Indian Judiciary Journalist

ஊடகவியலாளர் சித்திக் கப்பனுக்கு ஐந்து நாள் பெயில் வழங்கியது உச்சநீதிமன்றம் ..

பிப்ரவரி 15, திங்கட்கிழமை: பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு கேரளாவில் நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயைப் பார்க்க உச்சநீதிமன்றம் ஐந்து நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், அவர் தனது தாயுடன் வீடியோ அழைப்பு மூலம் பேச அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் தனது சொந்த ஊரான கேரளாவின் மலப்புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தாய் மயக்கமடைந்ததால் அவருடன் பேச முடியாமல் போனது.

தலைமை பூசாரி ஆளும் உபி மாநிலத்தில் ஹத்ராஸ் கும்பல் பாலியல் குற்றம் நடைபெற்று நாட்டையே உலுக்கியது. இதை பற்றி செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் சித்திக் மற்றும் அவருடன் சென்ற மூவரை உபி போலீசார் “சந்தேகத்தின் பேரில்” கைது செய்தனர்.

பிறகு அவரின் மீது யுஏபிஎ சட்டத்தையும் ஏவியது யோகி ஆதித்யாநாத் அரசு. அப்போதிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கப்பன்.