செத்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்- சதாஃப்
சமூக ஆர்வலரும், காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரகருமான சதாஃப் ஜாஃபர், கடந்த 19ந்தேதியன்று , லக்னோவில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது படம்பிடித்து கொண்டிருந்த அவரை போலீசார் அநியாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். ஆரம்பத்தில் ஜாஃபர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றே தெரியாமல் தவிக்கவிட்ட போலீஸ் 2நாட்கள் கழித்த பிறகே அவரது சகோதரிக்கு அவர் இருக்கும் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் மீரா நாயர் போன்ற திரைத்துறையினர் சமூக ஊடகத்தின் வாயிலாக கொடுத்த அழுத்தம் தான் காரணம்.
ஹஸ்ரத்கன்ஞ் சிறையில் சதாஃப் மீது அநியாயமாக 18 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சிறையிலடைத்த இரண்டாவது நாள், அவரை சிறையறைக்குள் வைத்து ஒரு ஆண் காவலர், அடித்து துன்புறுத்தியுள்ளதர்கான அடையாளங்களோடு இன்று அவரது வழக்குறைஞர்களை சந்தித்த சதாப் கூறியுள்ளதாவது. எனக்கு பெயில் கிடைத்தாலும் கிடைக்கவில்லையானாலும் நான் உள்ளிருந்தே போராட்டத்தை தொடருவேன். நான் செத்தே போனாலும் நீங்களும் அந்த மக்கள் விரோத சட்டத்தை மோடி அரசு திருப்பியெடுத்துக்கொள்ளாத வரை போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டேயிருங்கள் என தெரிவித்துள்ளார்.
ஆண் போலீசார் லத்திகளால் கைகளிலும் கால்களிலும் அடித்துள்ளனர். அவரது வயிற்றிலேயே எட்டி உதைத்துள்ளனர், அவருக்கு உடலினுள் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என அவரை சிறையில் சந்தித்த அவரது சகோதரி நஹீத் வர்மா தெரிவித்துள்ளார்.
பிபிசியன் டாக்குமென்ட்ரி படங்களில் நடித்து வரும் சதாப், காங்கிரஸ் பிரச்சாரகரும் ,சமூக போராளியுமாவார். லக்னோ ,பரிவர்த்தன் சவுக்கில் பேஸ்புக் லைவ் போட்டபடி அவர் போராடிய போதே அவரை போலீசார் வந்து இழுத்துச்சென்ற வீடியோக்கள் வைரலாயின.
சதாப் ஜாபருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வன்முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்யுமாறும், போலீசாரின் நடவடிக்கையின்மையை படம்பிடித்து கொண்டிருந்த ஒருவரை போலீசார் செய்துள்ளது கொடூர, அநியாய செயல். இவரை உடனே விடுவிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.