குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அக்கடிதத்தின் அடிப்படையில் சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தயாரா என்று ஆளும் சிவசேனா செவ்வாய்க்கிழமை பாஜக விடம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதனிடையயே மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளும் சிவசேனா கட்சி செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தது. அதில் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தெரிவித்தது. இப்போது அக்கடிதத்தின் அடிப்படையில் சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டனர்.
இது தொடர்பாக ரவுட் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
“ஒரு காவல்துறை அதிகாரியின் கடிதம் அரசாங்கத்தை அல்லது உள்துறை மந்திரி அல்லது முதலமைச்சரையோ பதவி நீக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டால், நான் இந்த பிரச்சனைகளை உருவாக்கியவர்களிடம் கேட்கிறேன், பாஜக மற்றும் சட்ட அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்தை பார்த்து கேட்கிறேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மற்றும் மற்றொரு அதிகாரி குஜராத் அரசாங்கத்திற்கு எதிராக இதுபோன்ற கடிதங்களை பல முறை எழுதியுள்ளனர். கடிதத்தின் அடிப்படையில் அப்போதைய முதல்வர் மற்றும் தற்போதைய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்களா? சஞ்சீவ் பட் கூறிய குற்றச்சாட்டுகள் பரம் பிர் சிங்கை விட தீவிரமானவை. ஆனால் நீங்கள் சஞ்சீவ் பட்டை சிறையில் அடைத்துள்ளீர்கள் ”.
முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட், குஜராத்தின் முதல்வரான பிரதமர் நரேந்திர மோடி, 2002 வகுப்புவாத கலவரங்களுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டினார். மேலும் 1990 ஆம் ஆண்டு சஞ்சீவ் பட்டின் காவலில் இருந்த ஒரு நபரை அவர் கொன்றதாக கூறி 2019 ஜூன் 20 அன்று ஆயுள் தண்டனை பெற்றார்.
முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகே வெடிகுண்டு:
இதற்கிடையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கை தவறாக கையாண்டதாகக் கூறி சிங் சமீபத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் சச்சின் வேஸை மும்பையில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து 100 கோடி ரூபாய் வசூலிக்குமாறு தேஷ்முக் கேட்டதாக குற்றம் சாட்டி, சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சிங் கடிதம் எழுதினார். தற்போது வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கையாளுகிறது.
சஞ்சீவ் பட் எழுதிய கடிதங்களை விவாதிக்க வேண்டும்:
சஞ்சீவ் பட் எழுதிய கடிதங்களை வெளியே கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்று ரவுத் கூறினார். மேலும் சிவ சேனாவிடம் அக்கடிதம் இருப்பதாகவும், ரவிசங்கர் பிரசாத் நடவடிக்கை எடுப்பாரா என்றும் வினவியுள்ளார். “அந்தக் கடிதத்தை அவர்கள் கையில் எடுக்க வேண்டும் அல்லது நாங்கள் அவர்களுக்கு கடிதத்தை வழங்குவோம். எங்களிடம் சஞ்சீவ் எழுதிய கடிதம் உள்ளது, அதை சட்ட அமைச்சருக்கு அனுப்புவோம், அவர் அதைப் படிக்க வேண்டும். ” என்று ரவுத் கூறினார்.
“பரம் பிர் சிங் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருப்பது நல்லது. மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், உச்சநீதிமன்றத்தில் எவருக்கும் நீதி கிடைப்பதில்லை எனவும் அழுத்தத்தின் கீழ் உச்சநீதிமன்றம் செயல்படுவதாகவும் கூறியிருந்தார். இந்த அழுத்தத்தின் மூலம் சிங் தனது வேலையைச் செய்ய விரும்பினால், அவர் விரும்பியதை செய்யலாம், ” என்கிறார் ரவுத்.
சிங்கின் கடிதம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிடுமா என்று கேட்டபோது, மாநில அரசாங்கம் முடிவு செய்யும் என்று ரவுத் கூறினார்.