பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்தவர் மியான் அக்ரம் உஸ்மான். அவர் தெற்கு லாஹூர் பகுதியின் கட்சி பொது செயலாளராக உள்ளவர். இந்நிலையில் காஷ்மீர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 5ம் தேதி தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடைபெற்றது.
அப்போது பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் மனம் புண்படும்படி சில பேனர்கள் தென்பட்டுள்ளது. உடனே கட்சி மேலிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்கு பிரிண்ட் எடுக்கும் போது மோடி என்ற இடத்தில தவறுதலாக இந்து என்ற சொல் இடம்பெற்று விட்டது என அக்ரம் விளக்கம் அளித்துள்ளார்.
அதற்கு பிறகு மீண்டும் இந்துக்கள் மனம் புண்படும் படியாக அக்ரம் செயல்படுவதாக உள்ள வீடியோ வெளியாகியுள்ளது. எனவே கட்சி மேலிடம், நீண்ட நாளாக கட்சியில் உள்ளவர், உயர் பதவியில் உள்ளவர் எனவெல்லாம் பாராமல் அவரை தடாலடியாக பதவி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது குறித்து அவருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு வெறுப்பு பேனருக்கே பாகிஸ்தானில் பதவி நீக்கம், ஆனால் இந்தியாவிலோ சிறுபான்மையினர் கும்பல் படுகொலையில் ஈடுபட்டவர்கள் சிறையில் இருந்து வெளிவரும் போது அவர்களை மாலை அணிவித்து வர வேற்பதற்கு மத்திய அமைச்சரே செல்கிறார் என கூறி மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.