பாஜகவின் தெலுங்கானா மாநிலத்தின் செய்தித் தொடர்பாளர் மாதவனேனி ரகுநந்தன் ராவ். இவர் தனக்கு போதைமருந்து செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
30 வயதிற்குட்பட்ட அந்த பெண், அவரது கணவர் மீது ஜீவனாம்சம் வழக்கு பதிவு செய்வது குறித்து ரகுநந்தனை அணுகியபோது பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது மேலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறி குற்றச்சாட்டை மறுத்துள்ளார் பாஜக தலைவர்.
காவல்துறைக்குச் செல்லக்கூடாது என பாதிக்கப்பட்ட பெண்ணனை ராவ் மிரட்டியதைத் தொடர்ந்து அப்பெண் தெலுங்கானா மாநில மனித உரிமைகள் ஆணையத்தை (எஸ்.எச்.ஆர்.சி) அணுகியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்ட ஆணைக்குழு, சைபராபாத் ஆணையத்தின் ஆர்.சி.புரம் காவல்துறையினருக்கு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
எப்படி தொடர்பு ஏற்பட்டது?
ஆர்.சி.புரத்தில் வசிக்கும் அந்தப் பெண், தனது கணவருடன் 2003 ல் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் அவர் மீது ஆர்.சி.புரம் காவல் நிலையத்தில் துன்புறுத்தல் புகார் அளித்ததாகவும், அப்போதே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறினார். அதன்பிறகு, தனது கணவர் மீது சங்கரெட்டி நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞராக இருந்த பாஜக தலைவரை அணுகியுள்ளார்.
நடந்த சம்பவம்:
கடந்த டிசம்பர் 2, 2007 அன்று, வழக்கை பற்றி பேச ராவ் தனது இல்லத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு வருமாறு அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வழக்கைப் பற்றி விவாதிக்கும் போது குடிக்க காபி வழங்கியுள்ளார்.. காபியை குடித்த பிறகு, மயக்கமடைந்து சுயநினைவை இழந்துள்ளார் அந்த பெண். பிறகு அப்பெண்ணெய் படுக்கை அறைக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
விழிப்பு வந்த பிறகு தான், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார் அந்த பெண். மேலும் வீட்டில் யாருமின்றி அவர் தனியாக இருந்துள்ளார்.
கொலை மிரட்டல்:
“நான் காவல்துறையை அணுகி அவருக்கு எதிராக புகார் அளிக்க முடிவு செய்தேன், ஆனால் அவர் என்னைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியதுடன் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார். அப்போதிருந்து, அவர் பல சந்தர்ப்பங்களில் என்னை பாலியல் பலாத்காரம் செய்து என் வாழ்க்கையை கெடுத்துவிட்டார். பல ஆண்டுகளாக நான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதையை அனுபவித்து வருகிறேன் ”என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் தெரிவித்துள்ளார்.
காவல்துறையை அணுக முயற்சித்த போதெல்லாம், ராவ் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதை தடுத்து விடுவார், மிரட்டல்கள் விடுப்பார். மிரட்டல்கள் இப்போது வரை தொடர்கின்றன என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் கண்ணீர் மல்க கூறுகிரார்.
என்.எச்.ஆர்.சி யில் புகார்:
பொலிஸை அணுகும் முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், ஜனவரி 23, 2020 அன்று என்.எச்.ஆர்.சி.யை அணுகி, ராவ் மீது நடவடிக்கை எடுத்து தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரி புகார் அளித்துள்ளார். இதற்குப் பிறகும், ராவ் அப்பெண்ணை அச்சுறுத்தியதுடன், தன்னிடம் இருந்த நிர்வாண புகைப்படங்களை பகிரங்கப்படுத்துவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
மற்ற எந்த ஒரு கட்சியையும் விட பாஜக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிக அளவில் சுமத்தப்படுகிறது என்ற கருத்து நிலவி வரும் சூழலில் மீண்டும் ஒரு பாஜக தலைவர் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.