Hindutva JNU Students

JNU : பேராசிரியர் படுக்கை அறை வரை சென்று மிரட்டிய குண்டர்கள்!

ஜே.என்.யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த தீரவிரவாத தாக்குதலின் போது மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு பேராசிரியர்கள், அவர்களது வீடுகள், குடும்பத்தினர் என குறிவைத்தது தாக்கபட்டுள்ளனர்.

பல்கலை பேராசிரியர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் இரவு 7.30-8 மணி அளவில் முக மூடி அணிந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நடைப்பயணத்தின் போது பயங்கரம்:

முன்னாள் ஜே.என்.யூ ஆசிரியர் சங்கத்தின் (ஜே.என்.யு.டி.ஏ) செயலாளர் பிக்ரமாதித்ய சவுத்ரியின் மனைவி குமாரி நீலு, இரவு 7.30 மணியளவில் நடைபயிற்சிக்காக தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது தூரத்தில் சுமார் 40 பேர் கொண்ட ஒரு கும்பல் குச்சிகள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் நடந்து வருவதை கண்டுள்ளார்.

“நான் உடனே திரும்பி என் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். திடீரென்று, அவர்கள் வேகத்தை கூட்டி என்னை நோக்கி ஓடி விரட்டி வந்தனர் , நானும் ஓடினேன், ” என்கிறார் குமாரி நீலு.

https://twitter.com/tweetsOfEl/status/1214436784727347200

கைவிரித்த போலீஸ் மற்றும் JNU நிர்வாகம்:

முதல் மாடியில் இருந்த அவரது கணவர் சவுத்ரி, தனது மனைவி அலறுவதைக் கேட்டு, தரை தளத்தில் கதவைத் திறக்க ஓடி வந்துள்ளார். “உடனடியாக கதவைத் திறந்து அவளை உள்ளே அழைத்து கொண்டேன்.. எங்கள் பகுதியில் உள்ள வீட்டு கதவுகளில் கம்புகளை கொண்டு அவர்கள் இடிப்பதை எங்களால் கேட்க முடிந்தது. நானும் என் மனைவியும் ஜே.என்.யூ அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பல அழைப்புகளைச் செய்தோம், ஆனால் யாரும் ஒன்றுமே செய்யவில்லை. எந்த பதிலும் இல்லை, ” என்றார் நீலுவின் கணவர் சவுத்ரி.

https://twitter.com/vg_inc/status/1214476354181201920

உருது ஆசிரியர் சிவ் பிரகாஷின் படுக்கை அறையில் புகுந்த பயங்கரவாதிகள் :

உருது ஆசிரியர் சிவ் பிரகாஷ், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தரை தளத்தில் உள்ள அவர்களது வீட்டில் இருந்துள்ளார், அப்போது முக மூடி அணிந்த பயங்கரவாதிகள் வீட்டின் உள்ளே நுழைந்து அவரை அச்சுறுத்தியுள்ளனர்.

“இரவு 8 மணியளவில்,‘ தர்வாசா கோலோ, வர்ணா டோட் டெங்கே’ (கதவைத் திற, அல்லது கதவை உடைத்து விடுவோம்) என்று அவர்கள் கத்துவதை கேட்டோம். பின்னர் அவர்கள் தாழ்ப்பாளை உடைத்து, உள்ளே வந்தார்கள். நாங்கள் பயந்து படுக்கையறைக்கு ஓடினோம்,அவர்களும் எங்களை விடாது பின்தொடர்ந்தார்கள். அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள் என்று நான் அவர்களிடம் கேட்டேன், அவர்கள், ‘சரண்டர் கிஜியே’ (நீங்கள் சரணடைய வேண்டும்)’ என்று சொன்னார்கள். அவர்கள் இடதுசாரிகளா அல்லது வலதுசாரிகளா என்று எனக்குத் தெரியாது, ஆனால் சம்பவத்தின் போது மிகவும் பயமாக இருந்தது, ”என்று உருது ஆசிரியர் சிவ் பிரகாஷ் கூறுகிறார்.

“உள்ளே ஒரு சங்கியும் இல்லை தானே?” – நாடக யுக்தி

சலசலப்பைக் கேட்டு, பிரகாஷில் வீட்டருகில் வசிக்கும் ஒரு பேராசிரியரின் இரண்டு மகன்கள் தங்கள் கதவைத் திறந்தனர்.“அவர்கள் எங்களைப் பார்த்ததும், அவர்கள் எங்கள் வீட்டை நோக்கி விரைந்தார்கள். நான் அவர்களைத் தள்ளி அவர்களைத் தடுக்க முயற்சித்தேன், ஆனால் அவர்களில் ஒருவர் உள்ளே நுழைந்து விட்டார். கையில் குச்சியுடன் அவர் ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்றார். பிறகு , ‘யஹான் கோய் சங்கி தோ நஹி ஹை?’ (உள்ளே ஒரு சங்கியும் இல்லை தானே?) என்று கேட்டுவிட்டு பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர் ” என்கிறார் ஆசிரியரின் மூத்த மகன்.

தாக்குதலில் ஈடுபட்டது ஏபிவிபி யினர் தான் என ஒப்புதல் வாக்குமூலம்

ABVP யின் தந்திரம் ?

தந்திரத்தை கையாண்டு அவர்கள் வீட்டினுள் சங்கி / ABVP நபர்கள் உள்ளனரா என்று கேட்டுள்ளனர். ஏனெனில் எங்களை பற்றி எல்லோருக்கும் (வலதுசாரிகள் இல்லை என) தெரியும். பிறகு நாங்கள் ஏன் ஏபிவிபி யினருக்கு வீட்டில் பதுங்க இடம் அளிக்க போகிறோம்? அல்லது இடதுசாரிகள் ஏன் எங்கள் வீட்டுக்கே வந்து இப்படி கேட்கப்போகிறார்கள்? இவர்கள் திட்டமிட்டே (பழி இடதுசாரிகள் மீது விழா வேண்டும் என்பதற்காகவே) இப்படி கேள்வி எழுப்பியுள்ளனர் என்கிறார் சவுத்ரி.

முகங்களை மூடி கொண்டு பாசிச பயங்கரவாத கும்பல் நடத்திய தீவிரவாத தாக்குதல்’ என்று கூறினாலும் அது மிகையாகாது.

Courtesy:IndianExpress