கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ம் தேதி அன்று, கொல்கத்தாவின் மாயோ சாலையில் பாஜகவின் பேரணியில் வைத்து திரிணாமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக அமித் ஷா அவதூறாக பேசியதாக மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக்கின் வழக்கறிஞர் சஞ்சய் பாசு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்பாக பிப்ரவரி 22 ம் தேதி தனிப்பட்ட முறையில் அல்லது ஒரு வழக்கறிஞர் மூலமாக ஆஜராகுமாறு எம்.பி. / எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று சம்மன் அனுப்பி உள்ளது.
பிதாநகரில் உள்ள எம்.பி. / எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி, வருகிற 22ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு அமித் ஷா “நேரில் அல்லது வழக்கறிஞர் மூலம் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 500 ன் கீழ் அவதூறு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க தனிப்பட்ட முறையில் அமித் ஷா அல்லது அவர் சார்பில் வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராவது அவசியம்.