சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்ட படுகொலைகளின் போது பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஐமபத்துக்கு மேற்பட்ட உயிர்பலி, அனைத்தையும் இழந்து நிர்கதியாக ஆதரவின்றி தவிக்கும் மக்களிடமே மீண்டும் சென்று பாதிக்கப்பட்ட அந்த அப்பாவிகளை போலீசார் இழுத்து செல்வதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர் .இது குறித்து தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
“Bas naam poochte hain aur utha lete hain…Har gali se 4 se 5 ladke utha rakhe hain”
சிறுவர்களையும் கூட பெயர் கேட்டு (மதத்தின்) அடையாளம் தெரிந்து கொண்டு போலீசார் இழுத்து செல்கின்றனர். ஒவ்வொரு வீதியிலும் 4-5 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முஸ்தபாபாத்தில் வசிக்கும் சுல்தான் மிர்சா கூறுகிறார்.
“நேரம் ஒரு பொருட்டல்ல, பகலோ, இரவோ; காவல்துறையினர் விரும்பிய நேரத்தில் சிறுவர்களை இழுத்து சென்று விடுகின்றனர். கலவரத்தின் பேரால் கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானவர்கள் இங்கிருந்து இழுத்து செல்லப்பட்டவர்களே ” என்று மற்றொரு குடியிருப்பாளர் அலி மெஹ்தி கூறுகிறார்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கராவால் நகரை நோக்கி செல்லும் பிரதான முஸ்தபாபாத் சாலையில் மணிக்கணக்கில், அங்கு கிடைக்கும் உணவு, உடைக்காக ஏங்கி பரிதாப நிலையில் வரிசையில் நின்று கொண்டுள்ளனர்.
ஏகப்பட்ட பொய் வழக்குகள், பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குகள் என நிலைமை தொடர்வதாக களத்தில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தங்கள் உறவினர்கள், குடும்பத்தார் உயிரோடு உள்ளனரா, இல்லையா.. போலீசார் அழைத்து சென்று விட்டனரா என்று கூட அறியாமல் பல மக்கள் தவித்து வருகின்றனர். கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசு பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளாமல் உள்ளதற்கு கண்டனம் வலுத்து வருகிறது.