குஜராத்தில் கோவிட் -19 தாறுமாறாக பரவி வரும் நிலையில், பற்றாக்குறையையின் காரணத்தால் 34 வென்டிலேட்டர்கள் குப்பை லாரி ஒன்றில் சூரத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
திங்களன்று முதல் முறையாக 3,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை அதிகமாகி உள்ளது.
குப்பை லாரியில் வெண்டிலேட்டர் :
மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் (இயந்திரத்தின் காற்றுவாரி) பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு குஜராத் அரசு 34 வென்டிலேட்டர்களை வல்சாட்டில் இருந்து சூரத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சூரத் மாநகராட்சி வால்சடில் இருந்து வென்டிலேட்டர்களைப் பெற குப்பை லாரி ஒன்றை அனுப்பியது.
கலெக்டர் விசாரணை :
சூரத் மாநகராட்சியால் அனுப்பப்பட்ட வாகனத்தில் வென்டிலேட்டர்கள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் கிடைத்ததாக வல்சாத் கலெக்டர் ஆர்.ஆர்.ராவல் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் இதுவரை 3,21,598 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.