Amit Shah Shaheen Bagh

அமித் ஷா இல்லம் நோக்கி ஷஹீன் பாக் போராளிகள் பேரணி; அமித் ஷாவின் அழைப்பை ஏற்று செல்லும் போராளிகளை சந்திப்பாரா அமித் ?

கடந்த வியாழனன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ” ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள் உட்பட யாரானாலும் சரி, அவர்கள் என்னுடன் கலந்துரையாடல் நடத்தலாம். அதற்கான வாசல் திறந்தே இருக்கிறது. அனுமதி கோரிய 3 நாட்களுக்குள்ளாக நான் அவர்களை சந்திப்பேன்.” என கூறி இருந்தார்.

இதனையடுத்து “இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஷாஹீன் பாக் முதல் அமித் ஷாவின் இல்லம் வரை பேரணி நடைபெறும், அங்கு சென்று உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பிற்கு என்று பிரதிநிதிகள் நியமிக்க போவதில்லை. சிஏஏ வுக்கு எதிராக உள்ள அனைவருமே தங்கள் கோரிக்கைகளை அமித் ஷாவுடன் பகிர்ந்து கொள்வார்கள்” என்று ஷஹீன் பாக் ஜனநாயக போராளிகள் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் உள்துறை அமைச்சரை சந்திக்க தயாராக உள்ளோம். ஆனால் அவர் எத்தனை பேரை சந்திக்க விரும்புகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் ”என்று போராட்டக்காரர்களில் ஒருவரான சையத் அகமது தசீர் பி.டி.ஐ ஊடகத்திடம் பேட்டி அளித்துள்ளார்.

ஷஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பம் முதல் பங்கெடுத்து வரும் மெஹ்ருன்னிசா, “போராட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சரின் இல்லத்திற்கு அணிவகுத்துச் செல்வார்கள். CAA-NRC-NPR ஐ திரும்பப் பெறுமாறு நாங்கள் அவரிடம் கோரிக்கை வைப்போம்.மேலும் இந்த கோரிக்கை நிறைவேறும் வரைஎங்கள் போராட்டங்கள் தொடரும்.” என தெரிவித்துள்ளார்.

இவர்கள் பேரணியாக சென்றாலும் அமித் ஷா அவர்களை சந்திக்கபோவதில்லை, மேடை பேச்சுக்காக தான் அமித் ஷா அவ்வாறு கூறினார் என விமர்சகர்கள் கருத்து தெரிகின்றனர்.