Amit Shah CAA

‘எத்தனை போராடினாலும் சிஏஏ வை திரும்ப பெறமாட்டோம்’ என்ற அமித் ஷாவின் இன்றைய பேச்சுக்கு பெண் போராட்டக்காரர்கள் பதிலடி !

நாடு முழுவதும் மக்கள் சிஏஏ வுக்கு எதிராக போராடி வரும் வேளையில் இன்று லக்னோ பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் “எத்தனை வேண்டுமானால் போராடி கொள்ளுங்கள். சிஏஏ வை திரும்ப பெறமாட்டோம்” என கூறியுள்ளது ஜனநாயக விரும்பிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித் ஷாவின் பேச்சும் அதற்கான மறுப்பும்:

சிஏஏ வை எதிர்ப்பவர்கள் பொய் பிரச்சாரங்களையும், மாயைகளையும் பரப்புகின்றனர், அதனால் தான் பாஜக ஜான் ஜாக்ரன் அபியனை நடத்துகிறது, இது நாட்டை உடைப்பவர்களுக்கு எதிரான பொது விழிப்புணர்வு பிரச்சாரமாகும் ” என்று பேரணியில் அமித் ஷா பேசியுள்ளார்.

எனினும் பெண்கள் நம்பரை போன்றும் பொய்யான ஆப்பர்களின் (நெட்ப்ளிக்ஸ், அமேசான்) வாயிலாகவும் சிஏஏ வுக்கு ஆதரவாக பாஜக வினர் மிஸ்ட் கால் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை குறித்தோ, நாடு முழுவதும் என்ஆர்சி இல்லை என்று நாட்டு மக்களிடம் பிரதமர் சொல்ல, அதை உள்துறை அமைச்சர் மறுக்க என மாறி மாறி பேசப்பட்டு வருவதை குறித்தெல்லாம் உள்துறை அமைச்சர் குறிப்பிடவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள கடமை பட்டுள்ளோம்..

கண்ணாமூச்சி விளையாட்டு காட்டும் பேச்சு:

சிஏஏ வில் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது எனவும் மாறாக குடியுரிமை வழங்கும் சட்டமே சிஏஏ என அமைச்சர் அமித் ஷா கூறினார். “நான் தான் இந்த மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்தேன். இதை பற்றி பொதுவில் விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சியினரை கேட்டு கொள்கிறேன். சிஏஏ மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படும் என்று சொல்வீர்களானால் அதை நிரூபிக்க தயாரா ?” எனவும் அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

மறுப்பு:

இங்கும் அமித்ஷாவின் பேச்சு யாரை ஏமாற்ற என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அமித் ஷா சொல்வது போல எதிர் கட்சியினர் இல்லை மாறாக இந்தியாவில் சிஏஏ வுக்கு எதிராக போராடி வரும் எந்த ஒருவரும் சிஏஏ குடியுரிமையை பறிக்கும் என சொல்வதில்லை. மாறாக சிஏஏ, என்பிஆர் மற்றும் என் ஆர் சி ஆகியவற்றுடன் இணையும் போது தான் குடியுரிமை பறிக்கப்படுகிறது. இதனால் முஸ்லிம்கள் மட்டுமின்றி ஏழை எளிய அனைத்து மத மக்களும் குடியுரிமையை இழப்பார்கள் என்று தான் சிஏஏ எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி அமித்ஷா சிஏஏ மற்றும் என் ஆர் சி இரண்டும் பிரிக்க முடியாத ஜோடிகள் என பல முறை பேசியுள்ளார்.

முதலில் சிஏஏ வரும் பிறகு என் ஆர் சி என இவரே பேசிவிட்டு, தற்போது முழு பூசணியை சோற்றில் மறைத்த கதையாய் இவ்வாறு பாதியை பேசி மீதியை பேசாமல் இருப்பது மிகவும் வருந்த தக்க விஷயமாக உள்ளது.

உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு பல்வேரு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் என்ன ஆனாலும் சரி நாங்கள் போராட்டத்தை கை விட மாட்டோம் எனவும் போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக கூறிவருவது சங் பரிவார கூட்டத்தினரை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது என்பதில் மட்டும் ஐயமில்லை.

விவாத அழைப்பு:

லக்னோவில் நடந்த இந்த பேரணியின் போது ’ராகுல் காந்தி, மேற்கு வங்கத் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் குடியுரிமைச் சட்டம் குறித்த பொது விவாதத்திற்கு தயாரா என உள்துறை அமைச்சர் சவால் விடுத்துள்ளார். ட்விட்டரில் மட்டுமே கருத்து சொல்லி கொண்டிருக்காமல் இந்த அழைப்பை எரிக் எதிர் கட்சி தலைவர்கள் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமித் ஷாவுக்கு பெண்கள் பதிலடி :

அமித் ஷா இங்க வந்து எங்கள் சந்திச்சு எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லுங்க.. நாங்க களைந்து சென்று விடுகிறோம் என அமித் ஷா லக்னோவில் இவ்வாறு பேசுவதற்கு முன்பாகவே பெண்கள் கூறியுள்ளனர். அமித் ஷா தான் இந்த பெண்களின் அழைப்புக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது.

அமித் ஷா இங்க வந்து எங்கள் சந்திச்சு எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லுங்க.. நாங்க களைந்து சென்று விடுகிறோம் என பெண்கள் அமித் ஷாவுக்கு அழைப்பு

போராட்டங்களை ஒடுக்கும் பாஜக ஆதித்யானத்தின் அரசு:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக பெண்கள் தலைமையிலான எதிர்ப்பு போராட்டம் ஐந்தாவது நாளில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அமித்ஷா இவ்வாறு பேரணியில் பேசியுள்ளார்.

https://twitter.com/Actor_Siddharth/status/1207391668413972481

ஜனநாயக அடிப்படையில் போராடி வரும் மக்களை ஒடுக்கும் விதமாக உத்தரபிரதேசத்தின் தலைநகரான சவுக் பகுதியில் உள்ள கடிகார கோபுரத்தில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக கவிஞர் முனாவ்வர் ராணாவின் இரண்டு மகள்கள் உட்பட 16 பெண்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.