கோவையில் கடந்த 18ம் தேதி செல்வபுரம் பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் அதை இரண்டு பேர் மறைந்து நின்று கற்களை கொண்டு தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய கோயிலை இடிக்க சம்பவ இடத்திற்கு வந்த கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு எதிராக இந்து முன்னானியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செல்வபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை அகற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இருவர் அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
அதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து கண்ணாடியை உடைத்த நபர்களை தேடி வந்தன நிலையில், குற்றவாளிகள் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் வயது 19, ராஜேந்திரன் வயது 20, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் கல்லூரியில் படிக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் பேருந்தை கல் வீசி உடைத்ததை ஒத்துக் கொண்டனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.