Islamophobia

தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மாடியில் கூட்டாக தொழுகை நடத்தினார்களா?

சில கட்டிடங்களின் மாடிகளில் இஸ்லாமியர்கள் கூட்டாக சேர்ந்து தொழுகை நடத்துவது போல் ஒரு படத்தை பதிவிட்டு அது தமிழகத்தில் நடைபெற்றதாகவும், இஸ்லாமியர்கள் எவ்வளவு அடித்தாலும் கேட்க மாட்டார்கள் என்றும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகிறார்கள். இதை பலரும் பகிர்ந்து அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என சாடியும் அறிவுறை கூறியும் வருகின்றனர்.

உண்மை என்ன?

இந்த படம் முதலில் யாரால் இணையத்தில் பகிரப்பட்டது எனத் தேடும்போது அதை பகிர்ந்த ஐ.டி. இந்தியருடையது கிடையாது. இந்தியாவிலிருந்து அந்த படம் முதலில் பகிரப்படவில்லை என்பது உறுதியாகிறது. இந்தியா அளவுக்கு வளைகுடா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளில் முழு ஊரடங்கு இல்லை. பகிரப்பட்ட படத்தை ஜூம் செய்து பார்த்தால் அதன் பின்னால் உள்ள கட்டிடம் குவைத்தில் உள்ள ஜிலீப் அல்-ஷுயுக் என்ற பகுதியில் உள்ளதை கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அறிய முடிகிறது. அதன் பின்னால் தெரியும் ஒரு மசூதியும் அப்பகுதியில் தான் உள்ளது.

இது தொடர்பாக “கலேஜியா நியூஸ்” வீடியோவை ட்வீட் செய்திருந்தது. இங்கேயும், இது குவைத்தில் உள்ள ஜிலீப் அல்-ஷுயுக் நகரம் என்று தலைப்பு கூறுகிறது.

இதை எடுத்து தமிழ்நாட்டில் நடந்ததை போல்பாசிஸ்டுகளின் ஐ.டி. விங்கில் பகிர்ந்து இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். அதை சாதாரணமானவர்கள் ஆராயாமல் தொடர்ந்து இஸ்லாமியர்கள் இவ்வாறு செய்வது போல் பகிர்ந்து சாடி வருகிறார்கள். இஸ்லாமிய அமைப்புகள், தலைவர்கள் அனைவரும் வீடுகளில் தொழுகை நடத்த சொல்ல உத்தரவிட்டு விட்டனர். அதை மீறி தென்காசியில் ஒரு 2 வாரம் முன்பு இடத்தில் இவ்வாறு நடந்தது. அதுபற்றி புகார் அளித்ததும் அப்பகுதி இஸ்லாமியர்கள் தான்.

வீடியோ எடுத்து பகிர்ந்ததும் இஸ்லாமியர்கள் தான். பல இஸ்லாமியர்கள் கண்டித்தும் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மசூதிகள் உள்ளன. அதில் ஒரு இடத்தில் சிலர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதும், அந்த மதத்தை திட்டுவதும் சரியா..?

தமிழகத்தில் தென்காசி சம்பவத்துக்கு பிறகு வேறு எங்கும் தொழுகை நடந்ததாக புகார் வரவில்லை. அப்படி இருக்கையில் குவைத்தில் நடந்த சம்பவத்தின் படத்தை பகிர்ந்து சாடுவது இஸ்லாமியர்கள் மீது கூடுதல் வெறுப்பை தான் ஏற்படுத்தும். நமது அறியாமையால் சங்கிகளின் வெறுப்புப் பிரச்சாரத்துக்கு வலு சேர்த்துவிட வேண்டாம்…