பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து இந்தியா வந்துள்ள முஸ்லிமல்லாத அனைவரையும் தடுப்பு மையங்களிலிருந்து விடுவிக்குமாரு அஸ்ஸாம் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.
‘காலாவதியான அல்லது சரியான ஆவணங்கள் இல்லாமல், டிசம்பர் 31, 2014 க்கு முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்குமிடம் ஏற்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்களையே’ இது குறிக்கும் என்றார் அமைச்சர்.
இதன் நடைமுறை பொருள்:
முஸ்லிமாக உள்ளவர் தடுப்பு மையங்களிலேயே இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் அல்லாதோர் பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வரதவர்களாக இருந்தாலும் வெளி வந்து முடியும், ஏனெனில் ஒருவர் முஸ்லிமாக இல்லாமல் இருந்தால் மட்டும் போதும் அவரிடம் எந்த வித ஆவண ஆதாரங்களும் இல்லை என்றாலும் சிஏஏ மூலம் அவருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற கருத்தை அமித் ஷா மக்களவையில் பேசியுள்ளார்.
குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ), 2019 இன் கீழ் குடியுரிமை பெற தகுதி வாய்ந்தவர்கள், ( அதாவது முஸ்லிம் அல்லாதோர்) தகுந்த விதிகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் குடியுரிமை வழங்குவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று ராய் கூறினார்.
“தடுப்பு மையம்” என்ற பெயர் “ஹோல்டிங் சென்டர்” என்று மாற்றப்பட்டுள்ளது என்றார் அவர். அஸ்ஸாம் அரசாங்கத்தின் தகவல்களின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 761 கைதிகள் இந்த தடுப்பு மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டார்.