Published : Jul 05, 2019 4:19 PM
மகராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில், திவாரி என்ற அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கடந்த செவ்வாய் கிழமை ( 2/07/2019)உடைந்து, கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அம்மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் தனாஜி சாவந்த் (Tanaji Sawant), அணையில் ஒரே இடத்தில அதிக எண்ணிக்கையில் நண்டுகள் குழுமிவிட்டதே இந்த உடைப்புக்கு காரணம் என்று தெரிவித்தார்.
ரத்னகிரி கிராம மேம்பாட்டு அலுவலர் சுஹாஸ் கூறுகையில், அணையில் உள்ள நண்டுகளை அமைச்சரின் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், அணையை கட்டிய கான்ட்ராக்டர் எனும் பெரிய ஊழல் சுறாவை காப்பாற்றுவதற்காக ஷிவ சேனா அமைச்சர் அப்பாவி நண்டுகள் மீது பழிபோடுவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக முறையே விசாரணை நடத்தி, தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார் .
18 நபர்கள் உயிர் இழந்துள்ள இந்த நிலையில் நண்டுகள் தான் இதற்கு காரணம் என்று கூறிய அமைச்சரை நம்மூர் செல்லூர் ராஜு உடன் இணைத்து நெட்டிசன்கள் நமக்கு ஒரு செல்லூர் ராஜு என்றால் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரு தனாஜி சாவந்த் என்று கலாய்த்து வருகின்றனர்.