ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் அனைத்துப் பணியாளர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என உருது மொழி ஊக்குவிப்பிற்கான தேசிய கவுன்சில் (என்.சி.பி.யூ.எல்) உத்தரவிட்டுள்ளது.
மோகன் பகவத் எழுதியுள்ள ’முஸ்தக்பில் கா பாரத்’ புத்தகத்தின் உருது பதிப்பு வெளியிடுட்டு விழாவில் கலந்து கொள்ள பணியாளர்க்ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள தவறுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மார்ச் 31 ஆம் தேதி மத்திய உயர் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை லோதி சாலையில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் நடைபெறும் புத்தக விழாவில் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உருது எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களில் ஒரு பகுதியினர் பகவத்தின் புத்தகத்தை வெளியிட்டு ஊக்குவிக்கும் என்.சி.பி.யு.எல் இம்முடிவை கண்டித்துள்ளனர். என்.சி.பி.யு.எல் இன் முன்னாள் இயக்குநரும், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் (PWA) தலைவருமான பேராசிரியர் அலி ஜாவேத்
“இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தைத் தகர்த்தெறியும் மற்றொரு முயற்சி.”தனது காலகட்டத்தில் அல்லது அதற்கு முன்னர் கூட இது கற்பனைக்கும் எட்டாதது,ஆர்.எஸ்.எஸ் போன்ற ஒரு பிளவு சக்தியின் சித்தாந்தத்தை ஊக்குவிக்க என்.சி.பி.யு.எல் இன் தளம் பயன்படுத்தப்படுவது வெட்கக்கேடானது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் பலர் சபையிலிருந்து நிதி உதவி பெறுவதால் உருது சமூகத்தைச் சேர்ந்த பலர் அதற்கு எதிராகப் பேசவில்லை” என தெரிவித்துள்ளார்.
பிரபல உருது கவிஞரும் டெல்லி உருது அகாடமியின் முன்னாள் துணைத் தலைவருமான மஜித் தியோபண்டி, கூறுகையில், கவுன்சிலின் இம்முடிவு NCPUL இன் நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகும் என குறிப்பிட்டார். “இது ஒரு அமைப்பின் சித்தாந்தத்தை கொண்டு செல்லும் ஒரு புத்தகம், என்.சி.பி.யு.எல் விதிகள் மற்றும் நெறிமுறைகளை அப்பட்டமாக மீறுபடுகிறது” என்று உருது கவிஞரும் டெல்லி உருது அகாடமியின் முன்னாள் துணைத் தலைவருமான மஜித் தியோபண்டி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு தெரிவித்தார்.