உபி, பிஜ்னோர்: கடந்த இரண்டு தினங்களாக பாஜக ஆதரவாளர்களால் இரண்டு வீடியோக்கள் உயர்வாக பகிரப்பட்டு வருகின்றன. முதல் வீடியோவில் ஒரு வயதான முஸ்லிம் பழ வியாபாரி தள்ளுவண்டி அருகில் நின்று கொண்டிருக்கிறார். அவரை நோக்கி “பாட்டிலில் ஏன் சிறுநீர் கழிக்கிறாய் ? “என்று கேட்கப்பட “வீணான பேச்சுக்கள் பேசாதீர்கள்” என்று கூறியவர் அவர் சென்று விடுகிறார். இரண்டாம் வீடியோவில் அதே முஸ்லிம் வியாபாரி தவறு நடந்து விட்டது என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறி தோப்புக்கரணம் போடுவதாக அமைந்துள்ளது.
பரப்பப்பட்ட இரண்டு வீடியோக்கள்:
மேலும் அந்த இரண்டாம் வீடியோவில் நான் ஒரு இதய நோயாளி மிகவும், ஏழை என்னை விட்டுவிடுங்கள் என கூறுகிறார் எனினும் வீடியோ எடுப்பவர்கள் எங்கும் போகக்கூடாது இங்கேயே இரு. இங்கிருந்து போக நினைத்தால் அடிதான். உங்களால் மற்றவர்களுக்குத்தான் ‘பிஜ்னோர் அழிந்துவிடும்’ என்கிறார்கள். முதியவர் என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறி தோப்புக்கரணம் போட ஆரம்பிக்கவே வீடியோ எடுக்கும் ஒருவர் தோப்புக்கரணம் போட வேண்டாம் எழுந்து நில் எனக்கூறி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார்.
பொய் பரப்பிய சங்கிகள்:
இந்த இரண்டு வீடியோக்களையும் ஆர்எஸ்எஸ் ஐ சேர்ந்த ரூபெந்திர சின்ஹா என்பவர் இதோ “பாருங்கள் இந்த முல்லாவை இவன் பாட்டிலில் சிறுநீர் கழித்துவிட்டு பிறகு சிறு நீரை பழங்களில் மீது தெளித்து அதை விற்பனை செய்கிறான். இவன் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விட்டான். வாழைப்பழம் வாங்குவோரே ஜாக்கிரதை” என பதிவிட்டு முகநூலில் பதிவேற்றம் செய்கிறார். இதுவரை அந்த வீடியோக்கள் 17,000 திற்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.
மேலும் ஊடகத்தை நடத்துகிறேன் என்ற பெயரால் மத வெறுப்பை முழுநேரமாக செய்து வருவதாக குற்றம்சாட்டப்படும் சுதர்சன் தொலைக்காட்சியை சேர்ந்த சுரேஷ் சவாங்கே என்பவரும் அதே போல கருத்திட்டு, பாருங்கள் இந்த ஜிகாதியை பழங்களில் சிறுநீரை தெளித்து விற்பனை செய்கிறான். 100% உண்மையானது. இவர்களுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் எனக்கூறி வீடியோக்களை பகிர்ந்தார்.
இதேபோல் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பத் பார்த்துடா என்பவரும் இதே கருத்தை தெரிவித்த வீடியோவை பகிர்ந்தார்.
அதேபோல் முஸ்லிம் பெயர் வைத்துக்கொண்டு தொடர் முஸ்லிம் விரோத பொய் பதிவுகளை பதியும் தாரிக் பத்தா, பிரதமர் மோடியால் ட்விட்டரில் பின்தொடர படும் அசுதோஷ் என்பவர் என பல பாஜக அபிமானிகள், இதோ பாருங்கள் முஸ்லிம் வியாபாரி ஒருவர் வாழைப்பழங்களில் சிறுநீர் தெளித்து அதை விற்கிறார், அவர் கையும் களவுமாக பிடிபட்டு விட்டார் என கூறி வீடியோக்களை பகிர்ந்தனர்.
உண்மை என்ன? :
நாம் மேலே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல முதல் காணொளியில் “பிஜ்னோர் அழிந்துவிடும்” என ஒருவர் கூறுவதை நம்மால் கேட்க முடிகிறது. மேலும் அதே பதிவின் பின்னூட்டத்தில் இது புகாரா காலனியில் நடைபெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆல்ட் நியூஸ் பிஜ்னோர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டபோது, இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். பிறகு சிறிது நேரத்தில் பிஜ்னோர் காவல் நிலையத்திலிருந்து வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றது. அதில் காணொளியில் காட்சியளிக்கும் முதியவரின் பெயர் இர்பான் அஹமத். அவர் ஒரு சீசன் பழ வியாபாரி.
சம்பவம் நடைபெற்ற ஏப்ரல் 20ஆம் தேதி அவர் பழம் விற்கும் அதே தெருவில் சிறுநீர் கழித்துள்ளார். பிறகு தனது தள்ளுவண்டியில் வைக்கப்பட்ட தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகளைக் கழுவி விட்டு பிறகு சிறிது தண்ணீரை எடுத்து பழங்களின் மீது தெளிக்கிறார் அதன் பிறகு அதே பாட்டிலில் இருந்து தண்ணீரையும் அருந்துகிறார். இந்த காணொளியை முதல் முறை பார்க்கும்போதே இது பொய்யாக அவதூறு பரப்புவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது என பிஜ்னோர் காவல்நிலைய எஸ்.பி மிஷ்ரா தெளிவு படுத்தினார்.
எனினும் இர்பான் அஹமத் குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த காணொளியை படமாக்கி பொய்யான கருத்தை பதிவிட்டு பரப்பியவர்களை நாங்கள் தேடி வருகிறோம் என பிஜ்னோர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் பழ வியாபாரியின் மற்றொரு காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.
இது ஏப்ரல் 22 ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. அதில் அந்த முதியவர் ‘நான் என்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு சிறுநீர் கழித்த பிறகு என்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டேன். பிறகு எனது கையை கழுவினேன் பிறகு அங்கிருந்து நான் சென்று விட்டேன். இரவு பத்து பன்னிரண்டு பேர் என்னை சுற்றி சூழ்ந்து விட்டனர்” என்கிறார்.
எனவே இதிலிருந்து 2ம் வீடியோவில் முதியவர் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்பது பாசிஸ்டுகள் மிரட்டியதால் தான் என்பது தெளிவாகிறது. மேலும் முஸ்லிம் முதியவர் பழங்களின் மீது சிறுநீர் தெளிக்கவில்லை என்பது உறுதியாகிறது. இதன் மூலம் இந்த முறையும் பாசிச பயங்கரவாதிகள் பொய்யை மூலதனமாகக் கொண்டே மத வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர் என்பது நிரூபணமாகி உள்ளது.