CAA வில் வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு மட்டும் தானே குடியுரிமை இல்லை என சொல்லப்பட்டுள்ளது, ஏன் இந்தியர்கள் அனைவரும் மத பாகுபாடு இல்லாமல் இணைந்து போராடுகின்றனர் ? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படுகின்றது. அதற்க்கான பதிலை பார்ப்போம்.
NRC- மூலம் அஸ்ஸாமில் இந்து, முஸ்லீம், கிருத்துவ சமூகத்தை சேர்ந்த 19 லட்சம் மக்கள் நாட்டற்ற அகதிகளாக அரசால் அறிவிக்கப்பட்டு அவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, பலர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளர்.
இந்த நிலையில் இந்த NRC-நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பு இந்தியர்களை கவலையடைய செய்துள்ளது. கல்வியில் பின் தங்கிய இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் சரியாக , முறையாக ஆவணங்களை வைத்து இருக்க வாய்ப்புகள் குறைவுதான்.
ஆவணங்கள் இல்லாமல் NRC- மூலம் நீங்கள் அகதிகளானால், CAA-மூலம் உங்களுக்கு மீண்டும் குடியுரிமையை தருகின்றோம் என்கின்ற அரசின் வாக்குறுதியை இந்திய மக்கள் நம்ப தயாராக இல்லை.
இந்துக்களாக இருந்தாலும், கிருத்துவராக இருந்தாலும், முஸ்லீம்களால இருந்தாலும், முதலில் அவர்கள் NRC-மூலம் தங்களின் குடியுரிமையை இழக்க தயாரில்லை.
சரியான ஆவணங்கள் இல்லை என்று சொல்லி NRC-மூலம் குடியுரிமையை இழந்த பிறகு இந்த அரசு CAA மூலம் நமக்கு குடியுரிமை வழங்கும் என இந்துக்களும், கிருத்துவர்களும், சீக்கியர்களும் நம்மவில்லை.
GST- யை அமல்படுத்தும் போது, மாநில அரசுக்கு வரி, மத்திய அரசிற்க்கு வரி என இரண்டு வரிகள் வேண்டாம், மொத்த வரியையும் மத்திய அரசே வாங்கிகொள்ளும், மாநில அரசிற்க்கான பங்கை மத்திய அரசு வழங்கும் என சொன்னார்கள். இன்று வரை ரூ.6000 கோடி வரியை தமிழக அரசிற்க்கு தரவில்லை.
மத்திய அரசின் இப்படி பட்ட நிகழ்வுகளை பார்க்கும் இந்தியர்கள் , ஒரு மாநில அரசிற்க்கு சட்ட படி வழங்க வேண்டிய வரி தொகையையே வழங்காத அரசு எப்படி நமக்கு குடியுரிமை வழங்கும் ?அதற்க்கு உத்திரவாதம் என்ன ? என்ற சந்தேகம் இந்துக்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள் என அனைவரிடமும் எழுந்துள்ளது
ஏனெனில் பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் NRC-யால் இன்றைக்கும் அஸ்ஸாமில் அகதிகளாக உள்ளனர்.
இதை பார்க்கும் அனைத்து இந்தியர்களும் அச்சப்படுகின்றனர்.
அஸ்ஸாமில் NRC கேட்ட ஆவணங்களின் பட்டியல் அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளது
http://www.nrcassam.nic.in/admin-documents.html
அஸ்ஸாமில் கேட்கப்பட்ட ஆவணங்கள் இந்தியாவில் உள்ள அனைவரிடமும் கேட்கப்பட்டால் அனைத்து மதத்தை சேர்ந்த பல கோடி இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை இழக்க நேரிடும். நான் கற்பனையாக சொல்லவில்லை, மேலே கொடுத்துள்ள அரசு இணையதளத்தில் உள்ள ஆவணங்களின் பட்டியலை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்.
இதனால் தான் ஒட்டு மொத்த இந்திய மக்களும் உலகையே திரும்பி பார்க்கும் வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பணமதிப்பு இழப்பின் போதே மக்கள் வங்கிகளுக்கு அலைந்து பாடாய் பட்டுவிட்டனர். இனி ஆவணங்களை தூக்கி கொண்டு எங்கும் அலைய இந்திய மக்கள் தயாரில்லை
அதனால் தான் ஆவணங்கள் மூலம் குடியுரிமையை நிருபிக்க சொல்லும் அரசிற்க்கு எதிராக ஒட்டு மொத்த இந்திய மக்களும் மதங்களை கடந்து இந்தியர்களாக போராடிவருகின்றனர்.
போராட்டங்களை முடிவிற்க்கு கொண்டுவர NRC-யை நாட்டின் பிற பகுதிகளில் அமல்படுத்தமாட்டோம் என அரசானை வெளியிடலாம் அல்லது NRC-விதிகளை மேலும் தளர்த்தலாம், அல்லது CAA-வில் விடுபட்ட இஸ்லாமியர்களையும் சேர்த்து சட்ட திருத்தம் கொண்டு வரலாம்
ஆக்கம் : S.சித்தீக் M.Tech