Hindutva Lynchings Uttar Pradesh

உபி: கோயில் புனரமைக்க உதவிய முஸ்லிம்களுக்கு, கோயில் செல்ல தடை!

காஸியாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு முஸ்லிம் சிறுவன் தண்ணீர் குடிப்பதற்க்காக கோயிலில் நுழைந்ததற்காக ஷ்ரிங்கி யாதவ் என்பவனும் , அவன் சகாக்களும் அந்த சிறுவனின் தந்தை பெயரையும் , அவன் பெயரையும் கேட்டு அச்சிறுவனை பலமாக தாக்கி அதை வீடியோவும் எடுத்தனர். பின்னர் சிறுவனின் தலையில் ரத்தம் கசிந்து கொண்டிருக்க அவனை கோயிலின் வெளியே தூக்கி வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சியான காணொளி நடுநிலையாளர்களையும், பாசிசத்திற்கு எதிரான மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது.

https://twitter.com/Newscap_in/status/1370589226278916099

சிறுவன் தாக்கப்பட்ட கோயில் காஸியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலாகும். இந்த கோயிலை புணரமைக்க முஸ்லிம்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளனர். ஆனால் தற்போது இதே கோயிலில் முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இப்படி இருக்க தாக்கப்பட்ட சிறுவனின் தாய் சித்தாரா தனது மகன் பள்ளிக்கூடம் கூட சென்றதில்லை , எப்படி அவனுக்கு அந்த அறிவிப்பு பலகையில் உள்ளது தெரியும் என வேதனையுடன் கூறுகிரார்.

தஸ்னா மற்றும் அருகிலுள்ள மஸுரி கிராமங்களில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இதைப்பற்றி தஸ்னா நகர் பஞ்சாயத் தலைவி ஹஜ்ஜன் ஹன்ஸாரின் கணவர் ஆரிப் கூறும் போது,

எண்பதுகளில் இந்த கோயில் கட்ட முஸ்லிம்கள் தங்களின் சொந்த நிலத்தை வழங்கினர். இந்துக்கள் முஸ்லிம்கள் என பலரும் இவ்வாறு தானம் செய்ய, உள்ளூர் தஸ்னா நகர் பஞ்சாயத் ஆறு ஏக்கர் நிலத்தை இந்த கோயிலுக்காக தானம் செய்தது. (தஸ்னா மற்றும் அருகில் உள்ள மசூரி பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளது குறிப்பிடதக்கது) .இன்னும் அந்த நிலம் கோயிலின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது என்றார். கோயிலை புனரமைக்கவும் முஸ்லிம்கள் உதவி உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் கூறுகையில், இந்த கோயிலைக்கட்ட முஸ்லிம்கள் நிலம், பொருள் மற்றும் ஆட்களை கொண்டு உதவியதாக கூறினார்.

மேலும் அங்குள்ள சிலர் கூறுகையில், இக்கோயிலில் உள்ள சிறிய குளத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் குளிப்பார்கள். மேலும், இது நோயை நீக்குவதாகவும் நம்புகிறார்கள் என்று கூறினர். மேலும் இந்தக் கோயிலில் உள்ள மைதானத்தில் இரு கிராமங்களுக்கு இடையே மல்யுத்த போட்டி தஸரா அன்று நடைபெறும் என்றும் அதில் இந்துக்கள், முஸ்லிம்கள் பாரபட்சமின்றி சரிசமமாக கலந்து கொள்வார்கள் என்று அங்கு வசிப்பவர்கள் கூறினர்.

https://twitter.com/Newscap_in/status/1373301141451108356

இவை அனைத்தையும் யாட்டி நரசிங்கானந்த் சரஸ்வதி என்பவர் தலைமை பூசாரியாக பொறுப்பேற்றவுடன் நிறுத்தினார், முஸ்லிம்கள் கோயில் உள்ளே செல்ல தடை விதித்தார். மேலும் இந்த பூசாரியை சுற்றி எப்பொழுதும் துப்பாக்கி மற்றும் வாள் ஏந்தியவர்களாக, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷங்களை எழுப்பி கொண்டு அவரது பாதுகாவலர்கள் உள்ளனர். இவர்களில் முக்கால்வாசி பேர் வெளியூர்க் காரர்கள் என்று அங்கு வசிப்போர் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் மட்டுமின்றி இது போல் நிறைய சம்பவங்கள் இந்த பூசாரி தலைமையில் அவரது ஆட்கள் செய்து வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

இதைப்பற்றி பூசாரி யாட்டி நரசிங்கானந்த் சரஸ்வதி கூறும் போது

 எங்களிடம் அந்த அறிவிப்பு பலகையை எடுக்க சொல்லி அழுத்தம் தரப்படுகிறது. நாங்கள் உயிரோடு இருக்கும் வரை அதை செய்யப்போவதில்லை என்று கூறினார்.

பல ஆண்டு காலமாக இந்துக்கள் , முஸ்லிம்கள் சமுதாய ஒற்றுமையுடன் வீட்டின் அருகருகே நிம்மதியாக வாழ்ந்தனர். இந்த சம்பவம் காரணமாக பரஸ்பரம் மாறி பரபரப்பு அதிகமானதாக அங்கு குடியிருப்போர் வேதனை தெரிவிதிதனர்.

இந்நிலையில் சிறுவனை கொடூரமாக தாக்கியதால் கைது செய்யப்பட்ட ஷ்ரிங்கி யாதவ்க்கு பெயில் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் தொடர்ந்து இயங்கிட உதவிடுங்கள்