நாட்டின் தலைநகரான தில்லியில் ஒரு மாததத்திற்கும் மேலாக ஷஹீன் பாகில் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வரும் மக்களை நோக்கி இன்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான் பயங்கரவாதி கபில் குஜ்ஜார். நல்லவேளை உயிர்பலி இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை முழங்கிய நிலையில் போலீசார் அவனை கைது செய்தனர்.
ஒரு தினம் முன்னர் தான் 17 வயதான பயங்கரவாதி ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தலைநகரில் அதுவும் அதிக அளவில் பல நாட்களாக மக்கள் கூடியுள்ள பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த லச்சனத்தில் உள்ளதே என மக்கள் கடும் கண்டன கருத்துக்களை பதிந்து வருகின்றனர்.
“இந்த நாட்டில் இந்துக்கள் வெச்சது தான் சட்டம். வேறு எவனோடதும் இங்க நடக்காது” என்று பயங்கரவாதி பேசுவதை காணலாம்.
பயங்கரவாதியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக தலைவர்களின் தொடர் வெறுப்பு மற்றும் வன்முறை பேச்சுக்கள் நன்றாக செயல்வடிவம் எடுக்கின்றன என்றும் எப்படியாவது பயம் காட்டி ஷஹீன் பாகில் கூடியுள்ள மக்களை கலைத்து விட வேண்டும் என்பது தான் சங் பரிவார கூட்டத்தின் திட்டம் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.