தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா அருகே குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சற்று முன் தீவிரவாதி ஒருவன் கையில் துப்பாக்கியுடன் போலீசார் சூழ்ந்த நிற்கும் இடத்தில, மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான். அதில் மாணவர் ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதி, 31 வயதானவன் என கூறப்படுகிறது. அவனது பெயர் ராம் பகத் கோபால் என அடையாளம் காணப்பட்டு, போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
பயங்கரவாதி மாணவர்களை நெருங்குதல்:
கையில் துப்பாக்கியை வைத்து கொண்டு. “யாருக்கு ஆஸாதி வேண்டும் ? வாருங்கள், உங்களை சுட்டு தள்ளுகிறேன்” என்று கூறியபடியே ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷங்களுடன் மாணவர்களை நோக்கி முன்னேறி சென்றுள்ளான் தீவிரவாதி கோபால். மேலும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் வந்தே மாதரம் சொல்லியாக வேண்டும் என்றும் அவன் மிரட்டியுள்ளான்.
மருத்துவமனையில் அனுமதி:
தீவிரவாதியின் தாக்குதலால் காயமடைந்த மாணவர் ஷாதாப், கையில் புல்லட் காயத்துடன் ஜாமியா நகரில் உள்ள ஹோலி பேம்லி மருத்துவமனைக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து தற்போது ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
போலீசார் கண்முன் தீவிரவாதி துப்பாக்கி சூடு:
ஜாமியா பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மத்திய டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தருக்கு மாணவர்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. “அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் விதத்தில் மாணவர்களை கோபால் அச்சுறுத்தினார், அப்போது போலீசார் ஊமை பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்தனர்” என்று சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் கூறுகின்றனர்.
நாங்கள் தொடர்ந்து செயல்பட உதவிடுங்கள்
போலீசார் அச்சம்:
துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, போரட்டம் மேலும் வலுப்பெற கூடும் என்று அஞ்சி ஜமா மஸ்ஜித், ஐ.டி.ஓ மற்றும் டெல்லி கேட் ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அனைத்தும் டில்லி போலீசார் மூடியுள்ளனர்.
பல பாஜக தலைவர்கள் வன்முறை பேச்சுக்களை பேசி வரும் கால சூழ்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வன்முறை பேச்சுக்கள் :
ஜூனியர் மத்திய நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் திங்களன்று வடக்கு டெல்லியின் ரிதாலாவில் நடந்த வாக்கெடுப்பு பேரணியில் ‘துரோகிகளை சுட்டு தள்ளுங்கள்’ என்ற கோஷங்களை முழங்கியவாறு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். “தேஷ் கே கத்தாரோன் கோ …” என்று அமைச்சர் கூற , அதற்கு கூட்டம் பதிலளித்தது “… கோலி மாரோ சாலோ ங்கோ”. ” என்று கூட்டம் பதில் அளித்தது . “துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்” என்பது இதற்கு அர்த்தம்.
துரோகிகள் என்று பாஜக யாரை பார்த்து சொல்கிறார்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இப்படி மூலைக்கு மூலை வெறுப்பு மற்றும் வன்முறை பேச்சுக்களை சர்வ சாதாரணமாக பாஜக தலைவர்கள் பேசுவதும் அதற்க்கு வழக்கு கூட பதியப்படாமல் இருப்பதும் வாடிக்கை ஆகிவிட்டது.
உயர் பொறுப்பில் உள்ளவர்களே இந்த லச்சனத்தில் இருந்தால் தொண்டர்கள் ஏன் துப்பாக்கி ஏந்த மாட்டார்கள் என்கின்றனர் நெட்டிசன்கள்.
மீடியாவின் நயவஞ்சகம்:
ஒருவன் போலீசார் கண்முன்னே மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறான். சம்பவம் முழுவதும் படமாக்கப்படுகிறது. எனினும் இந்திய ஊடங்கங்களின் ஒன்றும் கூட பிடிபட்டவனை தீவிரவாதி என அழைக்க மறுக்கின்றன. இது அப்பட்டமான நயவஞ்சகத்தனம்.
இவன் முஸ்லிமாக இருந்திருந்தால் இந்நேரம் ஊடகங்கள் அனைத்தும் முண்டியடித்து கொண்டு தீவிரவாதி, பயங்கரவாதி என அழைத்திருக்கும். ஆனால் இப்போது கோபாலை “gunman” , “shooter” போன்ற வார்த்தைகளை கொண்டே அழைக்கப்படுகிறானே தவிர தீவிரவாதி, பயங்கரவாதி என அழைப்பதற்கு ஏனோ கூசுகிறது பெரும்பாண்மை ஊடகங்களுக்கு என சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கின்றனர்.