீடு பிரச்சினையை எழுப்பிய அவர், கத்தோலிக்க யூனியன், மற்ற கிறிஸ்தவ குழுக்களுடன் சேர்ந்து, தலித் கிறிஸ்தவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பை மறுக்கும் கொடூர சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போராடி வருவதாக கூறினார். மேலும் சீக்கிய மற்றும் பௌத்த மதத்தவர், எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சலுகை தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கப்டுவது குறித்து சுட்டி காட்டியுள்ளார்.
மத சிறுபான்மையினருக்கு எதிரான இலக்கு வன்முறைக்கு வழிவகுப்பதாகக் கூறி, மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களுக்கு அவர் வலுவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
“AICU இப்போது மற்ற மதக் குழுக்கள் மற்றும் சிவில் சமூக இயக்கங்களுடன் இணைந்து அரசியலமைப்பிக்கு எதிராக உள்ள மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை எதிர்த்தும், இலக்கு வன்முறையை எதிர்த்தும் தொடர்ந்து போராடும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பிரிவினை, 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, சாதியின் பெயரால் இரத்தக்களரி, மற்றும் ரத யாத்திரை, பாபர் மசூதி இடிக்கப்பட்டது என அனைத்தையும் கத்தோலிக்க சபை கண்டு வந்துள்ளதாகவும். இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு இந்த தேசம் எப்போதும் அமைதிப் பாதைக்கு திரும்பி வந்து, அதன் சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற விளிம்புநிலை சமூகங்களின் எதிர்காலம் இந்திய அரசியலமைப்பு மற்றும் கலாச்சாரத்தின் கீழ் பாதுகாப்பானது என்று உறுதியளித்துள்ளது.” என குறிபிட்டுள்ளார்.
“எந்த தேசத்தின் வரலாறும் பெரும் வன்முறையால் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலான தேசங்கள், குறிப்பாக இந்தியா போன்ற பண்டைய நாகரீகங்கள், அந்த நெருப்பிலிருந்து தோன்றி அமைதி மற்றும் வளர்ச்சியின் முன்னோடிகளாக மாறியுள்ளன,” என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
வரலாற்றைத் தோண்டி அதன் பயங்கரங்களைத் தணிப்பதாலோ அல்லது அதன் காயங்களை மீண்டும் இரத்தம் கசியும் வரை துடைப்பதாலோ நல்லது எதுவும் வராது. மற்ற நாடுகள் செய்த தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், இது அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பை அழித்து, அவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட முறை விளிம்பிற்கு கொண்டு வந்தது.
அமைதி மற்றும் நல்லுறவை வலுப்படுத்த அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று லான்சி டி குன்ஹா கேட்டுக் கொண்டார்.
“அவர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து விலகி இருக்க முடியாது. கத்தோலிக்க ஒன்றியம் அமைதி, மத மற்றும் சமூக குழுக்களுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் நமது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி செயல்பட உறுதிபூண்டுள்ளது”. என அந்த அறிக்கை நிறைவு பெறுகிறது.