ஒரு புறம் பாசிச பயங்கரவாதிகளும், மோடியாக்களும் முஸ்லிம்கள் கொரோனா பரப்புவதாக பொய்யான மத வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வந்தாலும், பாதிப்புக்கு உள்ளாக்கப்படும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் சேவை செய்வதில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதாக தெரியவில்லை, அதற்கு காரணம் சராசரி இந்து மக்கள் வேறு, பாசிச பயங்கரவாதிகள் வேறு என்று அவர்கள் அறிந்து வைத்துள்ளது தான்.
அந்த வகையில் தெலுங்கானா மாநிலம், கோத்தகுடெம் பிரிவு ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் (JIH) இயக்கத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள பஜன் கோவிலை சேர்ந்த பூசாரிகளுக்கும், அங்கு வேலைபார்க்கும் பிற ஊழியர்களுக்கும் மளிகை பொருட்கள் அடங்கிய கிட்டுகளை (20/04/20) விநியோகம் செய்தனர்.
லாக்டவுன் அறிவிக்கப்பட்டதிலிருந்து, JIH – கோத்தகுடம் (ktdm) பிரிவு உறுப்பினர்கள் , ஜாதிமத பேதமின்றி பல்வேறு ஏழை மக்களிடையே உணவு / மளிகை பொருட்களை விநியோகித்து வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த கொத்தக்குடம் பிரிவின் ஜமாத் தலைவர் அப்துல் சமத்,
பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் உணவுக்கு வழியில்லாமல், பசியோடு இருக்கும் போது தான் மட்டும் வயிறு புடைக்கச் சாப்பிடுவது முஸ்லிமுக்கு அழகல்ல. அண்டை வீட்டில் இருப்பவருக்கு வழங்கி விட்டுச் சாப்பிடுவது தான் இறை நம்பிக்கை உள்ளவனின் செயலாக இருக்கும்.
”தன் அண்டை வீட்டாரை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான். அப்படி சாப்பிடுபவன் முஃமின் அல்லன்” என்று நபி (ஸ) அவர்கள் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் மத நல்லிணக்கத்தை வளர்ப்பதாகவும், பாசிச மத வெறி கும்பலுக்கு சட்டையடியாகவும் அமைகிறது என்றால் மிகையல்ல.