CAA Modi

பிரதமர் மோடி இந்திய குடிமகனா? ஆவணங்களை கோரி ஆர்.டி.ஐ விண்ணப்பம் தாக்கல் !

நாடெங்கும் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு இந்திய குடிமகனா என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் விண்ணப்பிக்க பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர் யார்?

இது தொடர்பாக கடந்த ஜனவரி 13 ம் தேதி திருச்சூர் மாவட்டம் சாலக்குடியைச் சேர்ந்த ஜோஷ் கல்லுவெட்டில் என்பவர் விண்ணப்பம் செய்துள்ளார்.

அதில் அவர் பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இந்த ஆர்.டி.ஐ விண்ணப்பம் சாலக்குடி நகராட்சியின் பொது தகவல் அதிகாரி முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கேள்வியை புதுதில்லியில் உள்ள மத்திய பொது தகவல் அலுவலர் (சிபிஐஓ) அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாக நகராட்சியின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜோஷியின் பேட்டி :

இதை நான் பொது நலன் சார்ந்த விஷயமாக செய்யவில்லை. எனது விண்ணப்பம் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) பற்றி ஆயிரக்கணக்கான மக்களின் கவலையை பிரதிபலிக்கிறது. குடியுரிமையை நிரூபிக்க பாஸ்போர்ட் அல்லது ஆதார் அட்டை வைத்திருப்பது போதாது என்பதால், மக்கள் பயப்படுகிறார்கள். பிரதமர் மோடியை இந்தியனாக்கும் தனித்துவமான அந்த ஆவணம் அவரிடம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள நான் ஆர்வமாக உள்ளேன்”என்று ஜோஷி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க பழைய ஆவணங்களை சமர்ப்பிக்க எங்கே போவது என்று கலக்கத்தில் உள்ளனர். குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டால், 1970 களுக்கு முன்னர் பிறந்தவர்களில் பெரும்பாலோரிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் சிக்கலில் சிக்கிவிடுவார்கள், ” என்று அவர் மேலும் கூறினார்.