குஜராத்தின் அகமதாபாத் கங்காரியா பகுதியில் உள்ள லிட்டில் ஸ்டார் பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் CAA வுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகளை எழுதுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்த பட்டுள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் அராஜகம் :
“வாழ்த்துக்கள். இந்திய குடிமகனான நான், CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) கொண்டு வந்ததற்காக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன். நானும் எனது குடும்பத்தினரும் இதை ஆதரிக்கிறோம்.”
என்ற வாசகத்தை ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுத மாணவர்கள் அனைவரிடமும் அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டு அதில் மாணவர்கள் எழுதுமாறு ஆசிரியர்கள் காட்டாயப் படுத்தியுள்ளனர். மேலும் அதில் தங்கள் முழு வீட்டு விலாசத்தையும் எழுதுமாறு கூறியுள்ளனர்.பிறகு இந்த அஞ்சல் அட்டைகளை “பி.எம்.ஓ, சவுத் பிளாக் செயலக கட்டிடம், ரைசினா ஹில்ஸ், புது தில்லி” என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மாணவர்களை கட்டாயப் படுத்தியுள்ளனர் :
“என் மகள் ஆறாம் வகுப்பில் படிக்கிறாள். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவரது ஆசிரியர் முழு வகுப்பினரையும் CAA க்கு ஆதரவாக வாழ்த்துச் செய்திகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டதை நான் அறிந்தேன். எனது பிள்ளைக்கு இந்த பிரச்சினை என்னவென்றே தெரியாது. ஆனாலும் அவளை கட்டாயப்படுத்தி எழுத வைத்துள்ளனர். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார் பெற்றோர் ஒருவர்.
தேர்வு நடைபெறும் 10ம் வகுப்பு மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை :
5-9 படிக்கும் மாணவர்கள் ஒரு கணக்கென்றால் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தேர்வு நடைபெற்று வரும் வேளையிலும் கூட அவர்களையும் விடாமல் இந்த CAA ஆதரவு நாடகத்தில் சேர்த்துள்ளனர். “பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது உள் தேர்வுகள் (Internal Exam ) நடைபெற்று வருகிறது. அவர்களுக்கும் இந்த அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டு எழுதச் சொல்லப்பட்டுள்ளது.
மாணவர்கள் எதிர்ப்பு :
மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்த அஞ்சல் அட்டைகளை சமர்ப்பிக்காதவர்களுக்கு உள் தேர்வில் மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அவர்களின் குடியிருப்பு முகவரியைக் குறிப்பிடுவதன் நோக்கம் என்ன? அதுவும் பெற்றோரின் அனுமதியின்றி? ”என கேட்கிறார் பெற்றோர் ஒருவர்.
மண்டியிட்ட கல்லூரி நிர்வாகம்:
புதன்கிழமை பிற்பகலில், பெற்றோர்கள் பள்ளி உரிமையாளரின் அலுவலகத்திற்குச் சென்றனர். அதனை தொடர்ந்து பெற்றோரை சமாளிக்க முடியாமல் வேறு வழியின்றி பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் மன்னிப்பு கோரியது. கல்லூரி உரிமையாளரான என்னிடமே தெரிவிக்காமல் இவ்வாறு சில ஆசிரியர்கள் செய்து விட்டனர்.
மேலும் இது ஒரு “தவறான புரிதலால்” நடந்து விட்டது என்று கூறி மழுப்பியுள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர்., மேலும் அஞ்சல் அட்டைகள் பெற்றோரிடம் திரும்பி வழங்கப்பட்டது. அஞ்சல் அட்டைகளை பெற்று கொண்ட பெற்றோர் தங்கள் எதிர்ப்பின் அடையாளமாக பள்ளி உரிமையாளர் அலுவலகத்தில் வைத்தே அஞ்சல் அட்டைகளை கிழித்து எறிந்துள்ளனர்.
மாணவர்கள் மத்தியில் பிரிவினை :
மாணவர்களை சிறு வயதிலியேயே சங்கிகளாக மாற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் தான் இவை என சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது