கேரளாவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான தனது அறிக்கையை பாஜக புதன்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கையில் (இல்லாத) லவ் ஜிஹாதுக்கு எதிராக ஒரு சட்டம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள், நிலமற்ற ஒவ்வொரு எஸ்சி / எஸ்டி குடும்பத்திற்கும் ஐந்து ஏக்கர் நிலம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு நபருக்கு வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் சபரிமாலாவின் மரபுகளைப் பாதுகாப்பதற்காக சட்டத்தை இயற்றுவோம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் கேரளாவில் உள்ள ஒற்றை பாஜக எம்.எல்.ஏ சொன்னது போல இந்த வாக்குறுதிகளை அத்தனை லேசில் கேரள மக்கள் நம்புவது கடினம்.