Indian Economy

₹1.15 லச்சம் வாரா கடன் தள்ளுபடி – மத்திய இணை நிதியமைச்சர் அறிவிப்பு!

நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.15 ரூபாய் லச்சம் கோடி, வாரா கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மோடி அரசு, மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி, வாரா கடன்கள், நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து முழு ஒதுக்கீடு செய்யப்பட்டவை உட்பட, சம்பந்தப்பட்ட வங்கியின் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து அகற்றப்பட்டதாக நிதிஇணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2018-2019 நிதியாண்டில் 2.36 லட்சம் கோடி ரூபாய், 2019-2020 நிதியாண்டில் 2.34 லட்சம் கோடி ரூபாய், 2020-2021 நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 1.15 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனினும் மீதி கடனை வசூலிக்கும் நடவடிக்கை நடந்து வருவதாக நிதி அமைச்சகம் சார்பாக மக்களவைவில் அனுராக் தெரிவித்தார்.